Thursday, June 25
Shadow

ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட “வட சென்னை “படத்தின் டீசர்

பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்க்கு பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டனியில் உருவாகியுள்ள படம் ‘வடசென்னை’. இதில் ஹீரோவாக தனுஷ் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர்,ராதா ரவி இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்திற்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கடேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கேங்ஸ்டர் த்ரில்லரான இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.

தனுஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு வட சென்னை படத்தின் டீசரை வெளியிட்டார்.தற்போது படத்தின் டீசர் ஒரே நாளில் யூடூபில் 3மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.மேலும் ட்ரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.