
வறுமையை எதிர்த்து சதுரங்கக் களத்தில் மகனின் கனவுக்காக போராடும் தாய் – கவனம் ஈர்க்கும் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்!
சதுரங்கப் பலகையில் நகரும் காய்களை விட, வாழ்க்கையில் நகர வேண்டிய காய்கள் அதிகம்…
ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், சதுரங்கத்தில் சாதித்து ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக வேண்டும் என்ற கனவு காண்கிறான். அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காக, வறுமை, சமூகத் தடைகள் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு போராடும் ஒரு தாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’.
V6 Film Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிச்செழியன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
செஸ் விளையாட்டை வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்காமல், அதன் வழியாக ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் போராட்டத்தையும், சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் கனவுகளையும் பதிவு செய்யும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

மகனின் கனவே… தாயின் வாழ்க்கையின் இலக்கு!
வாழ்வாதாரத்திற்காக தூய்மை பணியாளராக பணியாற்றும் ஒரு தாய். அன்றாட வாழ்க்கையின் சிரமங்களுக்கு இடையிலும், தனது மகன் சதுரங்கத்தில் சாதித்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக வேண்டும் என்ற கனவை மனதில் சுமந்து வாழ்கிறார்.
வசதிகள் இல்லாத சூழல், பொருளாதார நெருக்கடி, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் என பல்வேறு தடைகள் அந்தக் குடும்பத்தின் முன்னால் நிற்கின்றன. ஆனால், தாயின் நம்பிக்கையும், மகனின் விடாமுயற்சியும் அவர்களை அந்தத் தடைகளைத் தாண்டிப் பயணிக்க வைக்கிறது.
ஒரு சிறுவனின் செஸ் கனவை நனவாக்க ஒரு தாய் எவ்வளவு தூரம் போராட வேண்டியிருக்கிறது? அந்தப் போராட்டத்தில் அவள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? என்பதே இப்படத்தின் கதையின் மையமாக அமைந்துள்ளது.
வழக்கமான வெற்றிக் கதைகளில் இருந்து மாறுபட்டு, சாதாரண மக்களின் வாழ்க்கையில் இருக்கும் அசாதாரண கனவுகளைப் பதிவு செய்யும் படமாக ‘தி கிராண்ட் மாஸ்டர்’ உருவாகியுள்ளது.
முதல் படத்திலேயே சமூக அக்கறையுடன் களமிறங்கும் வெற்றிச்செழியன்
முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட வெற்றிச்செழியன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தனது முதல் படத்திலேயே சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை, அவர்களின் அடக்கி வைக்கப்பட்ட ஆசைகள் மற்றும் முன்னேற வேண்டும் என்ற போராட்டம் ஆகியவற்றை மையப்படுத்தி கதையை உருவாக்கியுள்ளார்.
சதுரங்கத்தில் வெற்றி பெறுவதற்கு சரியான நகர்வு அவசியம். அதேபோல், வாழ்க்கையிலும் ஒவ்வொரு நகர்வும் மிக முக்கியம் என்பதை கதையின் வழியாகச் சொல்லும் விதத்தில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கதையைப் பேசும் வகையில் அமைந்துள்ள ஃபர்ஸ்ட் லுக்
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் படத்தின் மையக்கருத்தை அழுத்தமாகப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சதுரங்கக் கட்டங்கள் நிறைந்த பின்னணியில், தாயும் மகனும் வெவ்வேறு உணர்வுகளுடன் இடம்பெற்றுள்ளனர். கையில் செஸ் காயை ஏந்தியபடி சிறுவன் எதிர்காலத்தை நோக்கிய நம்பிக்கையுடன் மேல்நோக்கிப் பார்க்க, அவனது கனவின் பின்னால் இருக்கும் போராட்டத்தை உணர்த்தும் வகையில் தாய் கவலையும் வலியும் கலந்த பார்வையுடன் காட்சியளிக்கிறார்.
அவர்களைச் சுற்றி நகரும் சதுரங்கக் காய்களும், போஸ்டரின் கீழ்ப்பகுதியில் தாய் தனது மகனுடன் சைக்கிளில் பயணிக்கும் காட்சியும், கனவை நோக்கிய பயணத்தில் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை ஒரே பார்வையில் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன.
நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவாகும் ‘தி கிராண்ட் மாஸ்டர்’
இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு அர்ஜுன் ரவி – ஞானசேகர் ஆர்.எஸ். இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். தினேஷ் ஆண்டனி இசையமைக்கிறார். ரஞ்சீத் சி.கே. படத்தொகுப்பையும், ராகவன் சஞ்சீவி கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு
‘தி கிராண்ட் மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், மதுரை, தடா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு தாயின் தியாகம்… ஒரு சிறுவனின் கனவு… அந்தக் கனவைத் தாண்டி நிற்கும் சமூகத் தடைகள்… என உணர்வுகளையும் சமூக அக்கறையையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A Mother’s Struggle, a Son’s Chess Dream: ‘The Grand Master’ First Look Creates Buzz
When life becomes a game of survival, every move matters…
What happens when a young boy dreams of becoming a Chess Grandmaster, but his family has to battle poverty and social barriers to keep that dream alive? This powerful premise forms the heart of ‘The Grand Master’, an upcoming Tamil film that explores the emotional journey of a mother who stands firmly behind her son’s ambition.
Produced by Velayutham under the banner of V6 Film Pvt Ltd, the film is written and directed by debutant filmmaker Vetrichchezhiyan. The film’s first look has now been unveiled and is attracting attention among audiences and members of the film industry.
Rather than following a conventional commercial template, ‘The Grand Master’ focuses on the lives of people from the marginalised sections of society and the struggles they face while pursuing their dreams.
A Mother Who Turns Her Son’s Dream Into Her Mission
At the centre of the story is a mother who works as a sanitation worker to support her family. Despite the hardships of everyday life, she dreams of seeing her son excel in chess and achieve the prestigious title of Grandmaster.
With financial difficulties, social inequalities and numerous obstacles standing in their way, the mother refuses to give up. Her determination becomes the driving force behind her son’s journey.
The film explores how far a mother can go to transform her child’s dream into reality and the challenges the family encounters along the way.
Through the world of chess, the film attempts to draw a parallel with life itself — where every decision, every move and every opportunity can change the course of the game.
Vetrichchezhiyan Makes His Directorial Debut
Vetrichchezhiyan, who has previously worked as an assistant director with acclaimed filmmakers H. Vinoth, Seenu Ramasamy and S. P. Jananathan, makes his directorial debut with ‘The Grand Master’.
The filmmaker has chosen to begin his journey with a socially relevant story that highlights the aspirations, struggles and resilience of people from the marginalised sections of society.
First Look Reflects the Film’s Emotional Core
The first-look poster offers a glimpse into the emotional world of the film.
Set against a backdrop filled with chess squares, the poster features the mother and son in contrasting emotional states. The young boy is seen holding a chess piece and looking upwards with hope and determination, while the mother’s expression reflects pain, concern and the weight of the struggles surrounding their lives.
Moving chess pieces surround the characters, while the lower portion of the poster features the mother travelling with her son on a bicycle. Together, these elements symbolically capture the family’s journey, their hardships and their determination to move towards a better future.
A Promising Cast and Technical Team
The film features Aparnathi, Lingesh, Suresh Menon, Ashwin, Tamilarasi, Anbu, Mano Madurai and Vichithran, among others, in important roles.
Arjun Ravi and Gnanasekar R.S. are handling the cinematography, while Dinesh Antony is composing the music. Ranjith C.K. is responsible for the editing, and Raghavan Sanjeevi is handling the art direction.
Post-Production Work Nears Completion
The film has been shot across several locations, including Dindigul, Madurai, Tada and Chennai.
With the shooting completed and post-production work nearing completion, the team is currently involved in the final stages of the project.
The film’s music launch and trailer announcements are expected to be unveiled soon.
With a mother’s sacrifice, a child’s ambition and the fight against social and economic barriers at its core, ‘The Grand Master’ promises to present a different and socially conscious perspective through the world of chess.
