Tuesday, April 16
Shadow

நடிகர் மோகன் ராமன் பிறந்த தின பதிவு

மோகன் ராமன் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகராவார். மேலாண்மைப் பயிற்றுனராகவும் பணி புரிந்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் துணை மற்றும் எதிர்மறை வேடங்களில் சிறப்பாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். குறிப்பாக மர்மதேசம் (விடாது கறுப்பு), சிதம்பர ரகசியம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களால் பெரிதும் அறியப்பட்டவர். வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான வி. பி. ராமனின் மூத்த மகனாவார். தற்போதைய தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி. எஸ். ராமனின் அண்ணன் ஆவார்.
இவர் நடித்த திரைப்படங்கள்:  இதயம், மகாநதி, ஆனஸ்ட் ராஜ், ஒன்ஸ் மோர், ஆஹா, அரிச்சந்திரா, படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தேவன், அன்பே அன்பே, மாஜிக் மாஜிக் 3டி, பெரியார், நான் அவனில்லை, குசேலன், டிஎன் 07 ஏஎல் 4777, குரு என் ஆளு, இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம், பயணம், சபாஷ் சரியானப் போட்டி, ராமானுஜன், சென்னை எக்ஸ்பிரஸ்