Tuesday, November 17
Shadow

டோரதி’ படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது – நடிகர் ரிஷிகாந்த்

‘டோரதி’ படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது – நடிகர் ரிஷிகாந்த்

சென்னை:

நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாரத்தி’ திரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விழாவில் பேசிய அவர், படக்குழுவினருடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
தனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த ரிஷிகாந்த், ‘டாரத்தி’ படத்தின் வாய்ப்பை வழங்கிய இயக்குநர் காத்தியன் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். சினிமா துறைக்குள் வர வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர்களில் காத்தியனும் ஒருவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
படத்திற்கான தயாரிப்புப் பணிகளின்போது மதுரையில் தங்கி, அங்குள்ள வாழ்க்கை முறையைப் புரிந்துகொண்டு கதாபாத்திரத்திற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டதாகவும் ரிஷிகாந்த் தெரிவித்தார். எதிர்பார்த்தபடி பயிற்சிகள் நடைபெறாத சூழ்நிலையிலும், இயக்குநர் காத்தியன் இரு நடிகர்களையும் ஸ்கிரிப்ட் வாசிப்பு மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் கதாபாத்திரங்களுக்கு தயார்படுத்தியதாகக் கூறினார்.
“காத்தியன் ஒரு சிறந்த பயிற்சியாளர். நேரடியாக எதையும் சொல்லாமல், கதாபாத்திரத்தை நாங்களே புரிந்துகொண்டு நடிக்கும் வகையில் எங்களைத் தயார்படுத்தினார். படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அவருடைய அணுகுமுறையின் முழுமையான அர்த்தம் புரிந்தது,” என்று ரிஷிகாந்த் கூறினார்.
மேலும், படத்தின் ஒலி வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் முக்கிய பங்காற்றிய திலு சார் மற்றும் சவுண்ட் குழுவினரையும் அவர் பாராட்டினார். குறிப்பாக, சவுண்ட் பணியில் புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் அட்ட்மாஸ்பெரிக் சவுண்ட்ஸ் குறித்து ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்ட சேட்டா ரவீன் அவர்களின் அர்ப்பணிப்பை ரிஷிகாந்த் பாராட்டினார்.
“சேட்டா ரவீன் போன்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஒருவரை பார்க்க முடியாது. சவுண்ட் தொடர்பான பல புதிய விஷயங்களை அவருடன் பேசிக் கற்றுக்கொண்டேன். அவருடன் மீண்டும் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன்,” என்றார்.
படத்தின் கதையை முன்கூட்டியே வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பாதிக்க விரும்பவில்லை எனக் கூறிய ரிஷிகாந்த், எந்தவித ஸ்பாய்லர்களையும் தெரிந்துகொள்ளாமல் ‘டாரத்தி’ படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரிக்குமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
‘டாரத்தி’ செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Actor Rishikanth Opens Up About His Memorable Experience Working on ‘Dorothy’

Chennai: Actor Rishikanth, who stars in the upcoming film ‘Dorothy’, spoke about his experience of working on the film and expressed his gratitude to the entire team at a recent event. The film is slated to release on September 25.

Rishikanth thanked the audience and the film’s team for their continued support and expressed special gratitude to director Kathiyan for giving him the opportunity to be part of the project. He also recalled how Kathiyan’s journey in cinema had inspired him and strengthened his own belief that he could become part of the film industry.

Speaking about his preparation for the film, Rishikanth said that he spent time in Madurai to understand the environment and prepare himself for his character. He added that although the initial training plans did not go exactly as expected, director Kathiyan worked closely with the actors through script readings, discussions and various sessions to help them understand their characters.

“Kathiyan is an excellent trainer. Instead of directly explaining everything, he made us understand the characters ourselves and helped us process the emotions and situations naturally. Only after completing the film did I realise how effectively he had prepared both of us as actors,” Rishikanth said.

The actor also expressed his appreciation for the technical team, particularly those involved in the film’s sound work. He praised Chetta Ravin for his passion and dedication towards sound design and for sharing his knowledge about new technologies and atmospheric sounds.

“It is rare to see someone as passionate about sound as Chetta Ravin. I had the opportunity to sit with him and discuss many aspects of sound and new technologies. He is a genius, and I would love to work with him again,” Rishikanth added.

Rishikanth also mentioned his fondness for Dilu Sir, recalling his interactions with him during the making of the film. He said that seeing him at the event after the completion of the shoot made him very happy and thanked him for his support.

Without revealing details about the story, Rishikanth requested audiences to watch ‘Dorothy’ in theatres without looking for spoilers beforehand.

‘Dorothy’ is scheduled to release in theatres on September 25.