Sunday, October 11
Shadow

Tag: Website SEO Keywords Dorothy movie

‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்

‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்

Latest News, Top Highlights
‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த் வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார் நடிகர் ரிஷிகாந்த். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் அவர் ஏற்றுள்ள ‘கார்த்தி’ கதாபாத்திரத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ரிஷிகாந்த் கூறும்போது, “ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் ஆதரவும் நான் எதிர்பார்க்காத ஒரு பெரிய ஆசீர்வாதம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும்தான் நாங்கள் அனைவரும் இணைந்து இப்படத...
‘டோரதி’ எனக்கு கிடைத்த பொக்கிஷம் – சனந்த்

‘டோரதி’ எனக்கு கிடைத்த பொக்கிஷம் – சனந்த்

Latest News, Top Highlights
‘டோரதி’ எனக்கு கிடைத்த பொக்கிஷம் – சனந்த் பல ஆண்டுகளாகத் தேடிய கதாபாத்திரம்… ரசிகர்களின் பாராட்டால் நெகிழும் நடிகர்! ஒரு நடிகருக்கு திறமை மட்டும் இருந்தால் போதாது. அந்தத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரமும் அமைய வேண்டும். அப்படியொரு கதாபாத்திரத்திற்காக பல ஆண்டுகளாகக் காத்திருந்த நடிகர் சனந்த்துக்கு, ‘டோரதி’ திரைப்படம் அந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சனந்த்தின் நடிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லரில் ஆக்ரோஷமான உடல்மொழியுடன் அவர் தோன்றியதால், ஒரு முரட்டுத்தனமான கிராமத்து இளைஞர் கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் வெளியான பிறகு சுப்பு கதாபாத்திரத்தின் பல்வேறு உணர்வுகளை சனந்த் கையாண்ட விதம் அந்த எதிர்பார்ப்பை முற்றிலு...
டோரதி’ படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது – நடிகர் ரிஷிகாந்த்

டோரதி’ படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது – நடிகர் ரிஷிகாந்த்

Latest News, Top Highlights
‘டோரதி’ படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது – நடிகர் ரிஷிகாந்த் சென்னை: நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாரத்தி’ திரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விழாவில் பேசிய அவர், படக்குழுவினருடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த ரிஷிகாந்த், ‘டாரத்தி’ படத்தின் வாய்ப்பை வழங்கிய இயக்குநர் காத்தியன் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். சினிமா துறைக்குள் வர வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர்களில் காத்தியனும் ஒருவர் என்றும் அவர் குறிப்பிட்டார். படத்திற்கான தயாரிப்புப் பணிகளின்போது மதுரையில் தங்கி, அங்குள்ள வாழ்க்கை முறையைப் புரிந்துகொண்டு கதாபாத்திரத்திற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டதாகவும் ரிஷிகாந்த் தெரிவித்தார். எதிர்பார்த்தபடி பயிற்சிகள் நடைப...
“‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… மாற்றத்தை உருவாக்கும் படைப்பு!” – நடிகை கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை

“‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… மாற்றத்தை உருவாக்கும் படைப்பு!” – நடிகை கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை

Latest News, Top Highlights
“‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… மாற்றத்தை உருவாக்கும் படைப்பு!” – நடிகை கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை சென்னை: ‘டோரதி’ திரைப்பட விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: “‘டோரதி’ படத்தின் கதையின் சுருக்கத்தை முதலில் கார்த்திக் சார் என்னிடம் பகிர்ந்தபோது, இப்படியொரு படத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்டார். கதையைப் படித்தவுடனேயே, ‘கண்டிப்பாக இந்தப் படத்தைச் செய்கிறேன்’ என்று கூறிவிட்டேன். ஏனெனில் இப்படிப்பட்ட படங்களில் ஒரு பகுதியாக இருப்பதே நமக்குப் பெருமை. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருந்தது. ஒரு நடிகராக நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். ‘டோரதி’ என்ற பெயருக்கே ‘கடவுளின் பரிசு’ என்ற அர்த்தம் உள்ளது. அந்த அர்த்தத்திற்கு ஏற்ற வகையில் இந்தப் படமும் அமையும் என்று நம்புகிறேன். ...
“கார்த்திக் சுப்புராஜின் சிந்தனை எனது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது!” – ‘டோரதி’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சௌந்தரராஜா

“கார்த்திக் சுப்புராஜின் சிந்தனை எனது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது!” – ‘டோரதி’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சௌந்தரராஜா

Latest News, Top Highlights
“கார்த்திக் சுப்புராஜின் சிந்தனை எனது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது!” – ‘டோரதி’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சௌந்தரராஜா ‘டோரதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சௌந்தரராஜா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் படக்குழுவினருடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். கார்த்திக் சுப்புராஜ் குறித்து பேசிய சௌந்தரராஜா, “கார்த்திக் சுப்புராஜை 2008ஆம் ஆண்டு முதலே எனக்குத் தெரியும். அவரைப் பற்றி பேசுவதற்கு எனக்கு சரியான மேடை அமையவில்லை. ‘டோரதி’ படத்தின் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கார்த்திக் உருவாக்கும் திரைப்படங்களில் படம் வெளியாகும் வரை அதன் கதையையோ, முக்கியமான விஷயங்களையோ வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார். படம் பார்த்த பிறகும் சில நாட்கள் அந்த அனுபவம் ரசிகர்களிடம் புதிதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக...