
கங்கனா ரனோட் இந்தி, தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் நடித்த ‘குயீன்’ திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியது.

இந்நிலையில், மெண்டல் ஹை க்யா படத்தின் ஃபர்ஸ்ட் லூக்கில் நடிகை கங்கனா ரனாவத் பாத்டப்பில் நிர்வாணமாக கையில் கத்தியுடன் இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகினது.
தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், சமீபத்தில் ஜான்சி ராணி கதையாக உருவான மணிகர்ணிகா படத்தில் ஜான்சி ராணி வேடம் ஏற்று நடித்ததுடன் அந்த படத்தின் இயக்குனர் பொறுப்பும் ஏற்றார்.

இதனால் ஏற்கனவே அந்த படத்தை இயக்கி வந்த கிரிஷுடன் மோதல் ஏற்பட்டது. அந்த பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்ததையடுத்து தனது அடுத்த படங்களில் கவனத்தை திருப்பி இருக்கிறார்.

கங்கனா ரனாவத் முதலில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனை காதலித்தார். அவருடன் டேட்டிங்கிலும் ஈடுபட்டிருந்தார். ஒருமுறை தனது காதலை கங்கனா வெளிப்படையாக அறிவித்த போது அதை ஹிருத்திக் ஏற்க மறுத்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே பெரிய சர்ச்சை வெடித்தது.