சத்யப்பிரியா இந்திய தமிழ் திரையுலக திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடரின் நடிகை ஆவார். இவர் தமிழ் திரையுலகில் ஏறத்தாழ 300 திரைப்படங்களில் நடித்துள்ளார், இதில் 50 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் 1975-ம் ஆண்டு மஞ்சள் முகமே திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.
இவர் 1975ல் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பாட்ஷா, ரோஜா, புதிய பாதை, சொல்ல மறந்த கதை, சின்ன கௌண்டர் போன்ற வெற்றித்திரைப்படங்களில் பல நடித்துள்ளார்.
இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் நடித்த கோலங்கள் தொடரானது சன் தொலைக்காட்சியில் 2003-2009 ஆண்டுகளில் பிரபலமானவை ஆகும். பின்னர் சன், விஜய் தொலைக்காட்சிகளிலும், ஆசியாநெட், அம்ரிதா போன்ற மலையாள தொலைக்காட்சிகளிலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.
இவர் நடித்த படங்கள்: லேசா லேசா, பிரெண்ட்ஸ், நீ வருவாய் என, உன்னை தேடி, நெஞ்சினிலே, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், கொண்டாட்டம், சூர்யவம்சம், முத்து குளிக்க வாரீயளா, பாட்ஷா, பகடை பன்னிரண்டு

Related