Friday, April 17
Shadow

நடிகை சுனைனா பிறந்த தின பதிவு

சுனைனா  இவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சுனைனா ஏப்ரல் 17, 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்தார். இவர் நாக்பூர் மவுண்ட் கார்மல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், படித்துவந்தார். தற்போது வர்த்தக இளங்கலை படிப்பு படிப்பதற்கு ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
செப்டம்பர் 26, 2008 ஆம் ஆண்டு சுனைனா நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாக்கு முக்கா என்ற கானாப் பாடல் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
இவர் நடித்த படங்கள்: சில்லு கருப்பட்டி, காளி, தொண்டன், கவலை வேண்டாம், நம்பியார், வன்மம், சமர், நீர்ப்பறவை, வம்சம், யாதுமாகி, மாசிலாமணி, காதலில் விழுந்தேன்