
சாதனைப் படத்தைத் தாண்டி கமர்ஷியல் வெற்றியை நோக்கி… புதிய பிரம்மாண்டத்துடன் களமிறங்கும் ‘3.6.9’ இயக்குநர் ஷிவ் மாதவ்
“உலக சாதனைக்காக மட்டும் படம் எடுக்க விரும்பவில்லை… ரசிகர்களையும் திரையரங்கையும் மையமாகக் கொண்ட சினிமாவை உருவாக்கப் போகிறேன்” – இயக்குநர் ஷிவ் மாதவ்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறார். ஆனால், அந்தப் பாதையைத் தொடங்கிய முதல் படத்திலேயே வித்தியாசமான முயற்சியையும் உலக சாதனையையும் பதிவு செய்தவர் என்ற அடையாளத்துடன் களமிறங்கியவர் இயக்குநர் ஷிவ் மாதவ். 2023-ம் ஆண்டு வெளியான அவரது ‘3.6.9’ திரைப்படம், அதன் உருவாக்க முறையால் கவனம் பெற்றது.
குறிப்பிட்ட கால அளவில் படப்பிடிப்பை நிறைவு செய்தது உள்ளிட்ட சாதனைகளுடன் உருவான ‘3.6.9’, தமிழ்நாட்டிலிருந்து உலக சாதனையை நோக்கி பயணித்த குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஒன்றாக அமைந்தது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. எனினும், போதிய விளம்பரமும், சரியான அளவிலான சந்தைப்படுத்தலும் இல்லாததால், படம் சென்றடைய வேண்டிய அளவுக்கு ரசிகர்களை சென்றடையவில்லை என்பது இயக்குநர் ஷிவ் மாதவ்வின் வருத்தமாக இருக்கிறது.
அந்த அனுபவத்தை ஒரு பின்னடைவாக பார்க்காமல், அடுத்த கட்டத்திற்கான பாடமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் அவர்.
சாதனையிலிருந்து வணிக சினிமாவுக்கு…
‘3.6.9’ படத்திற்குப் பிறகு, இதேபோன்று வித்தியாசமான சாதனை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பல தயாரிப்பாளர்கள் தன்னை அணுகியதாகக் கூறும் ஷிவ் மாதவ், மீண்டும் மீண்டும் சாதனைப் படங்களை உருவாக்குவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்கிறார்.
சினிமா என்பது படைப்பாற்றலுடன் மட்டுமல்லாமல், வணிக ரீதியான வெற்றியையும் கொண்டிருக்க வேண்டிய துறை என்ற புரிதலுடன், தனது அடுத்த பயணத்தை மாற்றியமைத்துள்ளார்.
“சாதனை செய்த படம் என்ற அடையாளம் மட்டும் எனக்கு போதாது. ஒரு படம் அதிகமான ரசிகர்களை சென்றடைய வேண்டும். திரையரங்கில் மக்கள் கொண்டாட வேண்டும். சினிமாவின் வணிக வெற்றியும் முக்கியம். அதனால், இந்த முறை சாதனையை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல், முழுமையான கமர்ஷியல் சினிமாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணிக்கிறேன்” என்கிறார் ஷிவ் மாதவ்.
ஹாலிவுட் பாணியில் அறிவியல் – ஃபேண்டஸி – சூப்பர் ஹீரோ கதை
இயக்குநரின் அடுத்த படைப்பு, அவரது முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரம்மாண்டமான முயற்சியாக உருவாகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்களை இணைத்து உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இப்படம், அறிவியல், ஃபேண்டஸி மற்றும் சூப்பர் ஹீரோ அம்சங்களை இணைத்த ஒரு முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகிறது.
குறிப்பாக 1980-களின் பின்னணியில் கதை நகரும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அறிவியல் சார்ந்த அம்சங்களுடன் ஃபேண்டஸியையும் இணைத்து, ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாகவுள்ளது.
“எனக்குள் நீண்ட காலமாக இருந்த ஒரு சினிமாவை இப்போது தான் உருவாக்குவதற்கான சூழல் கிடைத்திருக்கிறது. உலக அளவிலான படங்களின் மேக்கிங்கில் இருக்கும் பிரம்மாண்டத்தை நம்முடைய சினிமாவிலும் கொண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்காக செட்கள், மினியேச்சர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்துகிறோம். வழக்கமான கமர்ஷியல் அம்சங்களுடன் அறிவியல் மற்றும் ஃபேண்டஸியை இணைத்து, ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகத்தை உருவாக்கப் போகிறோம்” என்கிறார்.
VFX, AI என தொழில்நுட்பத்தில் புதிய கற்றல்
‘3.6.9’ படத்தின் அனுபவத்திற்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக, திரைப்படத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களை தொடர்ந்து கற்றுக்கொண்டதாகவும் ஷிவ் மாதவ் தெரிவிக்கிறார்.
VFX, AI உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் திரைப்பட உருவாக்கத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்துள்ள அவர், அந்த அனுபவங்களை தனது புதிய படைப்பில் பயன்படுத்தத் தயாராகியுள்ளார்.
அதே நேரத்தில், அனைத்தையும் கணினி கிராபிக்ஸ் மூலமாக மட்டுமே உருவாக்காமல், நேரடியாக பிரம்மாண்டமான செட்கள் அமைத்து, மினியேச்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சிகளை உருவாக்கும் முயற்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
“நிறைய விஷயங்களை VFX மூலம் செய்யலாம். ஆனால் எல்லாவற்றையும் VFX-ல் செய்துவிடக் கூடாது. நேரடியாக உருவாக்கக்கூடிய விஷயங்களை நேரடியாக உருவாக்க வேண்டும். அதற்காக மினியேச்சர், செட்கள் என பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். ஹாலிவுட் தரத்தில் மேக்கிங்கை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” என்கிறார் இயக்குநர்.
அக்டோபரில் தொடங்கும் படப்பிடிப்பு
தற்போது இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பிரம்மாண்டமான காட்சிகளுக்குத் தேவையான மினியேச்சர் பணிகளும் தொடங்கியுள்ளன.
படத்திற்குத் தேவையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முழுப் படப்பிடிப்பையும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பாக்யராஜின் இழப்பு… என்றும் மறக்க முடியாத ஊக்கம்
ஷிவ் மாதவ்வின் திரைப்பயணத்தில் மறைந்த இயக்குநரும் நடிகருமான பாக்யராஜுக்கு முக்கியமான இடம் உண்டு. அவரது முதல் படமான ‘3.6.9’-ல் பாக்யராஜ் நடித்திருந்தார்.
அந்தப் படத்தின் உருவாக்கத்தில் ஏற்பட்ட சிரமங்களையும், ஷிவ் மாதவ்வின் முயற்சிகளையும் நெருக்கமாக அறிந்திருந்த பாக்யராஜ், தொடர்ந்து அவருக்கு ஊக்கமளித்து வந்ததாக இயக்குநர் நினைவுகூர்கிறார்.
“சில நேரங்களில் நான் சோர்ந்து போகும்போது, ‘ஷிவா, உன்கிட்ட பெரிய பொட்டன்ஷியல் இருக்கு. நம்பிக்கையோடு ஓடு. உன்னால் முடியும்’ என்று பாக்யராஜ் சார் சொல்லி ஊக்கப்படுத்துவார். பல நேரங்களில் வீட்டுக்கு அழைத்து பேசுவார். ஒரு குருவாக என்னை தொடர்ந்து வழிநடத்தினார்.
இந்தப் படத்திலும் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அவர் இப்போது நம்முடன் இல்லை என்பது மிகப்பெரிய வேதனை. அவர் இறந்த தினத்தன்று அவரது கால்மாட்டிலேயே நின்றுகொண்டிருந்தேன். என்னுடைய முதல் படம் எவ்வளவு கஷ்டப்பட்டு உருவானது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அந்தப் படத்தைப் பற்றி எனக்காக பல இடங்களில் பேசியிருக்கிறார். இப்போது இந்தப் புதிய பயணத்திலும் அவருடைய ஆசீர்வாதம் என்னுடன் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஷிவ் மாதவ்.
“இந்த முறை சாதனை மட்டும் இல்லை… ரசிகர்களுக்கான சினிமா!”
முதல் படத்தில் சாதனையை முன்னிறுத்திய இயக்குநர், அடுத்த படத்தில் சாதனையையும் தாண்டி ரசிகர்களுக்கான மிகப்பெரிய கமர்ஷியல் அனுபவத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்குகிறார்.
உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னும் தன்னிடம் இருப்பதாகக் கூறும் ஷிவ் மாதவ், இந்த முறை அந்த முயற்சி படத்தின் மேக்கிங் மற்றும் தொழில்நுட்பத் தரத்திலும் வெளிப்பட வேண்டும் என விரும்புகிறார்.
‘3.6.9’ மூலம் வித்தியாசமான முயற்சிக்காக அறியப்பட்ட ஷிவ் மாதவ், தற்போது அறிவியல், ஃபேண்டஸி மற்றும் சூப்பர் ஹீரோ அம்சங்களுடன் உருவாகும் தனது புதிய படத்தின் மூலம் வணிக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறார்.
மூன்று ஆண்டுகளாக கற்றுக்கொண்ட தொழில்நுட்ப அனுபவங்கள், முதல் படத்தின் வெற்றி–தோல்விகள் கற்றுக்கொடுத்த பாடங்கள், பாக்யராஜ் அளித்த ஊக்கம் என அனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டு உருவாகும் இந்தப் புதிய படம், தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக அமையுமா என்ற எதிர்பார்ப்பை தற்போதே ஏற்படுத்தியுள்ளது.

Beyond World Records, Towards Commercial Success: ‘3.6.9’ Director Shiv Madhav Set for a Grand New Cinematic Journey
“I don’t want to make films only for records… I want to create cinema that connects with audiences and succeeds commercially,” says Director Shiv Madhav
Director Shiv Madhav, who made his debut with the ambitious science-fiction film 3.6.9 in 2023, is now preparing for his next major cinematic venture. Known for attempting unconventional filmmaking methods, Shiv Madhav is set to explore a much larger canvas with a commercial science-fiction fantasy superhero film featuring actors from Tamil, Telugu, Malayalam and Kannada cinema.
His debut film 3.6.9 attracted attention for its unique production feat. The film was created as a record-setting cinematic experiment, including the achievement of completing the shoot within 81 minutes. It also became one of the notable films from Tamil Nadu to earn two world records.
Released across more than 100 theatres in Tamil Nadu and Karnataka, 3.6.9 received appreciation from sections of the audience and critics. However, the film did not reach the wider audience that the director had hoped for, largely due to limited promotional and marketing activities.
Rather than allowing that experience to discourage him, Shiv Madhav has chosen to use it as a stepping stone for his next venture.
From Record-Breaking Experiments to Commercial Cinema
Following 3.6.9, several producers approached Shiv Madhav with offers to create films based on similar record-breaking concepts. However, the director did not want to repeatedly make films solely to establish records.
According to him, cinema needs to balance creativity with commercial viability, and his next project will focus on reaching a much wider audience.
“After 3.6.9, I initially thought that the recognition for the two world records would take me to the next level. But many of the things I expected did not happen. It felt as though my dreams had been shattered.
“Over the past three years, several producers approached me asking me to attempt another record-breaking film. But I did not want to become identified only as someone who makes record films. I realised that cinema is also a business. So, this time, I decided to move towards commercial cinema while retaining my passion for innovation,” says Shiv Madhav.
A Grand Science-Fiction Fantasy Superhero Film
Shiv Madhav’s upcoming project is said to be considerably larger in scale and ambition.
The film will combine science fiction, fantasy and superhero elements within a commercial entertainer. The story is set against the backdrop of the 1980s and is being designed to offer a fresh cinematic experience to audiences.
The director is also planning to bring together prominent actors and technicians from Tamil, Telugu, Malayalam and Kannada cinema.
“I have been waiting for an opportunity to make the kind of cinema I have always imagined. This film will have all the essential elements of a commercial entertainer, but at the same time, it will have a strong scientific and fantasy foundation.
“The story is set in the 1980s and revolves around a superhero concept that blends science and fantasy. I want to create something visually ambitious and entertaining for audiences,” he explains.
Hollywood-Inspired Making with Sets and Miniatures
One of the major highlights of the new film will be its production design and technical execution.
Instead of relying entirely on computer-generated imagery, the team plans to use large-scale sets and miniature work to create several key sequences. The director aims to bring a Hollywood-inspired approach to the film’s visual presentation.
“I don’t want to depend entirely on CGI. Wherever something can be created physically, we want to create it practically. We are working with large sets and miniatures to achieve the scale we have in mind.
“My intention is to bring a Hollywood-level approach to the making while retaining the commercial elements that Indian audiences enjoy,” says Shiv Madhav.
Three Years of Learning and Preparing
The director has spent the last three years studying and experimenting with various advancements in filmmaking technology.
From VFX and AI to newer filmmaking techniques, Shiv Madhav says he has used this period to understand how emerging technologies can be incorporated into mainstream cinema.
“I have spent the last three years learning what can be achieved technically, from VFX to AI and other new filmmaking technologies. Now I feel ready to return to the sets with all that experience.
“The actors and technicians being brought on board are also people with significant experience. The pre-production work is currently underway, and miniature work has already begun,” he says.
Shooting to Begin in October
The pre-production work on the film is currently progressing at full pace, with miniature construction and other preparations already underway.
The film is scheduled to go on floors in October. The director has revealed that the entire shoot is planned to take place at Ramoji Film City in Hyderabad.
With a large-scale production design, an ensemble of actors and technicians and an ambitious combination of science fiction, fantasy and superhero elements, the film is expected to mark a significant step forward in Shiv Madhav’s career.
The Emotional Connection with the Late K. Bhagyaraj
One of the most emotional aspects of Shiv Madhav’s journey is his association with the late veteran filmmaker and actor K. Bhagyaraj, who appeared in 3.6.9.
Shiv Madhav had also planned to have Bhagyaraj play a role in his upcoming film. However, his passing left a deep void in the director’s journey.
Bhagyaraj had closely witnessed the struggles behind the making of 3.6.9 and had continued to encourage the young filmmaker during difficult periods.
“Whenever I felt discouraged, Bhagyaraj sir would tell me, ‘Shiva, you have great potential. Keep moving forward with confidence. You can do it.’ He would often call me home, speak to me and motivate me.
“Losing such a mentor has been extremely painful. I was standing near his feet on the day he passed away. He knew how difficult it was to make my first film and had spoken about it in many places on my behalf.
“I had planned to have him act in this new film as well. Unfortunately, he is no longer with us. But I continue to believe that his blessings will always be with me,” says Shiv Madhav emotionally.
A New Chapter Beyond Records
With 3.6.9, Shiv Madhav established himself as a filmmaker willing to push the boundaries of conventional filmmaking. His next project represents a significant shift — from focusing primarily on record-breaking achievements to creating a commercially viable, technologically ambitious and audience-oriented film.
While the desire to create something that could potentially set another world record remains, the director says his primary focus this time is on the overall filmmaking experience, visual scale and entertainment value.
With three years of technical learning, the lessons from his debut and the inspiration of his late mentor K. Bhagyaraj driving him forward, Shiv Madhav is now preparing to embark on what could be the biggest chapter of his cinematic journey yet.
