இந்திய சினிமாவில் முதன் முதலாக லிப் லாக் கிஸ் கொடுத்து அதிர்வலையை ஏற்படுத்திய தேவிகா ராணி பிறந்த நாளின்று
’தேவிகா-ராணி சௌத்ரி’ என்ற இயற்பெயர் கொண்ட தேவிகா-ராணி 1908 ம் ஆண்டு மார்ச் மாதம் 30 ம் நாள், இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில், எம்.என் சௌத்ரி என்பவருக்கும், லீலாவுக்கும் மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை மதராசின் முதல் இந்திய சீஃப் சர்ஜன் டாக்டராக பணியாற்றியவர். அதுமட்டுமல்லாமல், இவருடைய குடும்பம் ‘நோபல் பரிசு’ பெற்ற ரவீந்தரநாத் தாகூரின் குடும்பத்துடன் தொடர்புடையதாகும்.
சின்ன வயசிலேயே சிறந்த மாணவியாக விளங்கிய இவர், 1920 ம் ஆண்டு தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு லண்டனில், ரேடாவில் ஸ்காலர்ஷிப் பெற்ற அவர், ஐக்கிய ராஜ்யத்தின் நாடகக் கலைக்கான வேந்திய அகாதமியிலும் மற்றும் வேந்திய இசை அகாடமியிலும் பயின்றார். அவர் எலிசபெத் ஆர்டென் கீழ் பயிற்சிப் பெற்றது மட்டுமல்லாமல், கட்டிட வடிவமைப்பு, நெசவுப்பொருட்கள், உள்வடிவமைப்பு போன்றவற்றிலும் கல்விக்கற்று ...









