இயக்குனர் விக்ரமன் பிறந்த நாள் பதிவு
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள தெற்குமேடு என்னும் கிராமத்தில் 1961 ம் வருசம் மார்ச் மாதம் முப்பதாம் தேதி பிறந்த இவரின் நிஜப் பெயர் சுப்பிரமணியன். பேட்டை கல்லூரியில் ஒரு பிகாம் படித்த பட்டதாரி. திரைப்படங்கள் மீது உள்ள காதலால் நெல்லை மண்ணின் பிரபல தயாரிப்பாளராக இருந்த சூரியநாராயணன் சிபார்சில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக சேர்ந்த இவர் பணியாற்றிய முதல் திரைப்படம் குவா குவா வாத்துக்கள்.அடுத்து பார்த்திபன் புதியபாதை திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான போது அந்தப் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார்
புதிய பாதை படம் வெளியான நான்காவது நாள் அதிர்ஷ்ட தேவதை ஆர் பி சவுத்ரி என்ற தயாரிப்பாளரின் வடிவில் இவரை அணைத்துக் கொண்டாள்.. புது வசந்தம் என்ற பெயரில் தயாரான அந்தப் படத்திற்கு இசையமைக்க இளையராஜாவைத் தர தயாரிப்பாளர் தயாராக இருந்த போதும் இவரது விருப்பம் எஸ் ஏ ராஜ்குமாராக இருந்தது அதற்...









