Wednesday, February 8
Shadow

Death Anniversary

தயாரிப்பாளர் அ. செ. இப்ராகிம் இராவுத்தர் மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
அ. செ. இப்ராகிம் இராவுத்தர் மதுரையைச் சேர்ந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். கேப்டன் பிரபாகரன், புலன்விசாரணை , உழவன் மகன், தாலாட்டுப் பாடவா உட்பட 28 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். நடிகர் விஜயகாந்த்தின் திரை அறிமுகத்திற்கு முதன்மை காரணமாக இருந்தார். நெருங்கிய நண்பர்களாக இருவரும் திகழ்ந்தனர். பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியதற்காகவும் ஊக்குவித்ததற்காகவும் அறியப்படுகின்றார். தமது 63ஆவது வயதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இராவுத்தர் ஜூலை  22, 2015 அன்று மரணமடைந்தார்....

நடிகர் தங்கராஜ் மறைந்த தினப் பதிவு

Death Anniversary, Top Highlights
தங்கராஜ் தமிழ்த் திரைப்பட நடிகரும், மேடை நாடக நடிகரும் ஆவார். "எம். எல். ஏ. தங்கராஜ்" என்றே இவர் அழைக்கப்பட்டார். பல தொலைக்­காட்சித் தொடர்­க­ளிலும் இவர் நடித்துள்ளார். கும்­ப­கோ­ணத்தில் பிறந்தவர் தங்­கராஜ். மேடை நாட­கங்­க­ளி­ல் நடித்து வந்த இவர் 1954 ஆம் ஆண்டில் வெளிவந்த மாங்­கல்யம் திரைப்­ப­டத்தின் மூலம் திரைப்பட நடி­க­ராக அறி­மு­க­மானார். ராஜராஜ சோழன், திசை மாறிய பறவைகள், கருடா சவுக்­கி­யமா?, சுப்ரபாதம் எனப் பல படங்­களில் நடித்தார். பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.எல்.ஏ வேடம் ஏற்று நடித்ததை அடுத்து இவரை எம்.எல்.ஏ. தங்கராஜ் என்று அழைத்தனர். தங்கராஜ் 2013 சூலை 22 இல் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு சாந்தா என்ற மனைவியும், சுமதி என்ற மகளும் உள்ளனர். சுமதி திரைப்பட, மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகையாவார்....

நடிகர் டி. எஸ். பாலையா மறைந்த தினப் பதிவு

Death Anniversary, Top Highlights
டி. எஸ். பாலையா தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன. தந்தை பெயர் சுப்பிரமணிய பிள்ளை. இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங் களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். ‘‘பதி பக்தி’’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. கோவையைச் சேர்ந்த ஏ.என்.மருதாசலம் செட்டியார், தன் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ‘மனோரமா பிலிம்ஸ்’ என்ற படக்கம்பெனியை தொடங்கினார். ‘‘ஆனந்த விகடன்’’ ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘‘சதிலீலாவதி’’ என்ற கதையை படமாக்க அவர் தீர்மானித்தார். இந்த கதைக்கும், ‘...

நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 'சிவாஜி' கணேசன், சின்னையா மன்ராயா் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4வது மகனாக பிறந்தார். இவர் மனைவி கமலா மற்றும் மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர்கள் ஆவார். சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. 'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒ...