Monday, November 9
Shadow

Top Highlights

அதிக திரைப்படங்கள் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்த தயாரிப்பாளர் டி. ராமா நாயுடு பிறந்த தினம்

அதிக திரைப்படங்கள் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்த தயாரிப்பாளர் டி. ராமா நாயுடு பிறந்த தினம்

Latest News, Top Highlights
டி. ராமா நாயுடு சுரேசு புரொடக்சன்சு என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர். ஒரு தனிநபரால் மிகக் கூடுதலான திரைப்படங்களைத் தயாரித்ததற்கான கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியவர். 13 இந்திய மொழிகளில் 150 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். 1999 முதல் 2004 வரை குண்டூர் மாவட்டத்தின் பாபட்ல மக்களவைத் தொகுதியிலிருந்து பதின்மூன்றாவது மக்களவையில் மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார். தெலுங்கு திரைப்படத்துறைக்கு இவராற்றிய சேவைக்காக 2012இல் இந்தியக் குடியரசின் மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்ம பூசன் இவருக்கு வழங்கப்பட்டது. இந்திய திரைப்படத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குச் சீரிய பங்களித்தமைக்காக 2009இல் வாழ்நாள் சாதனைக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இராமாநாயுடு 1991இல் இராமாநாயுடு அறக்கட்டளை ஏற்படுத்தி பலருக்குக் கல்விக்காக உதவியுள்ளார்....
40 திரையுலகில் கொடிகட்டி பறந்த ஹிந்தி நடிகர் சுனில் தத் பிறந்த தினம்

40 திரையுலகில் கொடிகட்டி பறந்த ஹிந்தி நடிகர் சுனில் தத் பிறந்த தினம்

Latest News, Top Highlights
சுனில் தத் தயாரிப்பாளர், இயக்குனராகவும் விளங்கினார். இவர் ஒரு அரசியல்வாதியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004- 2005 காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன்சிங்கின் ஐக்கிய முற்போக்கு அரசின் அமைச்சரவை மந்திரியாக இருந்தார். இருந்தார். சுமார் 40 வருடங்களாக இந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். பின்னர் காங்கிரஸில் சேர்ந்த சுனில் தத், 1984-ம் ஆண்டு மும்பை வடமேற்கு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முதன் முதலாக வெற்றி பெற்றார். பின்னர் இதே தொகுதியில் 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 5 முறை எம்.பியாக இருந்த சுனில் தத் ராஜீவ் காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். இவரது மனைவி மறைந்த பிரபல இந்தி நடிகை நர்கீஸ். இவர் உடல் நலக்குறைவால் 2005-ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி மும்பையிலுள்ள அவரது வீட்டில் வைத்து மரணமடைந்தார். தூக்கத்திலேயே...
ரஜினிகாந்துக்கு நன்றி சொன்ன தனுஷ்

ரஜினிகாந்துக்கு நன்றி சொன்ன தனுஷ்

Latest News, Top Highlights
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘காலா’. ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படத்தை, பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். மும்பை, தாராவி பகுதியில் வசிக்கும் தமிழர்களைப் பற்றியும், அவர்களுடைய பிரச்சினைகள் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது. நாளை மறுநாள் (ஜூன் 7) உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. ‘காலா’ படத்தின் தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ், “மக்களுக்கான படம் ‘காலா’. மக்களால் மக்களுக்காக எடுக்கப்பட்ட படம். தாராவியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையையும், அவர்கள் படும் சிரமங்களையும் நேர்த்தியாகப் படமாக்கியுள்ளார் பா.இரஞ்சித். தாராவியில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே இதில் பேசவில்லை. உலகம் முழுவதும் ஏதோ ஒருவகையில் ஒடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மனிதனின் பிரச்சினையையும் இது பேசியுள்ளது. மக்களின் பிரச்சினைகளை, ரஜினி சாரைவிட வேறு...
நீயா நானா கோபிநாத் கோட்டை கழட்டி எறியுங்கள் – இயக்குனர் பாலா

நீயா நானா கோபிநாத் கோட்டை கழட்டி எறியுங்கள் – இயக்குனர் பாலா

Latest News, Top Highlights
10-வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (ஜுன் 4) கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றார்கள். இந்த விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதினை ‘விக்ரம் வேதா’ படத்துக்காக புஷ்கர் - காயத்ரி இணைக்கு இயக்குநர் பாலா வழங்கினார். அப்போது பாலாவிடம் கோபிநாத் சில கேள்விகள் கேட்க முயன்றார். அப்போது இயக்குநர் பாலா, “உங்களுக்கு என்று தனி மரியாதை இருக்கிறது. உங்களது புத்தகங்களுக்கென்று சிலர் வீட்டில் தனியாக செல்ஃப் வைத்திருக்கிறார்கள். உங்களை நீயா நானா மாதிரியான நிகழ்ச்சியிலும் இல்லையென்றால் இதே மாதிரியான விருது வழங்கும் நிகழ்ச்சியில் தான் பார்க்கிறேன். நீங்க வந்து ஸ்டார் போட்ட கோட் எல்லாம் போடாதீங்க. நல்லாயில்லை. தயவு செய்து கழட்டிவிடுங்கள். நன்றி” என்று தெரிவித்தார். இதற்கு கோ...
பாபி சிம்ஹா நடிப்பில்  ராஜேஷ்குமாரின் நாவல் அக்னி தேவ் என்ற தலைப்பில் உருவாகிறது

பாபி சிம்ஹா நடிப்பில் ராஜேஷ்குமாரின் நாவல் அக்னி தேவ் என்ற தலைப்பில் உருவாகிறது

Latest News, Top Highlights
பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவல் ஒன்று மீண்டும் படமாகிறது. அக்னி தேவ் என்ற பெயரில் புதிய படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்கிறது படக்குழு. இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இயக்குகின்றனர். செனட்டோ ஸ்டூடியோ மற்றும்ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப் பூஜை இன்று கோவையில் உள்ள கோயிலில் நடைபெற்றது....
ஜூன் 15 ல் வெளியாகும் மு.ரா.சத்யா – மானசா நாயர் நடித்துள்ள “ என்னோடு நீ இருந்தால் “

ஜூன் 15 ல் வெளியாகும் மு.ரா.சத்யா – மானசா நாயர் நடித்துள்ள “ என்னோடு நீ இருந்தால் “

Latest News, Top Highlights
சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்திற்கு “ என்னோடு நீ இருந்தால் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். லவ் மற்றும் ரொமாண்டிக் திரில்லராக படம் உருவாகி உள்ளது . யாரிடமும் உதவியாளராக பணி புரியவில்லை, படங்களை பார்த்தது, புத்தகங்கள் எழுதும் அனுபவத்தை வைத்தே இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். இந்த படம் வெளிவந்த பிறகு பார்த்த அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அனைவரும் இந்த சமூதாயத்தால் ஒரு முக்கியமான விஷயத்தால் நமக்கு தெரியாமலே பாதிக்கப்பட்டு வருகிறோம். அந்த பாதிப்பு என்ன ? ஏன் அவ்வாறு நடக்கிறது என்பது இந்த படம் பார்த்த பிற...
காலா படத்தை வெளியிட கோரி தனுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

காலா படத்தை வெளியிட கோரி தனுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

Latest News, Top Highlights
காலா படத்தை திரையிட அரசை வற்புறுத்த முடியாது. ஒரு படத்தை வெளியிட கோரி அரசை நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது. படக்குழுதான் அரசை அணுகி தங்கள் கோரிக்கையை வைக்க வேண்டும்* காலா பிரச்சனை குறித்து கர்நாடக அரசிடம் படக்குழு முறையிடலாம். அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் கர்நாடகாவில் படம் வெளியானால்??? படத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது*...
 காலா திரைப்படம்: கட்டணக் கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்? அன்புமணி இராமதாஸ்

 காலா திரைப்படம்: கட்டணக் கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்? அன்புமணி இராமதாஸ்

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அந்த படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. முதல் இரு நாட்களுக்கு ஒரு நுழைவுச்சீட்டுக்கு  ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மொழிப்படத்திற்கும் ஒவ்வொரு அளவில் உள்ளாட்சி வரி வசூலிக்கப்படுவதால், எந்த மொழிப்படம் என்பதைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. சென்னையில் தமிழ் திரைப்படங்களுக்கு அதிகபட்சக் கட்டணமாக ரூ.165.78 வசூலிக்கப்படுகிறது. பிற இந்திய மொழிப்படங்களுக்கு ரூ.176.44,  ஆங்கிலப் படங்களுக்கு ரூ.184.06 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலா திரைப்படத்தைப் பொறுத்தவரை அதிகாரப்பூர்வமாகவே ரூ.207.25 வரை நுழைவுச்சீட்டுக் கட்டணம் வசூலித்துக் கொள...
சத்யஜித்ரே படம் போல இருக்கிறது” ; ஒரு குப்பை​க்​ கதைக்கு வைகோ பாராட்டு

சத்யஜித்ரே படம் போல இருக்கிறது” ; ஒரு குப்பை​க்​ கதைக்கு வைகோ பாராட்டு

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
சமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்லம் தயாரிப்பில் அறிமுக இயக்கு​ந​ர் காளி ரங்கசாமி இயக்கத்தில் 'ஒரு குப்பை​க்​ கதை' படம் வெளியானது.. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிகசிறந்த படம் என படம் பார்த்தவர்களும், பத்திரிகை, ஊடகங்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில் இந்த சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கொண்ட இந்தப்​ ​படத்தை​க்​ கட்டாயம் பார்க்கவேண்டும் என மதிமுக க​ட்​சியின் பொதுச்செயலாளர்​ வைகோ ​ வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த வைகோ ​ இந்தப்​ ​படம் குறித்து மிகவும் சிலாகித்து, தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.. "பெண்கள் அனைவரும் சமீபத்தில் வெளியாகியுள்ள 'ஒரு குப்பை​க்​ கதை' படத்தை​ப்​ பார்க்கவேண்டும்.. இன்றைக்கு மணமுறிவுகள் ஏற்படுவது, கள்ளக்காதலில் மனைவி படுகொ...