Sunday, November 8
Shadow

Top Highlights

உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் கதாநயாகி நடிகை லதா பிறந்த தினம்

உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் கதாநயாகி நடிகை லதா பிறந்த தினம்

Latest News, Top Highlights
இவர் எம்.ஜி.ஆர் லதா, லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். இவர் 1970கள் மற்றும் 1980களில் புகழ்பெற்ற நடிகையாக தென்னிந்திய திரையுலகில் இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது வள்ளியில் ராஜேஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். லதா 7, ஜூன் 1953ல் இராமநாதபுரத்தில் சண்முக ராஜேஸ்வர சேதுபதி மற்றும் லீலாராணி ஆகியோருக்கு பிறந்தவர். இவருடைய இயற்பெயர் நளினி என்பதாகும். இவர் சேதுபதி குடும்பத்தில் பிறந்தமையால் லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். நடிகர் ராஜ்குமார் சேதுபதி இவருடைய சகோதரராவார். தன்னுடைய நடனத் திறமையாலும், அழகாலும் தமிழகத் திரையுலகில் நாயகியானார். 1973ல் எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் முதன் முதலாக நாயகியாக நடித்தார். இவர் நடித்த படங்கள் நேற்று இன்று நாளை உழைக்கும் கரங்கள் பல்ல...
பசங்க இயக்குனர் பாண்டிராஜ் பிறந்த தினம்

பசங்க இயக்குனர் பாண்டிராஜ் பிறந்த தினம்

Latest News, Top Highlights
தமிழ்த் திரைப்பட இயக்குனரான இவர் சசிகுமாரின் தயாரிப்பில் கடந்த 2009ல் இயக்கிய பசங்க திரைப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்து 2010ல் அருள்நிதியை கதாநாயகனாக வைத்து வம்சம் திரைப்படமும், சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து மெரினா திரைப்படமும் இயக்கினார். மெரினா திரைப்படத்தில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர், சென்னை வந்த புதிதில் இயக்குனர் கே. பாக்கியராஜிடம் ஆபிஸ் பாயாக வேலை பார்த்தவர். அந்த நாட்களில் பல சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார். பல்வேறு தடைகளை தாண்டி இயக்குனர் சேரனிடம் உதவி இயக்குனராக இணைந்து பணியாற்றினார். பின்னர் தங்கர்பச்சான் மற்றும் சிம்பு தேவனுடன் ஆறு படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இயக்கிய படங்கள் பசங்க வம்சம் மெரினா கேடி பில்லா கில்லாடி ரங்கா மூடர் கூடம் கோலி சோடா இ...
ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஜெய் ஆகாஷின் “சென்னை டூ பாங்காக்”

ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஜெய் ஆகாஷின் “சென்னை டூ பாங்காக்”

Latest News, Top Highlights
ஜெய் ஆகாஷின் ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம் தான் 'சென்னை டூ பாங்காக்'.இதில் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக சோனி சரிஸ்டா, யாழினி நடிக்கிறார்கள். யோகிபாபு, சாம்ஸ், பவர்ஸ்டார் சீனிவாசன்,கும்கி அஸ்வின்,இந்து, திலகவதி, கிருஷ்ணவேணி ஆகியோருடன் வில்லன் வேடத்தில் பொன்னம்பலம் மற்றும் தினேஷ் மேட்னே ஆகியோரும் நடிக்கிறார்கள். கதைச்சுருக்கம் : இந்தியாவில் இருந்து பாங்காங்கிற்கு கடத்தப்படும் பெண்களை இளைஞன் ஒருவன் அந்த பெண்களை மீட்டுவர தனி ஆளாக கிளம்புகிறான்.. அங்கே சென்றதும் தான் அந்த பெண்கள் அனைவருக்கும் தீவிரவாத பயிற்சி அளித்து மீண்டும் இந்தியாவுக்கே நாசகார வேலைகளை செய்ய தயார்படுத்துகிறார்கள் என்கிற அதிர்சசியான விபரம் தெரிய வருகிறது.. அந்த கூட்டத்தின் சதியை முறியடித்து அந்த பெண்களை இந்தியாவிற்கு அந்த இளைஞன் எப்படி மீட்டு வருகிறான் என்பது தான் படத்தின் கதை. இதை அனைத்த...
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..!

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..!

Latest News, Top Highlights
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்துவதோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பால் தயிர் எண்ணெய் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மற்ற பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கு நடிகரும் சமூக சேவகருமான ஆரி தனது நன்றியை தெரிவித்துள்ளார், இவர் பல வருடங்களாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என போராடியிருக்கிறார் குறிப்பாக தனது படபூஜை விழா மற்றும் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் அவர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் விழ...
காலா படம் எப்படி இருக்கிறது? ரசிகர் விமர்சனம் இதோ!

காலா படம் எப்படி இருக்கிறது? ரசிகர் விமர்சனம் இதோ!

Review, Top Highlights
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே நாளை காலா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. படம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதனிடையே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இன்றே திரைப்படம் ரிலீஸ் ஆக துவங்கியுள்ளது. திரைப்படத்தை பார்த்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சை சேர்ந்த, நமது வாசகர் உமைர் சந்து எழுதியனுப்பிய விமர்சனம் உங்கள் பார்வைக்காக: ஸ்டைல் கிங் ரஜினிகாந்த்தும், வளரும் இயக்குநர் பா.ரஞ்சித்தும் இணைந்துள்ள படம் காலா. இந்த காம்போ படத்தை காப்பாற்றியதா என்பதை பார்க்கலாம். இந்த படத்தில் ரஜினிகாந்த்தின் பாடி லேங்குவேஜ், ஸ்டைலிஷ் லுக், டயலாக் டெலிவரி மிஸ் ஆகியுள்ளது. இப்போதுள்ள மல்டிபிளக்ஸ் ரசிகர்கள் மனநிலையை கருத்தில் கொண்டு, ரஜினிகாந்த்தை பா.ரஞ்சித் கையாண்டுள்ளார். ரஜினியின் புகழ்பெற்ற டச்களை விட்டுவிடாமலும், இப்போதைய ரசிகர்களை திருப்...
ரஜினிக்கு அறிவுரை சொன்ன அமீர் விஜயை பார்த்து கத்துக்க சொல்லி

ரஜினிக்கு அறிவுரை சொன்ன அமீர் விஜயை பார்த்து கத்துக்க சொல்லி

Latest News, Top Highlights
கடந்த ஒரு சில நாட்களாக ரஜினிக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்லவேண்டும் காரணம் எப்போது ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றாரோ அப்போது முதல் அவருக்கு தொடர்ந்து பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று தான் சொல்லணும் குறிப்பாக இந்த தூத்துக்குடி பயணத்துக்கு பின் இவரின் காலா படத்துக்கு வரும் சோதனைகள் கொஞ்சம் நஞ்சம இல்லை அதோடு வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் அறிவுரை சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது அந்த பட்டியலில் இயக்குனர் அமீர் ரஜினிக்கு எப்படி நடக்கவேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார் பாருங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் பாதிக்க...
பிரச்சனை முடிந்தது கர்நாடகவிலிம் காலா ரிலீஸ் அதுவும் 150 திரையரங்கில்

பிரச்சனை முடிந்தது கர்நாடகவிலிம் காலா ரிலீஸ் அதுவும் 150 திரையரங்கில்

Latest News, Top Highlights
கர்நாடகாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளபோதிலும், குறிப்பிட்ட சில விநியோகஸ்தர்கள் அந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனால், கர்நாடகாவிலும் நாளை 150 திரையரங்குகளில் காலா படம் வெளியாகிறது. இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படம் நாளை (ஜூன் 7) வெளியாக உள்ள‌து. இந்நிலையில் ரஜினிகாந்த் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கினர். கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீண் ஷெட்டி உள்ளிட்டோர் ரஜினியை கண்டித்து பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்வதாக அறிவித்தது. இதையடுத்து கா...
நடிகை லக்ஷ்மி மேனன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யபோகும் ‘எங் மங் சங்’.

நடிகை லக்ஷ்மி மேனன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யபோகும் ‘எங் மங் சங்’.

Latest News, Top Highlights
கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன் சில வருடங்களுக்கு முன்புவரை முன்னணி நடிகையாக விளங்கினார். றெக்க, மிருதன் படங்களுக்குப் பிறகு தமிழ்சினிமாவிலிருந்தே காணாமல்போய்விட்டார். தற்போது அவர் நடித்துவரும் ஓரே படம் -‘எங் மங் சங்’. எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா, நடிப்பில் உருவாகிவரும் படம் இது. ’மெர்க்குரி’, ’சார்லி சாப்ளின் 2’ படங்களை தொடர்ந்து, ‘எங் மங் சங்’ படத்திலும் நடித்து வந்தார் பிரபுதேவா. கும்பகோணம் பகுதியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் ‘லஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘ஊமை விழிகள்’ என பிரபுதேவா அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். எனவே பல மாதங்களாக முடங்கிக்கிடந்தது ‘எங் மங் சங்’ படம். பிறகு தற்போது மீண்டும் ‘எங் மங் சங்’ படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். தற்போது மீண்டும் வளரத்தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்...
திருவொற்றியூர் MSM லெமுரியா சினிமாஸை திறந்து வைத்தார் நடிகர் விஷால் !

திருவொற்றியூர் MSM லெமுரியா சினிமாஸை திறந்து வைத்தார் நடிகர் விஷால் !

Latest News, Top Highlights
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் திருவொற்றியூர் MSM லெமுரியா சினிமாஸை திறந்து வைத்தார். புதுபொலிவுடன் திருவொற்றியூர் MSM லெமுரியா சினிமாஸ். திருவொற்றியூர் பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான MSM தியேட்டர் தற்போது லெமுரியா சினிமாஸ் என பெயர் மாற்றப்பட்டு நேற்று இத்திரையரங்கை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ரசிகர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். புத்தம் புதிய டிஜிட்டல் சரவுண்ட் சவுண்டுடன், துள்ளியமான காட்சிக்கு உயர்தர 2K புரொஜெக்டர், முழுதும் குளூரட்டப்பட்ட ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. சினிமாவை குடும்பத்துடன் கண்டுகளிக்க ஏதுவான இடமாக திரையரங்கம் இருக்க தரம் கூட்டப்பட்ட கேண்டின் வசதிகள் மற்றும் கழிப்பறைகள் செய்யப்பட்டுள்ளது. லெமுரியா சினிமாஸை திறந்து வைத்து பேசிய விஷால் ‘ சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் எண்ணிக்கைகள் பெருக வேண்டும். மக்களுக்கு தரமான...
தூத்துக்குடிக்கு திடீர் விஜயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும்  உதவியும் செய்த விஜய்

தூத்துக்குடிக்கு திடீர் விஜயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் உதவியும் செய்த விஜய்

Latest News, Top Highlights
தளபதி விஜய் என்று சொல்லவதை விட மனிதர்களின் மாணிக்கம் மக்களின் புரட்சி தளபதி என்று தான் சொல்லணும் காரணம் தமிழ் நாட்டில் எந்த ஒரு பிரச்னை என்றாலும் அதை தன் பிரச்சனையாக நினைத்து ஏழை பணக்காரன் என்ற பாகுப்பாடு இல்லாமல் பழகும் ஒரு நல்ல மனிதர் என்றால் அது விஜய் என்று சொன்னால் மிகையாது தமிழனுக்கு ஒரு பிரச்னை என்றால அது என் பிரச்னை என்று மக்களோடு மக்களாக வாழ்பர் என்றால் அது விஜய் தான் தமிழனுக்கு எந்த ஒரு பிரச்னை என்றாலும் அந்த பிரச்சனையை பற்றி தெரிந்து எங்கு நடந்துதோ அங்கே சென்று அவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்வதோடு அவர்களை நேரில் ஆறுதல் சொல்ல்வதில் விஜய்க்கு நிகர் யாரும் இல்லை என்று தான் சொல்லணும் அது தன் ரசிகனாக இருந்தாலும் சரி பொதுமக்களாக இருந்தாலும் அவர்கள் துயரத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு ஆறுதல் சொல்ல்வதில் விஜய் தான் கிரேட் தன் ரசிகன் விபத்தில் இறந்துவிட்டன உடனே அங்கு சென்று தன் ...