Sunday, November 8
Shadow

Top Highlights

தமிழகத்தில் காலாவிற்கு வரவேற்பு குறைவு- டிக்கெட் புக்கிங் மந்தம்

தமிழகத்தில் காலாவிற்கு வரவேற்பு குறைவு- டிக்கெட் புக்கிங் மந்தம்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரும் ’காலா’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு மிகவும் மந்தமாக உள்ளதாக தமிழகத்தின் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகராக உள்ள ரஜினிகாந்த், இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமையாகவும் உள்ளார். இவர் நடிக்கும் புதிய படங்கள் திரையரங்குகளில் வெளிவரும் போது அது திருவிழா போல கொண்டாடப்படும். ஆனால் வரும் 7ம் தேதி வெளிவரும் ’காலா’ படத்திற்கு வழக்கத்திற்கு மாறான தமிழகத்தில் சூழ்நிலை நிலவுகிறது. ஜூன் 7 மற்றும் 8ம் தேதிகளை தவிர, வார நாட்களில் ‘காலா’ படத்திற்கான முன்பதிவு பெரியளவு இல்லை. இதை திரையரங்குகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் நேரடியாக பார்க்க முடிகிறது....
ரூ.140 கோடியில் உருவான “காலா”வுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்: நீதிமன்றத்தில் தனுஷ் மனு

ரூ.140 கோடியில் உருவான “காலா”வுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்: நீதிமன்றத்தில் தனுஷ் மனு

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் நாளை மறுநாள் திரை வர உள்ளது. இந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதை தொடர்ந்து, கன்னட அமைப்புகள் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இவர்க்லூ ஆதரவாக கர்நாடக தயாரிப்பாளர் சங்கமும் காலா படத்தை வெளியிட விட மாட்டோம் என்று தெரிவித்துள்ளன,. இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் காலா தயாரிப்பு தரப்பில் நடிகர் தனுஷ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் காலா உருவாகியுள்ளது. அதனால் அதனால், இப்படத்திற்கு கர்நாடகாவில் உரிய பாதுக்காப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்....
எஸ்.எ.சந்திரசேகர் நடிக்கும் டிராஃபிக் ராமசாமியின் சர்ச்சைக்குரிய பாடல்

எஸ்.எ.சந்திரசேகர் நடிக்கும் டிராஃபிக் ராமசாமியின் சர்ச்சைக்குரிய பாடல்

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
இயக்குனர் விக்கி, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்துவுக்கு மிரட்டல்? மத்திய மாநில அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களின் மீது காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் டிராபிக் ராமசாமியின் கோமாளி பாடல் நேற்று வெளியானது. உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை எல்லாவற்றையும் நக்கலடிக்கும் பாடலாக இது அமைந்திருக்கிறது. பெரியார் பற்றி பதிவிட்டு பின் அட்மின் செய்த தவறு என்று சொன்ன எச்.ராஜா முதல் ஓட்டுக்கு பணம் வாங்கும் கலாச்சாரம் வரை பாடலாசிரியர் கபிலன்வைரமுத்து போட்டு தாக்கியிருக்கிறார். பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார். இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு தரப்பில் இருந்து படக்குழுவினர்க்கு மிரட்டல்கள் வந்துகொண்டிருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது....
தொடை அழகி ரம்பா பிறந்த தினம் இன்று அவரை பற்றி சில அறியாத விஷயங்கள்

தொடை அழகி ரம்பா பிறந்த தினம் இன்று அவரை பற்றி சில அறியாத விஷயங்கள்

Latest News, Top Highlights
நடிகை ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. திரைப்படத்திற்காக தனது பெயரை முதலில் அம்ரிதா என்றும், பின்னர் ரம்பா என்றும் மாற்றி கொண்டார். அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார். நடிகை ரம்பா நடித்த முதல் படம் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற தெலுங்குப் படமாகும். மலையாளத்தில் அவருடைய முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். அதே ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான மற்றொருத் திரைப்படம் சம்பகுளம் தச்சன் ஆகும். தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வ...
காலாவுக்கும் காவிரிக்கும் என்ன சம்பந்தம்?  பிரகாஷ்ராஜ் கேள்வி

காலாவுக்கும் காவிரிக்கும் என்ன சம்பந்தம்? பிரகாஷ்ராஜ் கேள்வி

Latest News, Top Highlights
வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் மும்பை தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த படம் வரும் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. ஆனால் பட ரிலீசுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. காவிரி விவகாரம் குறித்து ரஜினி தெரித்த கருத்துக்களுக்கு கர்நாடக அமைப்புகள் சில கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, கர்நாடகாவில் பட ரிலீசை தடை செய்தது, அம்மாநில திரைப்பட வர்த்தக சபை. இதனை நீக்க படக்குழு மற்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்டாலும் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ந...
சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஹிந்தி படம் மூலம் நடிக்கிறார் சுருதி ஹாசன்

சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஹிந்தி படம் மூலம் நடிக்கிறார் சுருதி ஹாசன்

Latest News, Top Highlights
சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘சிங்கம் 3’ படத்தை தொடர்ந்து இந்தியில் கவனம் செலுத்திவரும் ஸ்ருதிஹாசன், ‘பெஹென் ஹோஹி டெரி’ என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து, கமல் இயக்கி நடிக்கத் தொடங்கிய ‘சபாஷ் நாயுடு’ மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருந்த ‘சங்கமித்ரா’ படத்தில் ஒப்பந்தமானார். இந்த இரு படங்களின் வேலைகளும் தாமதமாகிவந்த வேளையில் ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், தற்போது மகேஷ் மஞ்ச்ரேகர் இயக் கும் இந்தி படத்தில், வித்யுத் ஜம்வால் ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதி. விஜய், காஜல் அகர் வால் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யுத். லிங்குசாமி இயக்கத் தில் சூர்யாவுடன் ‘அஞ் சான்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நஸ்ருதீன் ஷா, அமோல் பாலேகர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பைய...
விஜய் டிவியின் பிக் பாஸ் 2 லேட்டஸ்ட் அப் டேட்

விஜய் டிவியின் பிக் பாஸ் 2 லேட்டஸ்ட் அப் டேட்

Latest News, Top Highlights
விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், ஹார்த்தி, அனுயா, காஜல், கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, ரைஸா வில்சன், பரணி, ஷக்தி வாசு, சுஜா வருணி, ஜூலி, நமிதா, ஸ்ரீ என மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். கடந்த வருடம் ஜூன் 25 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைந்தது. இதில், ஆரவ் போட்டியின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். ‘ஓவியா ஆர்மி’ ஆரம்பிக்கும் அளவு...
ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டுச் சிதைக்க முயல்கிறார் கமல் ஹாஸன். – தமிழருவி மணியன் 

ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டுச் சிதைக்க முயல்கிறார் கமல் ஹாஸன். – தமிழருவி மணியன் 

Latest News, Top Highlights
திரு.கமலஹாசன்,   மக்கள் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் எதிரானவர் என்பதைப் போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருப்பதை அவருடைய அறிக்கை தெளிவாகவே வெளிப்படுத்துகிறது.  மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்வர் கனவு கலைந்துவிடக் கூடும் என்று  அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும் சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் சிதைக்க முற்படும் நேரத்தில் கமலஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் அந்தரங்க நோக்கத்தை மக்கள் எளிதாக இனம் காணக்கூடும். ரஜினிகாந்த் மக்கள் நலன் சார்ந்த எந்தப் போராட்டத்திற்கும் எதிரி அல்ல.   மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதாரப்  போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெற்றிடலாகாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருக்கிறது.  ரஜினி சொந்தக் கருத்தைச் சொல்லி இருப்பதாகவும், மக்கள் கருத்தையே தான்  எப்ப...
புரட்சிக்கலைஞரிடம் வாழ்த்துப் பெற்றதில் பெருமிதம். நடிகர் சௌந்தரராஜா தம்பதி மகிழ்ச்சி

புரட்சிக்கலைஞரிடம் வாழ்த்துப் பெற்றதில் பெருமிதம். நடிகர் சௌந்தரராஜா தம்பதி மகிழ்ச்சி

Latest News, Top Highlights
நடிகர் சௌந்தரராஜா தமிழ் சினிமாவில் இரண்டாம் கட்ட நிலையில் உள்ள ஒரு நடிகர் திறமையான நடிகர் வில்லன் மற்றும் குனசித்திரங்கள் கதாபாத்திரங்களில் நடித்து வருபர் இன்றைய முக்கிய நட்சத்திரகளுடன் நடித்து வருகிறார். சுந்தர்ராஜா சமீபத்தில் தமன்னா என்ற பெண்ணை திருமணம் சமிபத்தில் நடைபெற்றது. இருவரும் இன்று தம்பதியராக தே.மு.தி.க. தலைவரும் தமிழ் சினிமாவின் கேப்டனுமாகிய விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதுபற்றி சௌந்தர ராஜா கூறுகையில் தமிழ் சினிமாவின் மிக அற்புதமான மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். சக மனிதரிடத்திலும் சினிமா குடும்பத்தினரிடமும் கேப்டன் அவர்கள் காட்டும் அன்பில் அவர் மிக உயர்ந்த மனிதர். அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டவரிடம் நானும் என் மனைவியும் வாழ்த்துப்பெற்றதை பெருமிதமாக உணர்கிறேன். எங்கள் சந்திப்புகளை நினைவுகூர்ந்து என்னையும் என் மனைவியையும் அன்போடு வாழ்த்திய புரட்சிக்கல...