Monday, November 9
Shadow

Top Highlights

தனுஷ் மற்றும் சிம்புவை இணைக்க வைக்க போகும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி

தனுஷ் மற்றும் சிம்புவை இணைக்க வைக்க போகும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி

Latest News, Top Highlights
காளி படத்தில் விஜய் ஆண்டனி அல்லது தனுஷ் நடிப்பதாக இருந்ததாம். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம் காளி. 4 ஹீரோயின்கள் உள்ள இந்த படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படம் குறித்து கிருத்திகா கூறியதாவது வணக்கம் சென்னை படத்தை அடுத்து கிரைம் த்ரில்லர் மற்றும் காளி கதையை ரெடி செய்தேன். 2015ம் ஆண்டில் என் நண்பரான தனுஷிடம் காளி கதையை சொன்னேன். அவருக்கு பிடித்துப் போக தானே தயாரிக்கவும் செய்வதாக கூறினார். ஆனால் பல காரணங்களால் அது நடக்கவில்லை தனுஷிடம் பேசியபோதே அதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவிடமும் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால் சில நாட்களில் அனைத்து முயற்சியும் தோல்வியடைந்துவிட்டது. விஜய் ஆண்டனியை வைத்து காளி படத்தை துவங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தில் அனைத்து துறைகளிலும் உதவி செய்துள்ளார் விஜய் ஆண்டனி. நடித்ததுடன்...
ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் “பேரன்பு” படத்துக்கு கிடைத்த உலக அளவு பெருமை

ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் “பேரன்பு” படத்துக்கு கிடைத்த உலக அளவு பெருமை

Latest News, Top Highlights
ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா, அமீர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பேரன்பு'. இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது. நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளையும் பெற்றுள்ளது. தற்போது, ஷாங்காய் நகரில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. 47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'பேரன்பு' திரைப்படத்தின் முதல் உலக பிரத்யேக காட்சி ஜனவரி மாதம் திரையிடப்பட்டது. 187 உலகத் திரைப்படங்கள் போட்டியிட்ட பார்வையாளர்கள் விருதிற்கான பிரிவில் பேரன்பு (Resurrection) முதல் 20 திரைப்படங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றது. மேலும் சிறந்த ஆசிய படத்திற்கு கொடுக்கும் NETPAC விருதிற்கு தேர்வானது. ஜூன் 16 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ள 21-வது ஷாங்காய் ச...
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன்  வெளியிட்ட  ‘சந்தோஷத்தில் கலவரம்’பர்ஸ்ட் லுக் மோஷன்  போஸ்டர்!

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!

Latest News, Top Highlights
இப்படத்தைக் கிராந்தி பிரசாத் இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இபக்கியவர். அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் ,தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர் . இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம் . தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும் தரப்படும் மரியாதையை வைத்து தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார் ' ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் 'சந்தோஷத்தில் கலவரம் 'என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி வி.சி. தயாரிக்கிறார் . . "ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் 'தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் 'என்று டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம் இது ஒரு சஸ்பென்ஸ் த்ரி...
பாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம் (நகைசுவை கலாட்டா)

பாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம் (நகைசுவை கலாட்டா)

Review, Top Highlights
பாஸ்கர் ஒரு ராஸ்கல் மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்துள்ள ஒரு படம் மலையாளத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற படம் இதில் மம்முட்டி நயன்தார மற்றும் பலர் நடித்தனர் இயக்குனர் சித்திக் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் வசூலில் சாதனை புரிந்த ஒரு படம் இப்போது இந்த படம் தமிழில் அரவிந்த்சாமி அமலாபால்,பேபி நைநிகா,மாஸ்டர் ராகவ், சூரி ரமேஷ்கண்ணா,ரோபோ சங்கர், மற்றும் பலர் நடிப்பில் அம்ரேஷ் கணேஷ் இசையில் சித்திக் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தமிழில் சாதிக்குமா என்பதை பார்ப்போம். வசதியான வீட்டைச் சேர்ந்தவர் அரவிந்த்சாமி. அவரது அப்பா நாசர், மகன் மாஸ்டர் ராகவ். அரவிந்த்சாமியின் மனைவி மறைவுக்குப் பிறகு அரவிந்த்சாமி தனது மகனை பாசமாக வளர்த்து வருகிறார். அதிகம் படிக்காத அரவிந்த்சாமி எந்த ஒரு வேலையிலும் பொறுமையில்லாமல், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதற்கு ஏற்றாற்போல் அடிதடியுடன் பட்டையை கிளப்புவார். ஆனால், ம...
ஹீரோயின்களை மாற்றி கொள்ளும் சூர்யா மற்றும் கார்த்தி பிரதர்ஸ்

ஹீரோயின்களை மாற்றி கொள்ளும் சூர்யா மற்றும் கார்த்தி பிரதர்ஸ்

Latest News, Top Highlights
சினிமாவில் மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கும் என சில விஷயங்களை மட்டும்தான் சொல்ல முடியும். ஒரு காலத்தில் தன்னுடன் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்களுடன் நமது ஹீரோக்கள் ஜோடி சேர்ந்து நடிப்பார்கள். நடிகையராக இருக்கும் அக்கா, தங்கையுடன் ஒரு ஹீரோ ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். தங்களது பேத்தி வயதுடைய நடிகையுடன் ஜோடியாக நடிப்பார்கள். தங்களை விட வயது குறைந்த நடிகையின் மகனாகவும் நடிப்பார்கள். இப்படி முரண்பாடான சில விஷயங்கள் சினிமாவில் தான் நடக்கும். அண்ணன், தம்பிகள் என இருவருமே முன்னணி நடிகர்களாக இருப்பதும் தமிழ் சினிமாவில் தான் உள்ளது. அண்ணன் சூர்யா, தம்பி கார்த்தி இருவரும் டாப் ஹீரோக்களின் பட்டியலில் இருக்கிறார்கள். இருவரும் அவர்களது படங்களில் ஒரே நடிகையுடன் மாறி மாறி ஜோடியாகவும் நடித்துக் கொள்வார்கள். சூர்யாவுடன் 'அயன்' படத்தில் நடித்த தமன்னா பின்னர் கார்த்தியுடன் 'பையா' படத்தில் ஜோடியா...
தயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தை வெளியிடவே பிரச்சனை ஏற்பட்டது – விஷால்

தயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தை வெளியிடவே பிரச்சனை ஏற்பட்டது – விஷால்

Latest News, Top Highlights
தயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தை வெளியிடவே பிரச்சனை ஏற்பட்டது - விஷால் விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “ ... விஷால் , அர்ஜுன் , சமந்தா நடிப்பில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விஷால் , அர்ஜுன் , இயக்குனர் மித்ரன் , எடிட்டர் ரூபன் , கலை இயக்குனர் உமேஷ் , நடிகர் காளி வெங்கட் , ரோபோசங்கர் , எழுத்தாளர்கள் ஆண்டனி பாக்யராஜ் , பொன் பார்த்திபன் , காஸ்டியூம் டிசைனர் சத்யா , ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டார். விழாவில் விஷால் பேசியது :- இந்த படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு காட்சியில் என்னுடன் பாங்க் ஏஜ...
கொலைகாரன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு வில்லன் ஆகும் அர்ஜுன்

கொலைகாரன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு வில்லன் ஆகும் அர்ஜுன்

Latest News, Top Highlights
விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் படம் காளி. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் நாயகிகளாக நடித்துள்ளனர். காளி படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது கணேசா இயக்கத்தில் ‘திமிரு பிடிச்சவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரும்புத்திரை படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் ஒப்புக் ...
அறிமுக நாயகி தன்யாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்

அறிமுக நாயகி தன்யாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்

Latest News, Top Highlights
‘18.5.2009’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இதில் கதாநாயகியாக தன்யா ரபியா பானு நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மர்ம நபர் நள்ளிரவு 1 மணிக்கு போன் செய்து ஆபாச வார்த்தைகளால் பேசியும், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியும் இருக்கிறார். இதுதொடர்பாக, நடிகை தன்யா சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், நடிகைக்கு மர்ம நபர் போன் செய்து கொலை மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...
இணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரமின் சாமி 2

இணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரமின் சாமி 2

Latest News, Top Highlights
விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹரி இயக்கிய இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசி கட்ட படப்படிப்பு காரைக்கடியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். மேலும் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வருகிற 17-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்காகி இருக்கிறது....
தன் சகோதரனுக்காக நடனம் ஆடும்  யுவன் ஷங்கர் ராஜா.

தன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.

Latest News, Top Highlights
தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பதை நிரூபித்து இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கும் "பியார் பிரேமா காதல்" படத்தில் இடம் பெற்று உள்ள high on love பாடல் மூலம் தன்னுடைய பெருகி வரும் ரசிகர் பட்டாளத்தை மேலும் விஸ்தரித்துக் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா , தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் ( இளையராஜாவின் அண்ணன் ஆர் டி பாஸ்கரின் மகன்) நடிக்கும் பேய் பசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார். படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் கவினயம். சூது கவ்வும், தீயாய் வேலை செய்யணும் குமாரு, ஆகிய படங்களுக்கு இவர் இணை கதை ஆசிரியர் என்பது குறிப்பிட தக்கது. யுவனின் நடனத்தை பற்றி அவர் கூறியதாவது "இந்த படம் ஒரு திரில்லர் படம்.திரைக்கதையில் பாடல்கள் பொருந்தாது என்று கருதி பாடல்களை தவிர்த்து விட்டோம்.இ...