Monday, November 9
Shadow

Top Highlights

காவேரி பிரச்சனை ரஜினிக்கு கமல் அழைப்பு

காவேரி பிரச்சனை ரஜினிக்கு கமல் அழைப்பு

Latest News, Top Highlights
காவிரி விவகாரத்தில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம் என்று கூறியுள்ள மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், மே 19-ந்தேதி விவசாயிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சி நல்லகண்ணு ஆகியோருக்கு கமல் அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்ததாகவும், அதையடுத்து இன்னும் இரண்டு தினங்களில் பதில் சொல்வதாக ரஜினி கூறியிருப்பதாகவும் கூறியுள்ளார் கமல்....
அஜித் அடுத்த படத்தை தயாரிக்கபோவது யார் தெரியுமா

அஜித் அடுத்த படத்தை தயாரிக்கபோவது யார் தெரியுமா

Latest News, Top Highlights
நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ‘விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங், கடந்த 7-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது. இந்தப் படத்துக்காக அங்கு மிகப்பெரிய செட் போடப்பட்டுள்ளது. முதன்முதலில் பாடல்களைப் படமாக்கி வருகின்றனர். கடந்த சில படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த அஜித், இந்தப் படத்தில் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார். ‘விசுவாசம்’ படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரித்து வருகிறார். அஜித் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘விவேகம்’ படத்தையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தான் தயாரித்தது. அந்தப் படம் நஷ்டமானதால், தன்னுடைய அடுத்த படத்தைத் தயாரிக்கும...
அதர்வாவுடன் ஜோடி சேரும் ஹன்சிகா படத்தின் தலைப்பு “100”

அதர்வாவுடன் ஜோடி சேரும் ஹன்சிகா படத்தின் தலைப்பு “100”

Latest News, Top Highlights
2015-ம் ஆண்டு ரிலீஸான ‘டார்லிங்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சாம் ஆண்டன். ஜீ.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, கருணாஸ், பால சரவணன், சிருஷ்டி டாங்கே, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். ஹாரர் காமெடிப் படமான இது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மறுபடியும் ஜீ.வி.பிரகாஷை வைத்து ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தை இயக்கினார் சாம் ஆண்டன். ‘கயல்’ ஆனந்தி, சரவணன், கருணாஸ், விடிவி கணேஷ், சார்லி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், நிரோஷா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்தனர். ஆனால், இது சரியாகப் போகவில்லை. இந்நிலையில், அதர்வாவை வைத்து தன்னுடைய மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார் சாம் ஆண்டன். இந்தப் படத்தில் அதர்வா ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். யோகிபாபு, ‘எரும சாணி’ ஹரிஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஆரா சினிமாஸ் தயாரிக்கும் ...
சண்டக்கோழி-2 ரிலீஸ் தேதியை அறிவித்தார் விஷால்

சண்டக்கோழி-2 ரிலீஸ் தேதியை அறிவித்தார் விஷால்

Latest News, Top Highlights
விஷால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `இரும்புத்திரை'. இந்த படத்தை தொடர்ந்து விஷால் தற்போது `சண்டக்கோழி-2' படத்தில் நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. விஷாலின் 25-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரபேற்பை பெற்றுள்ளது. இந...
கீர்த்தி சுரேஷை இனி கையில் பிடிக்க முடியாது தளபதி விஜய் என்ன சொன்னார் தெரியுமா

கீர்த்தி சுரேஷை இனி கையில் பிடிக்க முடியாது தளபதி விஜய் என்ன சொன்னார் தெரியுமா

Latest News, Top Highlights
நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி கணேசனாக நடிக்க கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்தபோதே பலரும் இயக்குனர் நாக் அஸ்வினை பார்த்து சிரித்தார்கள். போயும் போய் கீர்த்தி சுரேஷா, வேறு நடிகையே கிடைக்கவில்லையா என்றார்கள். நாக் அஸ்வின் யார் பேச்சையும் கேட்கவில்லை. கீர்த்தி சுரேஷை சாவித்ரியாக நடிக்க வைத்தே தீர்வேன் என்று உறுதியாக இருந்தார். நடிகையர் திலகம் படத்தை பார்த்தவர்களால் அவர்களின் கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை. காரணம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அசத்திவிட்டார். கீர்த்தியா இது இல்லை சாவித்ரியா என்று கேட்கும் அளவுக்கு நடித்துள்ளார் இத்தனை நாள் இந்த நடிப்பை எல்லாம் எங்கே வச்சிருந்தீங்க கீர்த்தி என்று கேட்கும் அளவுக்கு நடித்திருக்கிறார். தனக்கு நடிக்க வராது என்று கூறி மற்றவர்கள் கேலியாக சிரித்ததை சவாலாக எடுத்துக் கொண்டு இந்த படத்தில் நடித்துக் காட்டியுள்ளார். நடிகையர் திலகம் படத்த...
டி. டி. பற்றி இதுவரை வெளிவராத தகவல் இரண்டு வருடம் மாயம் ஏன்

டி. டி. பற்றி இதுவரை வெளிவராத தகவல் இரண்டு வருடம் மாயம் ஏன்

Latest News, Top Highlights
டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் மீண்டும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார். 2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட தமிழ் தொலைக்காட்சி பெண் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை டைம்ஸ். இந்த பட்டியலில் டிடிக்கு தான் முதல் இடம் கிடைத்துள்ளது. அதிகம் விரும்பப்பட்ட தொலைக்காட்சி பிரபலமாக தேர்வு செய்யப்பட்டதில் டிடி மகிழ்ச்சியில் உள்ளார். மக்களுக்கு என்னை பிடிக்கும் என்று தெரியும், ஆனால் விரும்பப்பட்டவளாக இருப்பது தெரியாது என்கிறார் டிடி. 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் டிவியில் இருந்து பிரேக் எடுத்தேன். நான் பிரேக் எடுத்ததற்கான காரணம் மக்களுக்கு தெரியாது. என் முழங்காலில் பாதிப்பு ஏற்பட்டு நான் இனி நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள...
வீரமாதேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி.. செம வெய்ட்டு கேரக்டரில் கவர்ச்சி நடிகை  சன்னி லியோன்!

வீரமாதேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி.. செம வெய்ட்டு கேரக்டரில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!

Latest News, Top Highlights
ஆபாசப் படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சன்னி லியோன் தற்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, இந்திய மொழிகளின் சினிமாக்களில் நாயகியாக நடித்து வருகிறார் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் 'வீரமாதேவி' சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை சன்னி லியோன். இப்படத்தின் மூலம் அவரது இமேஜ் மாறும் எனக் கூறப்படுகிறது. சரித்திரப் படமாக உருவாகும் இப்படத்தில் சன்னி லியோன் 'வீரமாதேவி' கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக, வாள் சண்டை மற்றும் குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு நடித்திருக்கிறார் சன்னி. இந்தப் படத்தில் நாசர், நவ்தீப் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட இருக்கிறது. 'வீரமாதேவி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே 18-ம் தேதி ரிலீஸாக இரு...
மே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்

மே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்

Latest News, Top Highlights
விதியை மாற்றும் வலிமையான ஆயுதம் என்று ஒன்று இருந்தால், அது காதல் தான். இரண்டு மனங்கள் ஒத்துப் போனால் அங்கு இனிமையான தருணங்களை எதனாலும் அழிக்க முடியாது. ஒருவர் தன்னை இன்னொருவரிடம் இழக்கும் போது, அதை விடவும் இழப்பதற்கு இந்த உலகில் ஒன்றும் இல்லை. ஒரு பெண் இயக்குனர் காதல் கதை எழுதும்போது அதனுள் ஆழமான எமோஷன் இருக்கும். அபியும் அனுவும் படத்தின் விளம்பர காட்சி ப்ரோமோ மற்றும் பாடல்கள் அதை பறை சாற்றுகின்றன. இயக்குனர் பிஆர் விஜயலக்‌ஷ்மி தனிச்சிறப்புடைய காதலை அழகுபடுத்தி படத்தில் காட்டியிருக்கிறார். "அபி (டொவினோ தாமஸ்) மற்றும் அனு (பியா பாஜ்பாய்) கதாபாத்திரங்கள் முற்றிலுமாக வேறு உலகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பாதை ஒரு இடத்தில் சந்திக்கும்போது, அவர்களின் புது பயணம் தொடங்குகிறது, அதன் பிறகு நிறைய சவால்களை கடக்க வேண்டி வருகிறது. கதாபாத்திரங்களை எழுதி முடித்து, அதற்கான வடிவத்தை கொடுக்கும் பொழுதே டொவின...
ஜெயசூர்யா பட டிரைலரை வெளியிட்ட திருநங்கைகள்

ஜெயசூர்யா பட டிரைலரை வெளியிட்ட திருநங்கைகள்

Latest News, Top Highlights
படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் மலையாள நடிகர் ஜெயசூர்யா, தற்போது தனது ஆஸ்தான இயக்குனரான ரஞ்சித் சங்கரின் டைரக்சனில் 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கேரக்டரில் ஜெயசூர்யா நடித்திருக்கிறார். சமீப நாட்களாக இவர் திருநங்கை வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திருநங்கைகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் ஐந்து பேரை மேடைக்கு அழைத்து இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட வைத்தனர் படக்குழுவினர்....
ஒரு படம் தோல்வியால் காதலில் விரிசல் அதோடு தன் படத்தில் நடிகை தடை போட்ட முன்னணி நடிகர்

ஒரு படம் தோல்வியால் காதலில் விரிசல் அதோடு தன் படத்தில் நடிகை தடை போட்ட முன்னணி நடிகர்

Latest News, Top Highlights
நீண்டகாலமாக காதலர்கள் என்ற போர்வையில் வாழ்ந்து வருகின்றனர் இந்த வெற்றிகரமான நாயகனும், அங்காடி நாயகியும். எப்போது திருமணம் எனக் கேட்பவர்களிடம் நழுவி விடும் இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் படங்களுடம் செய்தி வெளியானது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் வெள்ளித்திரையில் ஜோடி சேர்ந்தனர். வானில் பறக்கும் குழந்தைகளுக்குப் பிடித்தமான பொருளின் பெயரில் உருவான அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை இதனால் நாயகன் ரொம்பவே அப்செட்டாம். இதனால், முன்பைப் போல நாயகிக்கு யாரிடமும் சிபாரிசு செய்வதில்லையாம். இதனால் நாயகியும் ரொம்ப ரொம்ப அப்செட்டாம். படதோல்வியால் இருவரின் காதலிலும் விரிசல் விழுந்திருப்பதாக காதைக் கடிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்....