Monday, November 9
Shadow

Top Highlights

அரும்பே” பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா.

அரும்பே” பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா.

Latest News, Top Highlights
வரும் 18ஆம் தேதி வெளி வர உள்ள "காளி" மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகை ஆகாது.விஜய் ஆண்டனி நடித்து , இசை அமைக்க , விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் "காளி" படத்தில் வரும் "அரும்பே" இணைய தளத்தில் ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது.அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து இருக்கும் இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத், இப்போதே ரசிகர்களின் கனவு கன்னியாகி தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டு உள்ளார். " காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் பட்டியல் என இந்த படத்தில் வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்க...
குமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு தனது காரிலே உதவி செய்த கமல்ஹாசன்

குமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு தனது காரிலே உதவி செய்த கமல்ஹாசன்

Latest News, Top Highlights
தமிழ் நாட்டில் இன்று நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்து விட்டது என்று தான் சொல்லணும் ஆம் விஜய் அடுத்து கமல் ரஜினி இப்ப ஆர்.ஜே.பாலாஜி இதில் முழுமையான அரசியவாதியாக களம் இறங்கி இருப்பது உலக நாயகன் கமல்ஹாசன் என்று தான் சொல்லணும் ஆம் தன் கட்சியின் பெயர் சின்னம் கொள்ள்கை இவை அனைத்தையும் மிக தெளிவாக கூறி தனது அரசியல் செல்வாக்கை மக்களிடம் பெற்று வருகிறார். அதோடு மக்களை மாவட்டம் மாட்டமாக சென்று மக்களின் பிரச்னைகளை கேட்டு அறிந்து வருகிறார் அதோடு அடிக்கடி மக்களையும் தனது கட்சி தொண்டர்களையும் தனது அலுவலகத்தில் சந்தித்து வருகிறார் .மக்கள் குவியும் இடங்களில் தனது தொண்டர்களை வைத்து கட்சியில் மக்களை தன் பக்கம் இழுத்து வருகிறார் அந்த வகையில் கமல்ஹாசன் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் குறை கேட்டு அறிந்து வருகிறார் . இன்று காலையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் முழுதும் மக்களை சந்தித்து வரும் வேளையில் ...
என் சினிமா பயணத்தை தொடங்கிவைத்தது விஜய் அண்ணன் தான் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

என் சினிமா பயணத்தை தொடங்கிவைத்தது விஜய் அண்ணன் தான் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

Latest News, Top Highlights
டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நாயகனாஉக்கு ஜோடியாக க அறிமுகம் ஆகும் படம் ஒரு குப்பை கதை இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடிக்கிறார் இந்த படத்தை காளி ரங்கசாமி இயக்குகிறார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி வாங்கியுள்ளார். இந்த படத்தின் இசைவெளியீடு இன்று சத்யம் திரையரங்கில் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாகநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் மிகமுக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர் அதில் ரெட் ஜெயன்ட் சார்பாக உதயநிதி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஆரம்பித்து இந்த வருடத்தோடு பத்து வருடம் ஆகிறது இந்த நிறுவனம் விஜய் அண்ணாவின் குருவி படத்தின் மூலம் ஆரம்பித்தது என்று கூறினார் இந்த பயணத்தை தொடக்கி வைத்த பெருமை விஜய் அண்ணனை சேரும் என்றும் கூறினார்....
விஜய் வாழ்த்தில் சந்தோஷத்தில் துள்ளல் போடும் அறிமுக இயக்குனர்

விஜய் வாழ்த்தில் சந்தோஷத்தில் துள்ளல் போடும் அறிமுக இயக்குனர்

Latest News, Top Highlights
நடிகர் விஜய், திரையுலகில் புதிதாக சாதிக்க வரும் இளைஞர்களில் தன்னைக் கவர்ந்தவர்களுக்கு எப்போதுமே வாழ்த்துக் கூறி அவர்களை ஊக்குவிப்பார். அந்த வகையில், அவர் சமீபத்தில் வாழ்த்திய புது வரவு இயக்குநர் அருண்ராஜா காமராஜ். அருண்ராஜா காமராஜ் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோரை வைத்து கிரிக்கெட்டை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தை அருண்ராஜா காமராஜின் நண்பர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு 'கனா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இந்நிலையில், அருண்ராஜா காமராஜை தொலைபேசி வழியாக வாழ்த்தியிருக்கிறார் விஜய். இதுகுறித்து அருண்ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "இதயதளபதி விஜய் அண்ணா, நீங்கள் எப்போதும் மற்றவர்களை வாழ்த்தவும், ஊக்கப்படுத்தவும் மறந்ததே இல்லை. காலை எழுந்தவுடன் உங்களது வாழ...
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தன் அரசியல் பிரவேசம் பற்றி மே 18ம் தேதி அறிவிப்பு

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தன் அரசியல் பிரவேசம் பற்றி மே 18ம் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
சமீபத்தில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வு... ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்குகிறார் என்ற சுவர் விளம்பரம் தான். அந்த விளம்பரத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. powered by Rubicon Project கட்சிக் கொடியின் புகைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி ஃபேஸ்புக்கில் வெளியிட ஆர்.ஜே.பாலாஜியும் அரசியல் பிரவேசத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் பரவியது. அதையடுத்து, விசாரித்ததில், கன்னடத்தில் வெளியான 'ஹம்புல் பொலிட்டிஷியன் நொக்ராஜ்' எனும் படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாகவும், அதில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பவிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. அந்தப் படத்தைத் தொடங்கும்போது ப்ரொமோஷனுக்காக இந்த அரசியல் கட்சி விளம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிகிறது. 'இளைஞர்களை வழிநடத்த.. தமிழகத்தில் மாற்றம் காண..' என ஆர்.ஜே.பாலாஜியை வரவேற்று எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில் மே 18 எனும் ...
பிக் பாஸ் சீசன் 2 எப்போது தொடங்குகிறது யார் யார் கலந்துகொள்கிறார்கள் தெரியுமா

பிக் பாஸ் சீசன் 2 எப்போது தொடங்குகிறது யார் யார் கலந்துகொள்கிறார்கள் தெரியுமா

Latest News, Top Highlights
அனைவரும் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது பிக் பஸ் நிகழ்ச்சி அடுத்த சீசனை தான். அண்மைகாலமாகவே நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. கடந்த சிலநாட்களுக்கு முன் தான் மராத்தியில் முதல் சீசன் தொடங்கியது. அடுத்து தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 ம் சீசன் டீசர் வெளியானது. கமல் மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். தமிழ் பிக்பாஸின் முதல் சீசனை தொடர்ந்து தெலுங்கிலும் நடத்தப்பட்டது. நடிகர் சிவபாலாஜி வெற்றி பெற்றார். ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வரும் ஜூன் மாதமே தொடங்கவுள்ளதாம். நடிகர் நானி இதை தொகுத்து வழங்கவுள்ளார். இதன் புரமோ, போஸ்டருக்கான ஷூட்டிங் அவரை வைத்து எடுத்து முடித்துவிட்டார்களாம். எனவே எந்த நேரத்திலும் இந்த டீசர் வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.இந்நிலையில் இந்த போட்டியில் பாடகி கீதா மாதுரி, நிகழ்...
“ஆண்டனி” திரைப்படம் இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் படத்தின் ஆடியோ வெளியீடு!

“ஆண்டனி” திரைப்படம் இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் படத்தின் ஆடியோ வெளியீடு!

Latest News, Top Highlights
மனிதன்ஒருவன் பூமிக்கு அடியில் சிக்சிக்கொள்ளும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் படமான ' ஆண்டனி'யின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டனி புரோடக்ஷன்ஸ் சார்பில் வெப்பம் ராஜா மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஆண்டனி' . இந்தியாவின் முதல் கிளாஸ்டோஃபோபிக் வகை படமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளர் குட்டி குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நிஷாந்த், வைஷாலி ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகின்றனர். பிரபல மலையாள நடிகர் விச்சியாசமான பரிமாணத்தில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் வெப்பம் ராஜா வில்லனாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் தொழில்நுட்ப குழுவினர் உள்பட அனைவருமே புதுமுகங்கள். இந்த படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்...
அனைத்து கண்களையும், கவனத்தையும் கைப்பற்றிய “இரவுக்கு ஆயிரம் கண்கள்” !

அனைத்து கண்களையும், கவனத்தையும் கைப்பற்றிய “இரவுக்கு ஆயிரம் கண்கள்” !

Latest News, Top Highlights
அருள்நிதி, மஹிமா நம்பியார் நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது. கடந்த வார இறுதியில், கடும் போட்டியில் வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' இரும்பு திரையின் இறுக்கமான பிடியையும் உடைத்து வெள்ளித்திரையை தன் வசப்படுத்தியது. மிகவும் புதிரான திரைக்கதையும் தான் அதற்கு ஒரு முக்கிய காரணம். இந்த கிரைம் திரில்லர் படத்தை புத்திசாலித்தனமான திரைக்கதையிக் கொடுத்த இயக்குனர் மு மாறன் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதால் தான் நட்சத்திரங்கள் உருவாகிறார்கள் என்ற நாயகன் அருள்நிதியின் தத்துவத்தை அவரே நிரூபித்திருக்கிறார். நல்ல நடிப்பு தான் ஒரு வெற்றிப் படத்தின் உரம் என்றால், இரவுக்கு ஆயிரம் கண்கள் அந்த சிறந்த நடிப்பை அதிகமாகவே கொண்டிருக்கிறது. உயர்ந்த நல்ல மனதை உடைய மஹிமா நம்பியார், மீண்டும் தலையெடுக்கும் சாயா சிங், சக்தி வாய்ந்த ஆனந்...
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கம் படத்தின் டைட்டில் கனா

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கம் படத்தின் டைட்டில் கனா

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் அதோடு மிக சிறந்த மனிதன் பிறருக்கு உதவி செய்வதில் அதோடு மிக சிறந்த திறமைசாலிகளுக்கு அவர்களின் திறமையை மேம்படுத்தும் எண்ணம் கொண்டவர். அதற்கு மிக சிறந்த ஒரு உதாரணம் என்றால் அது அவரின் இணைபிரியாத நண்பன் நகைசுவை நடிகர் சதீஷ் என்று தான் சொல்லணும் காரணம் சிவா விஜய் டிவியில் இருக்கும் போதே சதீஷ் நண்பர் தன் நண்பர் மிகுந்த திறமை சாலி என்று தன்னுடனே வைத்துகொண்டவர் அதோடு இவருக்கு சான்ஸ் தேடும்போது அவருக்கும் தேடுவார் அப்படிப்பட்ட ஒரு மனிதர் சிவா அதுபோல அருன் ராஜா காமராஜ் ஒரு பாடலாசிரியர் பாடகர் இவைகளைவிட நல்ல நகைசுவை இவருக்குள் இருப்பதை புரிந்தவர் சமீபத்தில் இவர் சிவாவிடம் ஒரு கதை சொல்ல அது அவருக்கு பிடித்து போக உடனே தன் சொந்த தயாரிப்பில் தயாரிக்க முன் வந்தவர் அதுவும் இகுந்த பிரமாண்டமாகவும் அதிக பொருள் செலவிலும் இந்த படம் தயாராகுது இந்த படத்தில் முக்...
ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் – பாலகுமாரன் கவிஞர் வைரமுத்து இரங்கல் IP

ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் – பாலகுமாரன் கவிஞர் வைரமுத்து இரங்கல் IP

Latest News, Top Highlights
பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின்மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது. இரண்டு கைகளாலும் எழுதியவரைப்போல சிறுகதைகளையும் நாவல்களையும் சலிக்காமல் படைத்த சாதனையாளர் பாலகுமாரன். “பெண்களைப் புரிதல்” என்ற ஒற்றை வரிக்கொள்கையை ஊடு சரடாக வைத்துக்கொண்டு அவர் படைத்த எழுத்து இன்னும் பலகாலம் வாசிக்கப்படும். தொழில்நுட்பத்தின் வல்லாண்மையால் வாசிப்பை விட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையை, சட்டையைப் பிடித்து, “உட்கார்ந்து வாசி; பிறகு யோசி” என்று உலுக்கியவர்களில் பாலகுமாரனும் முக்கியமானவர். சலிக்காத நடை அவரது நடை. கரையைத் தொட்டுக்கொண்டே நடக்கும் நதி மாதிரி கவிதையைத் தொட்டுக்கொண்டே நடந்த நடை அவரது உரைநடை. தொடக்கத்தில் அவர் கவிதை எழுத வந்தவர்தான். கவிதையைவிடச் சந்தை மதிப்பு உள்ளது உரைநடைதான் என்பதை...