Sunday, November 8
Shadow

Top Highlights

தங்கை கையை அண்ணன் பிடித்தார் விஜய் ரசிகை பதில்

தங்கை கையை அண்ணன் பிடித்தார் விஜய் ரசிகை பதில்

Latest News, Top Highlights
விஜய் இளம் ரசிகை ஒருவரின் கையை பிடித்திருப்பதை பார்த்து சிலர் அவர் என்ன இப்படி செய்கிறார் என்றார்கள். தளபதி விஜய் கேரளாவை சேர்ந்த இளம் ரசிகை ஒருவரின் தோளில் கையை போட்டு, அவரின் கையை பிடித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. விஜய் ஏன் ஒரு பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். ரசிகை என்றால் இப்படியா செய்ய வேண்டும் என்று சிலர் விமர்சிக்கத் துவங்கிவிட்டார்கள் வழக்கமாக எட்டி இருக்கும் விஜய் ஏன் அந்த ரசிகையின் கையை பிடித்தார் என்பது தெரிந்துவிட்டது. உங்கை கையை தொடலாமா விஜய் அண்ணா என்று அந்த ரசிகை கேட்டதால் அவர் சரி என்று கூறியுள்ளார். மற்றபடி எதுவும் கிடையாது. விஜய்யுடன் புகைப்படத்தில் இருக்கும் ரசிகையின் பெயர் சரண்யா விசாக். அவர் விஜய்யை சந்தித்த பிறகு ஃபேஸ்புக்கில் போட்ட போஸ்ட் வைரலாகி அனைவரின் கவனத்தைய...
காலா இசை வெளியிடு மாஸ் காட்டிய ரஜினி ரசிகர்கள்

காலா இசை வெளியிடு மாஸ் காட்டிய ரஜினி ரசிகர்கள்

Latest News, Top Highlights
காலா ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது காலா திரைப்படம். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த படத்தில் மொத்தம் 9 பாடல்களை வெளியாகிறது. இந்த பாடல்களில் உரிமை, புரட்சி என்பது குறித்து வருவதால் அமைதிக்கு குந்தகம் விளைவித்துவிடுமோ என்ற அச்சத்தில் ரஜினிக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் காலா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா என்றதும் காலை முதலே ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்த விழாவை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கி வருகிறார். விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளும் அழைக்கப்பட்டனர். இந்த விழாவில் 3 நிறத்திலான பாஸ்கள் வழங்கப்பட்டன. அவரவர்களு...
நடிகையர் திலகம் படம் பார்த்து கண் கலங்கிய சாவித்திரி மகள்

நடிகையர் திலகம் படம் பார்த்து கண் கலங்கிய சாவித்திரி மகள்

Latest News, Top Highlights
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான 'மகாநதி' தெலுங்கில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. தமிழில் 'நடிகையர் திலகம்' எனும் பெயரில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் pவெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது. நாக் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். அவரது காதல் கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். பத்திரிகை நிருபர்களாக சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் நடித்துள்ளனர். ரிலீஸுக்கு முன்பு இப்படத்தின் சிறப்புக்காட்சி சாவித்ரியின் குடும்பத்தினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி இப்படத்தை வெகுவாக ரசித்துப் பார்த்துள்ளார். படத்தைப் பார்க்கும்போதே பல இடங்களில் கண்கலங்கி விட்டாராம் சாவித்ரியின் மகள். திரையில் நிஜமாகவே தனது அம்மா சாவித்ரியைப் பார்த்ததுபோலவே இ...
சரியான நேரம் வந்தவுடன் மக்களுக்கு நல்லது நடக்கும் – ரஜினி

சரியான நேரம் வந்தவுடன் மக்களுக்கு நல்லது நடக்கும் – ரஜினி

Latest News, Top Highlights
கட்சி தொடங்க நேரம் வந்தால் மக்களின் ஆதரவுடன் தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள காலா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு ரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விழாவில் அரசியல் குறித்து ரஜினி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்கள் வரவேற்புக்கு மத்தியில் மேடைக்கு வந்த ரஜினி பேசுகையில், இமயமலைக்கு நான் செல்வதே கங்கையை பார்க்கத்தான். என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைத்துவிடிவதுதான். இது முடிந்த பிறகு நான் கண்ணை மூடினாலும் பரவாயில்லை. நல்லவனாக இருக்கலாம் . ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்ககூடாது என்பதை கற்றுக் கொண்டேன். லிங்கா படம் கொஞ்சம் சரியாக போகாததால் லிங்காதான் எனது கடைசி படம் என்று சிலர் கூறின...
மீண்டும் ஒரு ஈழத்து கதை தான் 18.05.2009 திரைபடம்

மீண்டும் ஒரு ஈழத்து கதை தான் 18.05.2009 திரைபடம்

Latest News, Top Highlights
குருநாத் சலசானி தயாரித்திருக்கும் படம் “ 18.05.2009 “சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன். நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி ஆகியோர் நடிக்கிறார்கள். எழுத்து – இயக்கம்: கு.கணேசன் ( இவர் ஏற்கனவே தமிழ் ஈழம் பற்றி “ போர்க்களத்தில் ஒரு பூ “ என்ற படத்தை இயக்கியவர் ) இசை: இசைஞானி இளையராஜா தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள் 2008ம் ஆண்டு இலங்கை அரசால் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட தமிழினப் படுகொலை, 18.05.2009 வரை நீடித்தது. சுமார் ஆறு மாதங்களில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதையும், கடைசி நாளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட 40,000 தமிழ் உறவுகள் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது. .தமிழினத்தில் பிறந்த ஒரே குற்றத்துக்காக அப்பாவிப் பெண்களைக் கூட வெறிபிடித்தமாதிரி வேட்டையாடியது சிங்கள ராணுவம்….. நீதி கேட்டுக் கதறிய அந்த அப...
“ராமர் பாலத்திற்கு பதறியவர்கள் நியூட்ரினோவுக்கு ஆதரவு காட்டும் மர்மம் என்ன..?” ; இயக்குனர் வ.கௌதமன் கேள்வி..! Uyir Kodu Kaveri album launch

“ராமர் பாலத்திற்கு பதறியவர்கள் நியூட்ரினோவுக்கு ஆதரவு காட்டும் மர்மம் என்ன..?” ; இயக்குனர் வ.கௌதமன் கேள்வி..! Uyir Kodu Kaveri album launch

Latest News, Top Highlights
மூத்த நடிகர்களின் ரசிகர்கள் தான் போராட்டங்களை விமர்சிக்கிறார்கள்” ; ‘காவிரி’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமட்சி பரபரப்பு பேச்சு...! இருட்டு அறையில் முரட்டு குத்து’க்கு எதிராக போராடுவதுதான் பாரதிராஜாவின் வேலையா..? ‘காவிரி’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமட்சி ஆவேசம்..! “மணல் அள்ளும் ஸ்லீப்பர்செல்கள் யார்” ; ‘காவிரி’ ஆல்பம் மூலம் உண்மையை உடைத்த இயக்குனர் ராகேஷ்..! “யார் தலைவர் என தெரியாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்” ; அபிசரவணன் ஆதங்கம்..! “போராட்டங்களை திசைதிருப்புவதன் பின்னணியில் சென்சார் போர்டு” ; இயக்குனர் மீரா கதிரவன் பகீர் குற்றச்சாட்டு..! காவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..! “விவசாயிகள் லாபம் பெற இளைஞர்கள் உதவிக்கரம் நீட்டவேண்டும்” ; இந்திரா புராடக்ட்ஸ் பூபேஷ் நாகராஜன்..! ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இ...
அஜித்தின் விசுவாசம் படத்தின் படபிடிப்பு காட்சிகள் லீக் மற்றும் அஜித் பயன் படுத்தும் வண்டி புகைப்படம்

அஜித்தின் விசுவாசம் படத்தின் படபிடிப்பு காட்சிகள் லீக் மற்றும் அஜித் பயன் படுத்தும் வண்டி புகைப்படம்

Latest News, Top Highlights
அஜித் நடித்துவரும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கி ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது விசுவாசம் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிக்கான ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இந்தப் பாடல் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளன. இந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களின் மூலம் சில முக்கியமான விஷயங்கள் தெரியவந்துள்ளன. அஜித் இந்தப் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல் லேசாக ப்ரவுன் ஹேர் ஸ்டைலில் இருக்கிறார். சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு பல மாதங்கள் தள்ளிப்போய் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. 'விவேகம்' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் எதுவும் வெளியாகிவிடக்கூடா...
இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்!

இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்!

Latest News, Top Highlights
இப்படத்தை பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்திற்கு பின்னணி இசையமைத்த 'பிரசன் பாலா' இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து, நடனம் தீனா மற்றும் விஜி. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ண பாண்டி. இவர் தடையற தாக்க, மீகாமன் போன்ற வெற்றி படங்களை தந்த மகிழ்திரு மேனியிடம் உதவியாளராக இருந்தவர். இப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்தவர். நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். திரில்லர் கலந்த காதல் கதையாக உரு...
விஷாலின் இரும்புதிரை வழக்கு தள்ளுபடி  படம் ரிலிஸ் உறுதி

விஷாலின் இரும்புதிரை வழக்கு தள்ளுபடி படம் ரிலிஸ் உறுதி

Latest News, Top Highlights
"டிஜிட்டல் இந்தியா" திட்டம் குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் நடிகர் விஷால் நடித்த "இரும்புத்திரை" படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர்கள் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் " இரும்புத்திரை ". இப்படத்தில், ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தபடுவதை போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து நாமக்கல் மாவட்டம் தத்தியாபுரத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள், பார்த்திபன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது மக்களின் நலனுக்காக 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஆதார் அடையாள அட்டை குறித்து இரும்புத்திரை படத்தில் தவறா...
பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ள தயார் பிரபல நடிகை அதிரடி

பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ள தயார் பிரபல நடிகை அதிரடி

Latest News, Top Highlights
என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை நிகிஷா பட்டேல். தற்போது கஸ்தூரி ராஜ இயக்கத்தில் ஜாக்கி செராப் ஜோடியாகவும் பாண்டிமுனி படத்திலும் நடித்து கொண்டுயிருக்கிறார். அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறேன். இந்தி படங்களிலும் வாய்ப்பு வருகிறது. ஆனால் முன்னணி நடிகர் ஜோடியாகவும், ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ஸ்கிரிப்ட் வந்தால் நடிப்பேன். தமிழில் 2 வருடத்துக்கு பிறகு மீண்டும் பாண்டிமுனி படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறேன். திரையுலகில் சமீபகாலமாக காஸ்டிங் கவுச் பிரச்னை பேசப்பட்டு வருகிறது. நடிகைகள் படுக்கைக்கு உடன்பட்டால்தான் வாய்ப்பு தரப்படுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி முன்பே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அப்படியொரு நிலைமை இருக்கிறது என்பது கசப்பான உண்மைதான். ஆனால் இது சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமா துறை என்பதால...