Sunday, November 8
Shadow

Top Highlights

அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல் ” திரைப்படம் தமிழகமெங்கும் மே 11 ஆம் தேதி ரிலீஸ்

அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல் ” திரைப்படம் தமிழகமெங்கும் மே 11 ஆம் தேதி ரிலீஸ்

Latest News, Top Highlights
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். 'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.இப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக இருந்தது.தற்போது இந்த படத்தின் வெளீயீட்டு தேதி மாற்றப்பட்டு உள்ளது. "அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் "திரைப்படம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏப்ரல் 27 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகிறது. இதனால் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட "பாஸ்கர் ஒரு ர...
குழந்தைகள் மனதை பிரதிபலிக்கும் செயல் -குறும்படம்

குழந்தைகள் மனதை பிரதிபலிக்கும் செயல் -குறும்படம்

Latest News, Top Highlights
நாம் செய்யும் செயல்களை திருப்பி செய்வதில் குழந்தைகளை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. இதை எப்படி கற்றுக் கொள்கின்றனர் என்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் செய்யும் காரியங்களை மிக உன்னிப்பாக கவனிக்கும் சிறுவர்கள் நாம் இருக்கும் போதும் நாம் இல்லாத போதும் அதை செய்து பார்க்கின்றனர். போனில் பேசுவது, முகத்தில் பவுடர் பூசுவது போன்ற செயல்களை நம்மை பார்த்து கற்றுக் கொண்டு அதை திரும்பச் செய்கின்றனர்....
நடிகர் ஆர்யாவுக்கு உறவுக்கார பெண்ணுடன் திருமணமா அப்போ அந்த மூன்று பேர் ?

நடிகர் ஆர்யாவுக்கு உறவுக்கார பெண்ணுடன் திருமணமா அப்போ அந்த மூன்று பேர் ?

Latest News, Top Highlights
ஆர்யாவுக்கு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரின் அம்மா முடிவு செய்துள்ளாராம். ஆர்யாவுக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது ஆனால் இன்னும் திருமணம் நடக்கவில்லை. இந்நிலையில் டிவி சேனல் ஒன்று அவருக்கு பெண் தேடும் நிகழ்ச்சியை நடத்தியது. நடிகரோ எந்த பெண்ணையும் தேர்வு செய்யாமல் எஸ்கேப் ஆகிவிட்டார். பொதுவாக ஆர்யா பெண்கள் கொஞ்சம் அப்படி இப்படி என்ற விஷயத்தால் தான் அவருக்கு பெண் கிடைப்பதில் பிரச்சனையாக உள்ளது என்று கூறப்பட்ட நிலையில் டிவி நிகழ்ச்சிக்கு வந்த பெண்களில் யாரையும் அவர் தேர்வு செய்யவில்லை. டிவி நிகழ்ச்சியிலும் பெண்ணை தேர்வு செய்யாததை பார்த்த நடிகரின் அம்மா ஒரு முடிவுக்கு வந்துள்ளாராம். அதாவது உறவுக்கார பெண்ணை நடிகருக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானித்துள்ளாராம். அப்போ, டிவி நிகழ்ச்சியில் தேர்வான 3 பேரில் ஒருவரை நடிகர் திருமணம் செய்ய மாட்டாரா? யாரை தேர்வு செய்வது என்பதை தீர்மானி...
தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’

தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’

Latest News, Top Highlights
ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரித்துள்ள படம் 'என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா'. அல்லு அர்ஜூன், அனு இம்மானுவேல், அர்ஜூன், சரத்குமார், நதியா, பொமன் இரானி நடித்திருக்கும் இந்த படம் வரும் மே 4 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஆந்திராவில் ஞானவேல்ராஜா ஒரு பிராண்ட். அவர் வெளியிட்ட அனைத்து படங்களுமே வெற்றிப்படங்கள் தான். அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படத்தை ஞானவேல் தான் தயாரிக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் நடித்த லட்சியம் படத்துக்கு பிறகு இந்த படத்தை . இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுக்க ஆசைப்பட்டோம். சில காரணங்களால் டப் செய்து ம...
விஷாலின் இரும்புத்திரை ரிலீஸ் தேதியில் மாற்றம்

விஷாலின் இரும்புத்திரை ரிலீஸ் தேதியில் மாற்றம்

Latest News, Top Highlights
மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடித்திருக்கும் 'இரும்புத்திரை' திரைப்படம் மே 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தேதியில் 'இரும்புத்திரை' திரைப்படம் ரிலீஸ் ஆகாது என விஷால் தற்போது மறுத்துள்ளார் இரும்புத்திரை' ரிலீஸில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை தீர்க்கவேண்டியது எனது கடமை எனத் தெரிவித்துள்ளார் விஷால். படத்தை வாங்கியவர்கள் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் அனுமதியின்றி ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதாகக் கூறியிருக்கிறார். விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருக்கும் 'இரும்புத்திரை' திரைப்படம் சினிமா ஸ்ட்ரைக்குக்கு முன்பே ரிலீஸுக்கு தயாரானது. மற்ற திரைப்படங்களின் வெளியீட்டுக்கு வழிவிடும் விதமாக ரிலீஸ் மார்ச் மாதத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதற்குப் பிறகு ஸ்ட்ரைக் தொடங்கியதால் எந்தப் படங்களுமே கடந்த வாரம் வரை வெளியாகவ...
விஜய் தான் எனது அடுத்த டார்கெட் சொல்லும் இளம் நடிகர் ஏன் எதுக்கு

விஜய் தான் எனது அடுத்த டார்கெட் சொல்லும் இளம் நடிகர் ஏன் எதுக்கு

Latest News, Top Highlights
பொதுவாக இளமை நடிகர்கள் எப்போதும் விஜய் மற்றும் அஜித் இவர்களை முன் உதாரணமாக வைத்து தான் நடிப்பார்கள் இவர்கள் இடத்தை எப்படியாவது பிடிக்கணும் என்ற எண்ணம் இல்லாத இளம் நடிகர்களே இல்லை என்று சொல்லலாம் அதிலும் பலருக்கு விஜய் மீது தான் கண் அதில் இவருக்கும் விஜய் தான் டார்கெட் என்று சொல்லி இருக்கிறார் . நடனம் என்றாலே தமிழ் சினிமா நடிகர்களுக்கு முதலில் நியாபகம் வருவது பிரபுதேவா மற்றும் விஜய். இவர்களது படங்களில் நடனத்திற்கு பஞ்சமே இருக்காது. தற்போது வளர்ந்து வரும் இளம் நடன இயக்குனர்கள் எல்லாம் இவர்களை ஒரு ரோல் மாடலாக வைத்திருக்கிறார்கள் என்றே கூறலாம். அப்படி நடனத்தில் மிகுந்த ஆசை கொண்டவர் நடிகர் சாந்தனு. இவர் சமீபத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து குலேபா என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அவருடன் நடனம் ஆடியதற்கு பிரபுதேவாவிற்கு நன்றியை கூறிய சாந்தனு அடுத்து என்னுடைய டார்க்கெட் விஜய் அவர்கள் தான் எ...
கமல் ஆரம்பிக்கும் கிராம சபை

கமல் ஆரம்பிக்கும் கிராம சபை

Latest News, Top Highlights
நடிகர்களில் நான் நீ என்று போட்டு போட்டு கொண்டு தற்போது அரசியல் வருகிரார்கலத்தில் போட்டியாக ரஜினி கமல் போட்டி தான் அதிகம் சினிமாவில் மிக சிறந்த நண்பர்களாக இருந்த இவர்கள் அரசியலில் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் .இதில் கமல் தனது கட்சி இதுதான் கொடி இதுதான் கொள்கை இது தான் என்று அறிவித்து படு வேகமாக செயப்பட்டு வருகிறார் ஊராட்சிகளில் நடத்தப்படும், கிராம சபை கூட்டம் போல், சென்னையில், மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல், மாதிரி கிராம சபை கூட்டத்தை அறிவித்துள்ளார். 'கிராம சபை கூட்டம்' என்பது, ஊராட்சி மன்ற தலைவரால் நடத்தப்படும். இதில், நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மை, வளர்ச்சி திட்டங்கள், பொதுமக்களை ஒருங்கிணைத்தல் போன்றவை குறித்து, விவாதிக்கப்படும். இதே பாணியில், சென்னை, ஆழ்வார்பேட்டையில், மாதிரி கிராம சபைக் கூட்டத்தை, நடிகர் கமல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து, கமல் வ...
“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்

“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்

Latest News, Top Highlights
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பாக வி.ராஜா தயாரித்திருக்கும் “ அருவா சண்ட “ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய “ இவ சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி முத்தாடு மீசை முறுக்கி.. இது சத்தான சரக்கு சர்வீசும் இருக்கு ஜி எஸ் டி இல்ல உனக்கு “ என்ற பட்டைய கெளப்பும் பாடலுக்கு பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு டான்ஸ் மாஸ்டர் தீனா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. “எம் பேரு மீனாகுமாரி” பாடல் புகழ் அனிதா இந்த பாடலை கிக் ஏற்றும் குரலில் பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் நடித்திருக்கும் மும்பை அழகி சுப்ரா கோஷிற்கு தமிழில் இதுதான் முதல் படம். அவர் தனது நளினமான நடன அசைவுகளில் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். சிட்டி மட்டுமல்லாமல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கெள...
விஜய் அஜித் சம்பளத்தை பற்றி விமர்சனம் செய்த பிரபல தயாரிப்பாளர்

விஜய் அஜித் சம்பளத்தை பற்றி விமர்சனம் செய்த பிரபல தயாரிப்பாளர்

Latest News, Top Highlights
என் பெயர் சூர்யா... என் வீடு இந்தியா படத்தின் பிரஸ் மீட் சென்னை தற்போது நடந்து வருகிறது இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரன் நடிக்குறார் இந்த படம் தெலுங்கு மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாராகிவருகிறது இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது இதனால் இப்படத்தின்ப்றேச்ச்மீடில் பல வி ஐ.பி.கலந்து கொண்டு பேசினார்கள் இதில் பேசிய பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தமிழ் நடிகர்களின்சம்பலத்தை பற்றி பேசினார். தமிழ் திரையுலகம் டோலிவுட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமாக விஷயம் இருக்கிறது..அங்கு 100 கோடி வசூல் நிஜமாக செய்யும் நாயகன் சம்பளம் ஜச்ட் 12 கோடி மட்டுமே.. அதே ரேஞ்சில் இருக்கும் தமிழ் ஹீரோக்கள் 50 கோடி டிமாண்ட் செய்கிறார்கள். இதனால் தமிழ் நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குகிரார்கலென்று மறைமுகமாக விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களை குறை கூறியுள்ளார்...