Monday, November 9
Shadow

Top Highlights

சாந்தினி’ நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ‘ஐல’..!

சாந்தினி’ நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ‘ஐல’..!

Latest News, Top Highlights
சினிமாவை பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும்.. மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத்தருவதால் அறிமுக இயக்குனர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தை திருப்புகின்றனர்.. அந்தவகையில் அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி..! .. ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர், ஜே.ரவீந்திரன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர். திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி , ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி நடிகர்களை வைத்து தமிழ் , மலையாள படக்களை தயாரித்தவர். தற்சமயம் இருவரும் பிரான்ஸ், சுவிஸ் & இந்தியாவில் Re...
காதல் மன்னன் துல்கர் சல்மானின் ஜோடியாக 4 இளம் நாயகிகள்

காதல் மன்னன் துல்கர் சல்மானின் ஜோடியாக 4 இளம் நாயகிகள்

Latest News, Top Highlights
மலையாள சூப்பர் ஸ்டார் மமுட்டி மகான் துல்கர் சல்மான் தமிழில் தற்போது மிகவும் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளார் ஆம் முதலில் ஒன்று ரெண்டு படங்கள் நடித்த இவர் தற்போது முழு நேர தமிழ் நடிகராக மாறியுள்ளார். மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து வரும் படம் 'கண்ணு கண்ணும் கொள்ளையடித்தால்'. துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்கும் இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார். இந்த நிலையில் இன்னொரு தமிழ்ப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் துல்கர். துல்கருக்கு ஜோடியாக 4 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்! ஒருவர் நிவேதா பெதுராஜ், இன்னொருவர் 'அர்ஜுன் ரெட்டி' படப் புகழ் ஷாலினி பாண்டே! மற்ற இரண்டு ஹீரோயின்களுக்கான தேர்வு இப்போது நடந்து வருகிறது. தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை கார்த்திக் என்ற புதியவர் இயக்குகிறார், ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய...
விஷாலின் இரும்பு திரை படத்தின் ரிலிஸ் தேதி உறுதி செய்த விஷால்

விஷாலின் இரும்பு திரை படத்தின் ரிலிஸ் தேதி உறுதி செய்த விஷால்

Latest News, Top Highlights
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘இரும்புத்திரை’, மே மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சயின்ஸ் பிக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில், மேஜர் கதிரவன் என்ற ராணுவ அதிகாரியாக விஷால் நடித்துள்ளார். ‘ஒயிட் டெவில்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். முதலில் இந்த வேடத்தில் ஆர்யா நடிப்பதாக இருந்தது. அவரால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட, அர்ஜுன் ஒப்பந்தமானார். டாக்டர் ரதிதேவி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி...
ரஜினியை சந்தித்த மெர்குரி பட குழு

ரஜினியை சந்தித்த மெர்குரி பட குழு

Latest News, Top Highlights
45 நாள் சினிமா வேலை நிறுத்தத்திற்கு பிறகு வெளியான முதல் படம் மெர்க்குரி. ஹாலிவுட் பாணியில் உருவாகியிருக்கும் சைலண்ட் த்ரில்லர் படமான மெர்க்குரியை ரஜினி தனது வீட்டு தியேட்டரில் பார்த்தார். பின்னர் அவர் மெர்க்குரி கலைஞர்களை சந்தித்து பாராட்டு தெரிவிக்க விரும்பினார். இதன் அடிப்படையில் நேற்று மெர்க்குரி டீம் ரஜினியை சந்தித்தனர். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் சனான்ந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ஷன்ஷக் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன், நடிகை இந்துஜா, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் திரு. ஆகியோர் ரஜினியை சந்தித்தார். அவர்களிடம் ரஜினி படத்தில் வரும் காட்சிகளை தனித்தனியாக சொல்லி வியந்து பாராட்டினார். குறிப்பாக பிரபுதேவா, இந்துஜா நடிப்பையும், பின்னணி இசையையும் வெகுவாக பாராட்டினார். பிரபுதேவா ஹிந்திப் பட பணிகள் காரணமாக மும்பையில் இருப்பதால் அவர் இதி...
தல அஜித்யின் விசுவாசம் படத்தின் புது அப் டேட்

தல அஜித்யின் விசுவாசம் படத்தின் புது அப் டேட்

Latest News, Top Highlights
அஜித் விசுவாசம் படபிடிப்பு இப்போ அப்போ என்று சொல்லி கொண்டே தான் இருகிறார்கள் இந்த நேரம் பார்த்து வேலை நிருத்தம் வேறு வந்தது இந்த கட்ட்தில் படம் தீபாவளிக்கு வெலியாகுமா என்று ஒரு கேள்விக்கு பதில் இதோ. அஜித் வீரம் , வேதாளம், விவேகம் என தொடர்ந்து மூன்று படங்களில் சிவா இயக்கத்தில் நடித்திருந்தார், தற்போது மீண்டும் நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தின் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். ஜனவரி மாதமே தொடங்க இருந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் தள்ளி போய் கொண்டே இருந்தது, தற்போது வரும் மே 4-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக அதிரடியாக தகவல் வெளியாகி உள்ளது. இது தல...
ஸ்ரீ ரெட்டியை ஆட்டி படைக்கும் பிரபல இயக்குனர் கசிந்த உண்மை தகவல்

ஸ்ரீ ரெட்டியை ஆட்டி படைக்கும் பிரபல இயக்குனர் கசிந்த உண்மை தகவல்

Latest News, Top Highlights
தெலுங்கு சினிமா உலகம் இப்போது ஸ்ரீ லீக்ஸ் சர்ச்சையால் பெரும் பதட்டத்தில் இருக்கிறது. அண்மமையில் நடிகை ஸ்ரீ ரெட்டி பொது இடத்தில் ஆடைகளை கழற்றி நின்று போராட்டம் செய்தார். இந்த சர்ச்சையின் பின்னணியில் நடிகர் ராணாவின் தம்பி அபிராம் மற்றும் சில தயாரிப்பாளர்களும் சிக்கினர். தொடர் சர்ச்சையில் நடிகர் பவன் கல்யான் ரெட்டியின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தார். இதனால் அந்த நடிகை செருப்பால் தன்னை அடித்துகொண்டு அவரின் கருத்துக்கு மறுகருத்து தெரிவித்திருந்தார். இது பவன் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை கிளப்பியது. இந்நிலையில் ஸ்ரீ மன்னிப்பு கேட்டு, தனக்கு ரூ 10 கோடி தருவதாக சொல்லி பின்னால் இருந்து என்னை தூண்டிவிட்டதால் பவனுக்கு எதிராக பேசினேன் என கூறினார். தற்போது சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா நான் தான் ஸ்ரீ ரெட்டியை அப்படி செய்ய சொன்னேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையி...
S.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்

S.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்

Latest News, Top Highlights
பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் பட நிறுவனங்கள் இணைந்து தற்போது “ பியார் பிரேமா காதல் “ படத்தை தயாரித்துக்கொண்டு இருகிறார்கள். இதை தொடர்ந்து விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்க “ பண்ணையாரும் பத்மினியும் “ “ சேதுபதி “ வெற்றிப் படங்களை இயக்கிய S.U.அருண்குமார் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்கிறார்கள். விஜய்சேதுபதி நடிக்கும் இந்த படம் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப் பட உள்ளது. இந்த படத்தில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்கிறார் மற்றும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இயக்குனர் S.U.அருண்குமார் நாயகன் விஜய் சேதுபதி இருவரும் இணையும் மூன்றாவது படம் என்பது குறிபிடத்தக்கது. இன்னும் பெயரிடப் படாத இந்த ப...
இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் கரு படத்தின் தலைப்பு மாறியது

இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் கரு படத்தின் தலைப்பு மாறியது

Latest News, Top Highlights
இயக்குனர் விஜய் படங்கள் என்றாலே நிச்சயம் குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாகவும் அதே சமயத்தில் சமுகத்தை மையமாகவும் கதைகள் இருக்கும் அதே நேரத்தில் தரமான படங்களாகாகவும் இருக்கும் அதே சமயத்தில் இவரின்படங்கள் வெற்றிபடங்கலாகவும் அமைந்துள்ளது இப்படி பட்ட தரமான இயக்குனர் விஜய்யின் அடுத்த படம் கரு என்று இருந்த இந்த படத்தின் பெயர் தற்போது தியா என்று மாற்றியுள்ளனர். `வனமகன்' படத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய் எடுத்திருக்கும் திரைப்படம் `கரு.' தற்போது இந்தப் படத்தின் பெயர் `தியா' என்று மாறியிருக்கிறது. மலையாளத்தில் வெளியான `பிரேமம்' படத்தின் மூலமாக தமிழகத்தில் ஃபேமஸ் ஆனவர் நடிகை சாய் பல்லவி. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள கரு படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இதற்கிடையில் இந்தப் படத்...
மீண்டும் தான் சிறந்த தலைவன் என்று நிருபித்த விஷால்  வசூலை பொருத்தே நடிகர் சம்பளம்

மீண்டும் தான் சிறந்த தலைவன் என்று நிருபித்த விஷால் வசூலை பொருத்தே நடிகர் சம்பளம்

Latest News, Top Highlights
விஷால் தன்னை நடிகர் மட்டும் இல்லை நான் தயாரிப்பாளரும் என்று மிருபித்துள்ளார் என்று தான் சொல்லனும் காரணம் சில் ஏன் குரிபிட்ட நபர்கள் நடிகர்கள் சம்பளம் குறைக்க வேண்டும் அப்ப தான் தயாரிப்பாளர்கள் சுமை குறையும் என்று தொடர்ந்து வலியுறுத்தினத் அதையும் என்னால் முடியும் என்று சாதித்து காட்டியுள்ளார். சினிமா ஸ்டிரைக்கிற்கு பிறகு பல அதிரடியான நடவடிக்கைகள் தமிழ் சினிமாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒரு விஷயம் நடிகர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பானது. இதுதொடர்பாக, நடிகர் சங்கத்தினர் சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை செய்தனர். தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடிகர்கள் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, ஆர்யா, கலையரசன், சுஹாசினி, கஸ்தூரி, நகுல், ஜிவி பிரகாஷ், பரத், கவுதம் கார்த்திக், கணேஷ் வெங்கட்ராம், கிருஷ்ணா...
இதுக்காக தவிக்கும் பிந்து மாதவி

இதுக்காக தவிக்கும் பிந்து மாதவி

Latest News, Top Highlights
காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் தங்களது அழகிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். ராதிகா ஆப்தே, இலியானா, ராய் லட்சுமி உள்ளிட்ட சில நடிகைகள் பிகினி போட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு அட்டாக் பண்ணி வருகிறார்கள். இந்நிலையில், பிந்து மாதவியோ சில வாரங்களுக்கு முன்பு சினிமா வேலைகள் இல்லாததால் ஆடு மேய்க்க செல்கிறேன் என்று சொல்லி தான் ஆடு மேய்ப்பது போன்ற ஒரு போட்டோவை இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது தலைவிரி கோலத்தில் தான் இருக்கும் ஒரு அதிர்ச்சி தரும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதோடு, நேற்று இரவு முழுக்க தூக்கமில்லை அதனால் தான் இந்த கோலத்தில் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதையடுத்து, அவரிடத்தில் சில ரசிகர்கள் அவரது பிரச்சினையை கேட்டபோதும், சிலர் அவரை கிண்டல் செய்து கமெண்ட் கொடுத்து வருகிற...