Sunday, November 8
Shadow

Top Highlights

நாயை தனித்துவமாக வைத்து உருவாகும் அட்வென்சர் படம்.

நாயை தனித்துவமாக வைத்து உருவாகும் அட்வென்சர் படம்.

Latest News, Top Highlights
இந்திய திரையுலகில் இதுவரை பல விதமான படங்கள் வெளியாகி விட்டன. படங்களில் விலங்குகளை வைத்தும் தமிழில் சில படங்கள் வெளியாகி இருந்தன. ஆனால் விலங்குகளை மையப்படுத்தி ஹாலிவுட்டில் மட்டுமே படங்கள் உருவாகி இருந்தன. இந்நிலையில் தற்போது அப்படியாக ஒரு படம் தமிழ் சினிமாவில் உருவாக உள்ளது. ஒரு நாயை தனித்துவமாக வைத்து ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தை உறுமீன் பட இயக்குனரான சக்திவேல் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தை காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிப்பும் படத்தின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் இந்திய திரையுலகில் புதிய மைல் கல்லை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஒரு நாய்க்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் உறவையும் ஒருவருக்கொருவர் உதவி கொள்ளும் விதத்தையும் கேரளாவில் நடந்த உண்மை...
படப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த தொட்ரா படக்குழு…

படப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த தொட்ரா படக்குழு…

Latest News, Top Highlights
ஜெ எஸ் அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் மதுராஜ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி ராஜன், வீணா, ஏ. வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன்,  குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா  ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் உத்தமராஜா இசையில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார். படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் மீதமிருந்தது. அதற்கான ஐந்து நாட்கள் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்தது. பிருத்வி ராஜன், வீணா, எம் எஸ் குமார், மைனா சூசன் ஆகியோர் கலந்துகொண்டனர். பதினைந்தாம் தேதி நிறைவு பெற்ற படப்பிடிப்பில் கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் வரை கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும்  கிடா வெட்...
ரஜினி புதிய கட்சி துவக்கம் எப்போது?

ரஜினி புதிய கட்சி துவக்கம் எப்போது?

Latest News, Top Highlights
மே மாதத்தில், புதிய கட்சி துவக்குவது குறித்து, மன்ற நிர்வாகிகளுடன், நடிகர் ரஜினி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி, 10 நாள் ஆன்மிக பயணமாக, இமயமலைக்கு சென்றிருந்தார். அப்பயணத்தை முடித்து, நேற்று முன்தினம், சென்னை திரும்பினார். அரசியல் பயணம் குறித்து, தன் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன், நேற்று ஆலோசனைநடத்தினார். அப்போது, புதிய கட்சியை, மே மாதத்தில் துவக்கலாமா என, விவாதித்துள்ளார் அதற்கான பணிகளையும், அவர் முடுக்கி விட்டுள்ளார். புதிய கட்சியின் துவக்க விழாவை, சென்னை அல்லதுகோவையில் நடத்த, அவர் திட்டமிட்டு உள்ளார். இம்மாத இறுதிக்குள், அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கையை முடிக்கவும், புதிய நிர்வாகிகளை நியமிக்கவும், மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பின், புதிய நிர்வாகிகளை அழைத்து, சென்னையில், நேர்காணல் நடத்தவும், ரஜினி தீர்மானித்துள்ளார்....
அரவிந்த்சுவாமிக்கு ஜோடியாகும் ஜோதிகா!

அரவிந்த்சுவாமிக்கு ஜோடியாகும் ஜோதிகா!

Latest News, Top Highlights
காற்று வெளியிடை’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்திற்கு ‘செக்க சிவந்த வானம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அரவிந்த்சுவாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திரைத்துரையின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் தற்போது பாதியிலேயே நிற்கிறது. பல நடிகர் நடிகைகள் நடிக்கும் இப்படத்தின் கதை என்னவாக இருக்கும், யார் யாருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அரவிந்த்சுவாமிக்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரவிந்த் சாமி, ஜோதிகா ஆகியோரது காம்பினேஷன் காட்சிகளை வட மாநிலங்களில் படமாக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம், திரைத்துறை வேலை நிறுத்தம் முடிந்த பிறகு வட மாநிலங்களுக்கு பயணிக்க முடிவு செய்துள்ளாராம்....
காவிரி விவகாரம்- கர்நாடகத்து நாற்காலிக்காக மத்திய அரசு நடத்தும் நாடகம்: கமல்ஹாசன்

காவிரி விவகாரம்- கர்நாடகத்து நாற்காலிக்காக மத்திய அரசு நடத்தும் நாடகம்: கமல்ஹாசன்

Latest News, Top Highlights
பாகிஸ்தானோடும். வங்கதேசத்துடனும் மட்டும் தண்ணீர் பகிர்ந்து கொள்ள முடியும் போது கர்நாடகத்துடன் காவிரியை பகிர முடியாதா என்று கமல்ஹாசன் டுவிட்டரில் கேள்வி எழுதியுள்ளார். கமல் கடந்த மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சில மாதங்களாக அவர் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் கட்சியை தொடங்கினார். தற்போது காவிரி விவகாரம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் மத்திய அரசோ அமைப்போம் அமைப்போம் என்று சொல்லிக் கொண்டே வருகிறது. இதை வலியுறுத்தி கடந்த 13-ஆவது நாளாக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து கமல்ஹாசன் ஆங்கிலத்திலும் தமிழிலும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகி...
விஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’!

விஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’!

Latest News, Top Highlights
பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி 'வில்லா டூ வில்லேஜ்' என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில், 40 நாட்கள் கிராமத்துக்கு சென்று அங்கு வேலை செய்து அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை வைத்து எந்தவித வசதியும் இல்லாமல் அன்றாடம் வாழ்க்கை நடத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதில், 12 பெண்கள் கலந்து கொள்கின்றனர். இதுவரை கிராமத்து பக்கமே போகாத இந்த பெண்களை வைத்து முதன் முறையாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும், இறுதியில் கிராமத்து மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். போட்டியின் இறுதி வெற்றியாளரை கிராம பஞ்சாயத்து முடிவு செய்யும். இந்த 12 பெண்களில் சினிமாவில் இருந்து கலந்து கொண்டுள்ள ஒரே பெண், நடிகை சனம் ஷெட்டி மட்டுமே. ...
சிவகார்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா இயக்கதில்முதல்கட்ட படப்பிடிப்பு  முடிவடைந்தது.

சிவகார்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா இயக்கதில்முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.

Latest News, Top Highlights
சினிமாவில் விளையாட்டு எப்போதுமே வெற்றி பெறும் ஒரு சூத்திரம். இதற்கு பல உதாரணங்கள் இருந்திருக்கிறன. அந்த படங்கள் அதிகமாக வெற்றி பெறுவதற்கு காரணம், ஒருவன் கொண்டிருக்கும் பேரார்வம் அனைத்து தடைகளையும் உடைத்து வெற்றிக்கு இட்டு செல்லும் என்ற தத்துவம் தான். இயக்குனராகும் பல வருட கனவில் இருந்த அருண்ராஜா காமராஜ், பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஒரு படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்து இருப்பது மிக பொருத்தமானது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படத்தை பற்றி அதன் சினிமாவில் விளையாட்டு எப்போதுமே வெற்றி பெறும் ஒரு சூத்திரம். இதற்கு பல உதாரணங்கள் இருந்திருக்கிறன. அந்த படங்கள் அதிகமாக வெற்றி பெறுவதற்கு காரணம், ஒருவன் கொண்டிருக்கும் பேரார்வம் அனைத்து தடைகளையும் உடைத்து வெற்றிக்கு ...
காலா’ சென்சார் கடிதம் தர தயாரிப்பாளர் சங்கம் மறுப்பா?

காலா’ சென்சார் கடிதம் தர தயாரிப்பாளர் சங்கம் மறுப்பா?

Latest News, Top Highlights
ஒரு திரைப்படத்திற்கு சென்சார் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து 'கிளியரன்ஸ் லெட்டர்' அதாவது 'தடையில்லா அனுமதிக் கடிதம்' ஒன்றை தயாரிப்பாளர் சங்கம் தரவேண்டும். அந்தக் கடிதம் கிடைத்த பிறகுதான் தணிக்கை வாரியம் அந்தப் படத்தை தணிக்கை செய்வதற்கு எடுத்துக் கொள்ளும். அதன்படி 'காலா' படத்திற்காக அனுமதிக் கடிதம் வேண்டி தயாரிப்பாளர் சங்கத்திடம் கடந்த மாதமே கடிதம் கொடுத்துவிட்டார்களாம். ஆனால், ஸ்டிரைக்கைக் காரணம் காட்டி அனுமதிக் கடிதம் தர தயாரிப்பாளர் சங்கம் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக 'காலா' படத் தரப்பிலிருந்து குற்றம் சாட்டுகிறார்கள். இது சம்பந்தமாக தயாரிப்பாளர் சங்கத் தரப்பில், வரிசைப்படிதான் அனுமதிக் கடிதம் கொடுத்து வருகிறோம். அதன்படி 'காலா' படத்திற்கும் கொடுப்போம் என்று சொல்கிறார்கள். ஆனால், நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் 'காலா' தயாரிப்பு நிறுவனம் சார்பாக கலந்து க...
நயன்தாராவுக்காக அனிருத் செய்த விஷ்யம் அதிர்ச்சியில் கோலிவுட்

நயன்தாராவுக்காக அனிருத் செய்த விஷ்யம் அதிர்ச்சியில் கோலிவுட்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என்று செல்லமாக அழைப்பார்கள் ஏற்கனவே சில ஆல்பங்களிலும், படங்களிலும் தலைகாட்டியிருக்கிறார். இந்நிலையில், அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் 'கோலமாவு கோகிலா' படத்திற்காக அனிருத் லேடி கெட்டப் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்றுதான் 'கோலமாவு கோகிலா'. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது கோலமாவு கோகிலா' படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் அனிருத்...
ரசிகர்களே ஒன்று சேருங்கள் அரசியல் மாற்றத்தை உண்டுபண்ணுவோம் ரஜினிகாந்த்

ரசிகர்களே ஒன்று சேருங்கள் அரசியல் மாற்றத்தை உண்டுபண்ணுவோம் ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
இமயமலை பயணத்தை முடித்து சென்னை திரும்பியுள்ள நடிகர் ரஜினி, மீதமுள்ள மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் பிஸியாக உள்ளார். இன்று(மார்ச் 21) தென்சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு, சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய ரஜினி... "தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே நம் அனைவரின் எண்ணமாக இருக்க வேண்டும். இது ஆண்டவன் கொடுத்த வாய்ப்பு. தூய உள்ளம், எண்ணங்கள் இருந்தால் எதையும் சாதிக்கலாம். தலைமை பதவி கிடைக்காதவர்கள் கோபம், பொறாமை கொள்ளாமல் ஒற்றுமையுடன் மக்கள் நலனே முக்கியம் என அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆண்டவன் நம்மோடு இருக்கிறான், நான் உங்களுடன் இருக்கிறேன்"....