Sunday, November 8
Shadow

Top Highlights

ரஜினிகாந்த் போல் மிக சிறந்த மனிதரை எங்கும் பார்த்ததில்லை! ராதிகா ஆப்தே

ரஜினிகாந்த் போல் மிக சிறந்த மனிதரை எங்கும் பார்த்ததில்லை! ராதிகா ஆப்தே

Latest News, Top Highlights
தமிழில் மிகவும் சர்ச்சைக்கு உள்ள ஒரு நடிகை என்றால் அது ராதிகா ஆப்தெ எப்பவும் ஏதாவது ஆபாச படத்தை வெலியிட்டு பிரச்ஷனையை தேடி கொள்பவர் இருந்தும் காபலி படத்தில் இவர் சரியான பாத்திரம் என்று ரஜினி சம்மதம் கூரினார். இவர் சமீபதில் ஒரு பேட்டியில் நம்ம சூப்பர் ஸ்டார் பற்றி கூறினார் ரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை, அன்பானவரை நான் திரையிலும் சரி, நிஜத்திலும் சரி... பார்த்ததே இல்லை என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார் கபாலியில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. அதற்கு முன் தமிழில் மூன்று படங்களில் நடித்திருந்தார். சில தெலுங்குப் படங்களிலும், ஏராளமான இந்திப் படங்களிலும் அவர் நடித்திருந்தார். பல சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்து பரபரப்பு கிளப்பிய ராதிகா ஆப்தே, சமீபத்தில் தன்னிடம் சிலுமிஷம் செய்த தெலுங்கு ஹீரோ ஒருவரை அறைந்துவிட்டதாகக் கூறி அதிர வைத்தார். அந்த நடிகர் தெலுங்கு சினிமாவில் ...
அர்த்தமுள்ள அழுத்தமான  நடிக்க தயாராக இருக்கிறேன்- சுரேஷ் மேனன்

அர்த்தமுள்ள அழுத்தமான நடிக்க தயாராக இருக்கிறேன்- சுரேஷ் மேனன்

Latest News, Top Highlights
சினிமா மீதான காதல் தான் இருக்கும் துறையையும் தாண்டி தன்னை இணைத்துக் கொள்ள வைக்கும். சினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக பல அவதாரங்களை எடுத்து சாதித்திருக்கும் சுரேஷ் மேனன், சினிமா மீது அளவு கடந்த காதலை வைத்திருப்பவர். இருபது ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களின் மூலம் மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார். இது குறித்து சுரேஷ் மேனன் கூறும்போது, "சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு. நான் நடிக்காமல் இருந்த காலகட்டங்களில் பல படங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள், ஆனால் என்னை எதுவும் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பின்னர் எனக்கு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களில் நடிக்க நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. அதில் நடித்ததற்கு நேர்மறை விமர்சனங்களும், பாராட்டுக்களும் கிடைத்தன. தற்போது வரும் இளம் இயக்குனர்கள் சிறப்பான, துணிச்சலான கதாபாத்திரங்களை எழுதுவது மகிழ்ச்...
11 பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ஆண் தேவதை ட்ரைலர்!

11 பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ஆண் தேவதை ட்ரைலர்!

Latest News, Top Highlights
தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் ஃபெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’. இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைத்துள்ளார் ஜிப்ரான். எடிட்டிங் மு. காசிவிஸ்வநாதன். இந்த படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, உதய நிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் ஏ.ஆர் முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வெற்றிமாறன், சீனுராமசாமி, ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய பதினோரு பிரபலங்கள் ஒன்றாக இணைந்து வெளியிட்டார்கள். அனைவருமே, ”இந்த ஆண் தேவதை இன்றைய சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மிக முக்கிய கருத்தைப் பேசுகிறது. தாமிராவும் சமுத்திரக்கனியும் இணைந்துள்ள இப்படம் வெற்றிபெற வேண்டும் . அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்...
பதவி கிடைக்காவிட்டால் பொறாமை வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை

பதவி கிடைக்காவிட்டால் பொறாமை வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை

Latest News, Top Highlights
கடந்த பல நாட்களாக தமிழகம் முழுதும் ரஜினிகாந்த் தன் அரசியல் கட்சிக்கு தேவையான நிர்வாகிகள் அறிவித்து வந்தார் கிட்டத்தட்ட எல்லா மாவட்டஙளுக்கும் அறிவித்துள்ளார். பதவி கிடைக்க விட்டால் ரசிகர் மன்றத்தினர் பொறாமை கொள்ளக் கூடாது என நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் ரஜினிகாந்த் அறிவுரை கூறியுள்ளார். தென்சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் வீடியோ கான்பிரசிங் மூலம் நடிகர் ரஜீனிகாந்த பேசினார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ரஜினி பேசியதாவது "தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். மக்களுக்கு நல்லது செய்ய ஆண்டவர் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்று மன்றத்தினர் யாரும் பொறாமையில் செயல்படக் கூடாது. தேவையற்ற சண்டைகளை தவிருங்கள்" என்றார். இமயமலை, தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு 10 நாட்கள் ...
விஜய் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல முன்னணி நடிகர்-

விஜய் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல முன்னணி நடிகர்-

Latest News, Top Highlights
கடந்த சில நாட்களாக தமிழ் சினிமா முடங்கியது பல பிரச்சனைகளை முன் நிறுத்தி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது தமிழ் சினிமாவுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. தொடர்ந்து நிறைய பிரச்சனைகளாக கிளம்பி வருகிறது. தயாரிப்பாளர் சங்கம் சில முடிவுகளுக்காக முழு ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர். ஆனால் விஜய் 62வது படம், நாடோடிகள் படம் பின் 2 படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இந்த தகவலை அறிந்த மற்ற பிரபலங்கள் அது என்ன அவர்களது படத்துக்கு மட்டும் அனுமதி கொடுப்பது என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர். நேற்று கூட விஜய் படப்பிடிப்பை தாக்கி நடிகர் கருணாகரன் டுவிட் போட்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் சித்தார்த் டுவிட்டரில், ஒவ்வொரு படங்களும் எல்லோருக்கும் முக்கியம் தான். ஒருவருக்கு ஸ்பெஷல் அனுமதி கொடுத்தால் மற்றவர்களுக்கு தர வேண்டும். எல்லோருமே இங்கு ஒன்றுதான் என பதிவு செய்துள்ளார்...
கமல் விமர்சனதுக்கு பதில் சொன்ன ரஜினிகாந்த் !

கமல் விமர்சனதுக்கு பதில் சொன்ன ரஜினிகாந்த் !

Latest News, Top Highlights
அன்றாட பிரச்சினைகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று ஏற்கெனவே நான் சொல்லிவிட்டேன், உங்களுக்கு எத்தனை தடவைதான் சொல்வது என்று காட்டமாக ரஜினி பேசினார். ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அரசியல் பிரவேசம் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்தபோது அவரது பேச்சு புயலை கிளப்பியது. இதைத் தொடர்ந்து அவரிடம் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியே வரும்போது உள்ளே போகும் போது பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு சிலவற்றுக்கு பதில் அளிப்பார். சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருந்தார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதுபோல்தான் கடந்த 10-ஆம் தேதி இமயமலைக்கு புறப்பட்டபோது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது காவிரி விவகாரம் குறித்தும் அஸ்வினி என்ற கல்லூரி மாணவி படுகொலை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நான் இன்னும் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை என்று கூற...
என்னை யாரும் ஆட்டிவைக்கவில்லை – ரஜினிகாந்த்

என்னை யாரும் ஆட்டிவைக்கவில்லை – ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
எனக்கு பின்னால், பாரதிய ஜனதா கட்சி இல்லை; கடவுளும், மக்களும் தான் உள்ளனர்,'' என, நடிகர் ரஜினி கூறினார். இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் சென்ற ரஜினி, நேற்று சென்னை திரும்பினார். பின், போயஸ் கார்டனில் உள்ள தன் இல்லத்தில், அவர் கூறியதாவது: ஜம்மு, ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என, நினைத்தேன். ஒன்பது ஆண்டுகளாக வாய்ப்பு அமையவில்லை; இப்போது தான், அதற்கான வாய்ப்பு கிடைத்தது. தற்போது, மனம் நிம்மதியாகவும், புத்துணர்ச்சியாகவும் உள்ளது. திரைத்துறையின் அறிவித்துள்ள, ஸ்டிரைக்கை விரைவில் முடிக்க வேண்டும்; அனைவரும், மீண்டும் பழையபடி வேலைக்கு செல்ல வேண்டும். எந்த பிரச்னைக்கும், ஸ்டிரைக்தீர்வாகாது. மக்கள் மன்றத்திற்கான மாவட்ட நிர்வாகிகள் நியமனம் நடந்து வருகிறது. இன்னும், 14 மாவட்டங்களுக்குநிர்வாகிகள் நியமிக்கப்பட்டதும், அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். ஈ.வெ.ராமசாமி சிலையை உடைத்...
ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி நிகழ்ச்சிக்கு தடை? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி நிகழ்ச்சிக்கு தடை? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Latest News, Top Highlights
ஆர்யா தற்போது தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்வார் என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை சுற்றி சில சர்ச்சைகள் இருந்து வருகிறது. பெண்களின் மாண்பை சிதைப்பதாகவும், கலாச்சாரத்தை கெடுப்பதாகவும் இருப்பதாக கூறி மதுரையை சேர்ந்த ஜானகியம்மாள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை உயர்நீதிமன்றத்தில் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் சினிமா தணிக்கை வாரிய தலைவர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர் ஆகியோர்க்கு நோட்டிஸ் அனுப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்....
புதிய முறையில் உருவான கிண்டி பொறியியல் கல்லூரி பண்

புதிய முறையில் உருவான கிண்டி பொறியியல் கல்லூரி பண்

Latest News, Top Highlights
இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி 225 ஆண்டுகளைத் தொடப்போகிறது. இந்தக் கல்லூரியின் 93ஆவது ஆண்டு முன்னாள் மாணவர் அமைப்பின் கூட்டத்தில் முதல் முறையாக கல்லூரிப் பண் ஒன்று வெளியிடப்பட்டது. இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் துணைப் பேராசிரியர் மதன் கார்க்கியின் "முடிவிலி என்றே நீளுவோம், காலம் வென்றே வாழுவோம், பொறியியல் என்னும் புரவியில் ஏறி புவியைச் செயலால் ஆளுவோம்" என்று தொடங்கும் பாடல் வரிகளை டூபாடூ இசை நிறுவனம் மூலமாக சில தனியிசைக் கலைஞர்களிடம் கொடுத்து ஐந்து பாடல்களாக உருவாக்கி அப்பாடல்களுள் மூவாயிரத்துக்கும் மேலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை இசையமைத்தவர் தனியிசைக் கலைஞர் ஜெரார்ட் ஃபீலிக்ஸ். சத்யபிரகாஷ் மற்றும் ஜெரார்ட் இந்தப் பாடலை பாடியுள்ளார்கள். இந்தப் பாடலை கிண்டி பொறியியல் கல்லூரியின் ...
ரணம் திரைப்படத்தில் தாமோதர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் ரஹ்மான் !

ரணம் திரைப்படத்தில் தாமோதர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் ரஹ்மான் !

Latest News, Top Highlights
நடிகர் ரஹ்மான் தன்னுடைய தன்னிகரற்ற நடிப்புக்கு பெயர்போனவர். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. முக்கியமாக அவர் கதாநாயகனாக நடித்த “ துருவங்கள் பதினாறு “ திரைப்படம் தமிழ் , மலையாளம் என நல்ல வெற்றியை பெற்றது. தற்போது அவர் நடிகர் ப்ரிதிவிராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள “ ரணம் “ திரைப்படத்தில் நடித்துள்ளார். ப்ரிதிவிராஜும் , ரஹ்மானும் நடித்துள்ள இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ரணம் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்று யூடியுப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் Trending – ஆனது குறிப்பிடத்தக்கது. ரணம் திரைப்படத்தில் ரஹ்மான் தாமோதர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரணம் திரைப்படத்திலிருந்து ரஹ்மான் நடிப்பில் “ தாமோதரின் Law of Survival “ என்ற டீசர் தமிழில் வெளிவந்து நல்ல வரவேற்...