Sunday, November 8
Shadow

Top Highlights

இந்திய அளவில் விஜய்க்கு கிடைத்த மிக பெரிய பெருமை

இந்திய அளவில் விஜய்க்கு கிடைத்த மிக பெரிய பெருமை

Latest News, Top Highlights
மெர்சல்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். அப்படத்தினால் ஏற்பட்ட சர்ச்சை தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதற்கிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புக்காக விரைவில் விஜய் கொல்கத்தா செல்ல உள்ளார். இந்த நிலையில், தென்னிந்தியாவின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு கிடைத்திருக்கிறது. தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகர்கள் என்றால் ரஜினியும், சிரஞ்சீவியும் இருந்த நிலையில், தற்போது அவர்களை விஜய் பின்னுக்கு தள்ளி முன்னிலைப் பெற்றுள்ளார். தென்னிந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த டீசராக மெர்சல் வந்துள்ளது, இதுவரை இந்த டீசரை சுமார் 38 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். கபாலி தான் இதற்கு முன் இந்த சாதனையை நிகழ்த்தியது, மேலும் பாகுபலி ட்ரைலர் இதைவிட அதிகம் என்றாலும், அதன் மார்க்கெட் வேறு. எனவே, ஒரு நடிகராக பெர...
பிக்பாஸ்  ஜூலியை அழவைத்த மரண சம்பவம்!

பிக்பாஸ் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்!

Latest News, Top Highlights
ஜுலி என்றாலே பலருக்கு தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் என பல தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமாகிவிட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட போது நல்ல பெயர் இருந்தது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கேலி கிண்டலுக்கு ஆளானார். அதையும் பொறுமையாக சமாளித்து எதிர்கொண்டார். அவருக்கு சில விளம்பர வாய்ப்புகளும் வந்தது. சில இடங்களை அவரை விழாவிற்கு கூட சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள். அதோடு படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் வருகின்றது. மன்னர் வகையறா படத்தில் சின்ன ரோலில் கிளைமாக்ஸில் நடித்தார். இதனை தொடர்ந்து ஜுலி உத்தமி என்ற படத்திலும் அவர் கமிட்டானார். சமீபத்தில் நீட் தேர்வுக்காக உயிர் விட்ட அனிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் அனிதாவாக நடிக்கிறார் என போஸ்டர் வெளியானது. இதனை உறுதிப்படுத்திய தயாரிப்பாளர் ராஜா, ஜூலி அனிதாவாக மாறிவிட்டார். அனிதா வீடியோக்களை பார்த்துவிட்டு ...
GEHANA VASISTH new song RAAH KA TERI MUSAFIR HOON

GEHANA VASISTH new song RAAH KA TERI MUSAFIR HOON

Latest News, Top Highlights
The beauty queen GEHANA VASISTH is ready to rock the floor with her new song "Raah ka teri Musafir Hu" and in this song public will see totally new avatar of Gehana Vasisth, she is looking drop dead gorgeous and innocent as well... this song defines the real meaning of beauty... location is beautiful Kashmir and Gulmarg... and its very tough to judge who is more beautiful GEHANA or KASHMIR... Zee Music Company' is releasing the song and the production house name is "Redwood Production". Music composer is Asif Panjwani and the singer is Ahmad Shaad Safwi.... the magic of camera has handled by Dop Nitish Chandra.. song directed by Shadab Siddqui and the artists are Gehana Vasisth and Salman Butt .... Ppl will get the totally new look of cinema... mesmerising beauty... slow motion shot...
அமெரிக்கா செல்கிறார் ரஜினி ஏன் தெரியமா

அமெரிக்கா செல்கிறார் ரஜினி ஏன் தெரியமா

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழக அரசியல் களத்தில் குதிக்க இருக்கிறார். இதற்காக அவரது மக்கள் மன்றத்திற்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தனது அரசியல் பயணத்துக்கு தனது குருவிடம் ஆசி பெறுவதற்காக தற்போது இமயமலைக்கு சென்றிருக்கிறார். இமயமலை சுற்றுப் பயணம் முடிந்ததும் அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட மரணத்தின் எல்லைக்கு சென்று திரும்பினார். சிங்கப்பூரில் உள்ள உயர்தர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றார். அது முதல் அவர் ஆண்டு தோறும் அமெரிக்கா சென்று முழுஉடல் பரிசோதனை செய்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் தனது இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா செல...
ஒரே நேரத்தில் கமல்ஹாசன் தமிழகத்தில் அரசியல்.. ஐதராபாத்தில் இந்தியன் 2 ஷூட்டிங்

ஒரே நேரத்தில் கமல்ஹாசன் தமிழகத்தில் அரசியல்.. ஐதராபாத்தில் இந்தியன் 2 ஷூட்டிங்

Latest News, Top Highlights
கமல்ஹாசன் ஒருபுறம் அரசியல் என்ட்ரியை தொடங்கியிருந்தாலும், மற்றொரு புறம் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகளிலும் ஈடுபட இருக்கிறார் விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இயக்குனர் ஷங்கருடன் 'இந்தியன் 2' படத்தில் இணைந்துள்ளார் கமல்.'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளது. தமிழகத்தில் தற்போது சினிமா அரசியல் தலை தூக்கியுள்ளது. ஏற்கெனவே ரஜினிகாந்த் தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று அறிவிப்பு வெளியிட்டார். இவரைத் தொடர்ந்து சமீபத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சி கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை அறிவித்தார். இதையடுத்து, கமல்ஹாசன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து வருகிறார். இதற்கிடையில், தனது சி...
காலா’ ரிலீஸ் தள்ளிப் போவது ஏன்?

காலா’ ரிலீஸ் தள்ளிப் போவது ஏன்?

Latest News, Top Highlights
இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினி நடித்துள்ள 'காலா' படம், வரும் ஏப்., 27ல் ரிலீஸ் ஆகும் என, கூறப்பட்டது. ஆனால், தற்போது, ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என தெரிகிறது. தற்போது, தமிழகத்தில் நடந்து வரும் தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக்கால், மார்ச் 1லிருந்து எந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டர்களும் ஸ்ட்ரைக் செய்து வருகின்றன. இதனால், ஸ்ட்ரைக் முடிந்தாலும், ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டப் படங்கள் தேதி அடிப்படையில் வெளியாகும் என்பதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டத் தேதியில் எந்தப் படமும் ரிலீசாக வாய்ப்பில்லை. இதனால், 'காலா' படம், ஏப்ரல் மாதம் ரிலீசாக வாய்பில்லை....
தனுஷ் இயக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

தனுஷ் இயக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

Latest News, Top Highlights
நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட தனுஷ், ‘ப.பாண்டி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங், மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த தனுஷ், அடுத்ததாக புதிய படம் ஒன்றைய இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் அதில் தனுஷே நடிக்க இருப்பதாகவும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தனுஷ் இயக்க இருக்கும் படத்திற்கு ‘நான் ருத்ரன்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு நிகழும் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக இருக்கிறதாம். இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ...
அரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு – கமல்ஹாசன்

அரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு – கமல்ஹாசன்

Latest News, Top Highlights
கமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” எனும் கட்சியை கடந்த மாதம் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் செல்ல சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். அடுத்த மாதம் திருச்சியில் அவர் மாநாடு ஒன்றையும் நடத்த உள்ளார். நடிகர் ரஜினி தற்போது தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். அடுத்த மாதம் (ஏப்ரல்) தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அவர் தனது புதிய கட்சியின் பெயரை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. தனது அரசியல் “ஆன்மிக அரசியல்” ஆக இருக்கும் என்று ரஜினி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அரசியலில் ரஜினியும் கமலும் இணைந்து செயல்படுவார்களா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். என்றாலும் அரசியலிலும் தங்கள் நாகரீகமான நட்பு தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் ரஜினியுடனான தனது நட்புக்கு அரசியல் “ஆப்...
இயக்குநர் வெற்றிமாறனுடன் இணையும் கிளாப் போர்டு வி சத்யமூர்த்தி

இயக்குநர் வெற்றிமாறனுடன் இணையும் கிளாப் போர்டு வி சத்யமூர்த்தி

Latest News, Top Highlights
சில படங்கள் திரைக்கு வரும் முன்பே ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டு வரும். காக்கா முட்டை, கோலிசோடா, லென்ஸ், துருவங்கள் 16, அருவி போன்ற படங்கள் வெற்றியைத் தீர்மானித்துவிட்டு மக்களை ஈர்த்த படங்களாக வரிசைப்படுத்தலாம்.. அதேபோல, மிக மிக அவசரம் படத்திற்கான அதிர்வு படம் பார்த்தவர்கள் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வேகமாகப் பரவி வருகிறது. பார்த்துப் பார்த்து படம் பண்ணும், நுணுக்கமான தேர்வு மூலம் சிறு படங்களுக்கு கைகொடுக்கும் இயக்குநர் வெற்றி மாறன் இப்படத்தை வெளியிட முன் வந்ததிலாகட்டும், கோலிசோடா2 டத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளவரும், முக்கியமான திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு, அதைத் தெளிவாக மக்களிடம் கொண்டு செல்வதில் நல்ல பெயர் எடுத்திருப்பவருமான கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் வி சத்தியமூர்த்தி இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து வெளியிட முன் வந்திருப்பதிலாகட்டும், மிக மிக அவசரம் படம் வ...
தளபதி 62 இன்ட்ரோ சாங் பாடுவது யார் தெரியுமா?

தளபதி 62 இன்ட்ரோ சாங் பாடுவது யார் தெரியுமா?

Latest News, Top Highlights
நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள 'விஜய் 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது ஸட்ரைக் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு தடைபட்டிருக்கும் இந்த நேரத்தில் படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து வாங்கிவிடத் திட்டமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் ஹ்மான் இசையில் விஜய் நடிக்கும் படத்திற்காக பாடுவதன் மூலம் தமிழில் பாடகராக அறிமுகமாகிறார் விபின் அனேஜா. 'மெர்சல்' படத்தில் 'ஆளப்போறான் தமிழன்' பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக்கை விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள் அந்தப் பாடலைப் பாடிய கைலாஷ் கெர் உள்ளிட்டோர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டனர். அதைப் போலவே, 'விஜய் 62' இன்ட்ரோ சாங் பாடுவதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடி...