அஜித்துக்கு சிக்கல் கொடுக்கும் விஷால்
அஜித்தின் 'விசுவாசம்' படத்தின் ஷூட்டிங், வருகிற 23-ம் தேதி முதல் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்குவதாக இருந்தது
இந்நிலையில், 23-ம் தேதி முதல் வெளிமாநிலங்களிலும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என உத்தரவு போட்டு அஜித்துக்கு சிக்கல் கொடுத்துதுள்ளார் விஷால்.
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க விஷயங்களில் அஜித் கலந்துகொள்வதில்லை என்பதால் அவருக்கு சிக்கல் கொடுக்கவே இந்தத் திட்டம் என்கிறார்கள்.
அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகும் படம் 'விசுவாசம்'. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
'விவேகம்' படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. விசுவாசம்' படத்தின் ஷூட்டிங், வருகிற 23-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் தொடங்குவதாக இருந்தது. அங்குள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டிய...









