Sunday, November 8
Shadow

Top Highlights

சந்தானம் படத்தை கைவிட்ட விஜய் பட நிறுவனம்

சந்தானம் படத்தை கைவிட்ட விஜய் பட நிறுவனம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார் சந்தானம். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சக்க போடு போடு ராஜா படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், ‘சர்வர் சுந்தரம்’ படம் அடுத்ததாக ரிலீசாக இருக்கிறது. சந்தானம் தற்போது 'ஓடி ஓடி உழைக்கணும்', 'மன்னவன் வந்தானடி', தில்லுக்கு துட்டு-2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேநேரத்தில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ராஜேஷ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்த சந்தானம், தற்போது கதாநாயகனாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படத்தை விஜய் நடித்த மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. சில காரணங்களால் சந்தானம் படத்தை தயாரிக்க இருந்த முடிவை அந்த நிறுவனம் கைவிட்டிருப்பதாக கூறப்படுகிற...
அதர்வா  நடிக்கும் ” பூமராங்” பிரம்மாண்டம் ஆகிறது.

அதர்வா நடிக்கும் ” பூமராங்” பிரம்மாண்டம் ஆகிறது.

Latest News, Top Highlights
வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும் என எதிர்பார்க்க படுகிறது. அந்த வகையில் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் "பூமராங்" மிகவும் எதிர்பார்க்க படுகிறது..அவருடன் மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பூமராங்'. இந்த படத்தை R கண்ணனின் 'மசாலா பிக்ஸ்' நிறுவனம் தயாரிக்கி ன்றது. இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்புமே தமிழ் சினிமா ரசிகர்கள்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது. மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராகிவருகின்றது. இந்த படத்தின் ஒரு பாடலுக்காக இப்படத்தின் கலை இயக்குனர் ஷிவா யாதவ் ஒரு கோடி ருபாய் செலவில் ஒரு மிக பிரம்மாண்ட செட்டை எழுப்பியுள்ளார் என்பதே தற்பொழுதைய சுவாரஸ்யமான செய்தி.இந்த பாடல் , பிரம்மாண்டமான செட் மற்...
ஆர் கே. சுரேஷ்யின் நடிப்பில் அட்டு பட இயக்குநரின் அடுத்த படம் ‘டைசன் ‘

ஆர் கே. சுரேஷ்யின் நடிப்பில் அட்டு பட இயக்குநரின் அடுத்த படம் ‘டைசன் ‘

Latest News, Top Highlights
சில மாதங்களுக்கு முன் வெளியான 'அட்டு ' படம் பரவலான கவனம் பெற்றது. இத் திரைப்படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இரண்டாவது திரைப்படம் தொடங்கி விட்டார். ஆர். கே .சுரேஷை நாயகனாக்கி 'டைசன்' என்கிற பெயரில் உருவாகிறது . பிரமாண்டபொருட்செலவில்இப்படம் வளர்கிறது. 'பில்லாபாண்டி ', 'வேட்டைநாய் 'போன்ற பல படங்களில் நாயகனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ் , இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.மற்றும் இப்படத்தில்'அஃகு' படத்தின் நாயகன் அஜய் இரண்டுவேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார். முன்னணி தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இதில் நடிக்கிறார்கள். ஸ்டுடியோ 9 தயாரிக்கிறது ....
ரெயின் டிராப்ஸ்’ சமூக அமைப்பின்  ஆறாம் ஆண்டு   “பெண் சாதனையாளர் விருதுகள்”

ரெயின் டிராப்ஸ்’ சமூக அமைப்பின் ஆறாம் ஆண்டு “பெண் சாதனையாளர் விருதுகள்”

Latest News, Top Highlights
‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பின் சார்பில் ஆறாம் ஆண்டு நடத்தப்படும் ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா, சென்னையில் உள்ள ராணிசீதை மஹாலில் நடைபெற்றது ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். ஊடகம் மூலமாகவும், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை பரப்புவது தான் இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள். இந்த அமைப்பு தற்போது ஐந்தாவது முறையாக ‘பெண்சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழாவை சமீபத்தில் நடத்தினர். இந்த விழா கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவதுகுறிப்பிடத்தக்கது. தேசிய மகளிர் தினத்தை பாராட்டி நடக்க இருக்கும் இந்த விழாவை, ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நல்லெண்ணத் தூதராக செயல்பட்டுகொண்டிருக்கும், ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரியும் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா...
துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல முன்னனி நடிகை மகள்

துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல முன்னனி நடிகை மகள்

Latest News, Top Highlights
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் வர்மா. தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பாலா இயக்கி வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு நேபாளத்திலுள்ள காட்மண்டுவில் நடைபெற்றது. இப்படத்திற்காக பல மாதங்களாக தன்னை முழுமையாக தயார்படுத்தி வந்த துருவ் விக்ரம், தற்போது தாடி, மீசை, ஹேர்ஸ்டைல் என பாலாவின் கைவண்ணத்தினால் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தில் துருவ் விக்ரம் தவிர மற்ற நடிகர் - நடிகைகள் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் வெளியிடப்படாத நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு கதாநாயகி இல்லாமல் தான் நடைபெற்றது. தற்போது வர்மா படத்தில் நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமியை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் து...
சாட்சிகள் சொர்க்கத்தில்… அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்!

சாட்சிகள் சொர்க்கத்தில்… அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்!

Latest News, Top Highlights
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய 'சாட்சிகள் சொர்க்கத்தில்' (Witness in Heaven) படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்துவிட்டது. படத்தின் ட்ரைலர் பார்ப்பவர்களை உலுக்கியெடுத்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து ஈழன் இளங்கோ ஒளிப்பதிவு இயக்கியுள்ள படம் இது. அதே நேரம் போரில் நடந்த விஷயங்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை. பாலச்சந்திரன் படுகொலையை மட்டுமே பிரதானப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்துக்கு சதீஷ் வர்ஷன் இசை அமைத்துள்ளார். சாட்சிகள் சொர்க்கத்தில் படம் உலகெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது....
தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த மக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்!

தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த மக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்!

Latest News, Top Highlights
விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு புஸ்ஸி.N .ஆனந்த் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தளபதி விஜய் ரசிகர்கள் செய்து வருவது வழக்கம் . அதேபோல் மதுரை தெற்கு மாவட்ட தளபதி தலைமை மக்கள் இயக்கம் சார்பாக குடிநீர் தட்டுப்பாட்டில் தவித்த திருப்பரங்குன்றம் தொகுதி அனுப்பானடி உள்ள பாபுநகர் மக்களுக்கு திரு .ராஜ் மனோ (55வது வார்டு) அவர்களின் ஏற்பாட்டில் திருப்பரங்குன்றம் ஒன்றியம் திரு.சுந்தர்ராஜன்,மற்றும் அவனி நகரசெயலாளர் அவனி சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் விநியோகம் செய்தனர் ....
பிரியா வாரியரைத் தேடி வரும் ஹிந்தி வாய்ப்பு

பிரியா வாரியரைத் தேடி வரும் ஹிந்தி வாய்ப்பு

Latest News, Top Highlights
புருவத்தை அசைத்து அசைத்தே இந்திய ரசிகர்களைக் கிறங்கடித்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். அதன் பிறகு புருவ அழகி என்று சொல்லப்படும் அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார். அவரைப் பல நடிகர்கள், நடிகைகள் பாராட்டி அவருடைய ரசிகர்களாகவும் மாறினார்கள். பிரியா வாரியரின் தாக்கம் ஹிந்தித் திரையுலகிலும் எதிரொலித்தது. ரிஷி கபூர் வரை கவர்ந்தார் பிரியா. தற்போது பிரியாவுக்கு ஹிந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஹிந்தித் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோஹர் தயாரிப்பில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் இயக்குனர் ரோகித் ஷெட்டி இயக்க உள்ள 'சிம்பா' படத்தில் நாயகியாக நடிக்க பிரியா வாரியரிடம் பேசி வருகிறார்களாம். இப்படத்தின் நாயகனாக ரன்வீர் சிங் நடிக்க உள்ளார். இன்னும் பிரியா வாரியர் நடித்து ஒரு படம் கூட வெளிவராத நிலையில் அவரைத் தேடி ஹிந்திப் பட வாய்ப்பு வந்துள்ளது ஆச்சரியமானதுதான்....
ஜெய் நடிக்கும் நீயா2 படத்தின் அப் டேட்

ஜெய் நடிக்கும் நீயா2 படத்தின் அப் டேட்

Latest News, Top Highlights
கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘நீயா’. தற்போது 39 வருடங்களுக்கு பின் ‘நீயா-2’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. படத்தின் நாயகனாக ஜெய். இரண்டு வித பரிமாணத்தில் வருகிறார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார். ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா ஆகியோரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலசரவணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறுகிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா, தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு, உடல்மொழி, தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமையும். அழுத்தமான காத...
காரில் செக்ஸ் தொல்லை? – நடிகை பார்வதி நாயர் விளக்கம்

காரில் செக்ஸ் தொல்லை? – நடிகை பார்வதி நாயர் விளக்கம்

Latest News, Top Highlights
கேரளாவில் முன்னணி நடிகைக்கு ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நடிகைகள் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போதும், படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பும்போதும், அவர்கள் பாதுகாப்பில் தயாரிப்பாளர்கள் அக்கறை எடுக்க வேண்டும் என்றும், அறிமுகம் இல்லாதவர்களை டிரைவர்களாக அனுப்பக்கூடாது என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் வற்புறுத்தி இருந்தது. இந்த நிலையில் மலையாள நடிகை பார்வதி நாயரும் சென்னையில் வாடகை காரில் பயணித்தபோது, தொல்லைகள் அனுபவித்ததாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார். இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. காரில் பார்வதி நாயருக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக இணையதளங்களில் தகவல் பரவியது. நடிகர்-நடிகைகள் பலரும் பார்வதி நாயரை தொடர்புகொண்டு விசாரிக்க ஆரம்பித்தனர். பார்வதி நாயர் என்னை அறிந்தால், உத்தம வில்லன், எங்கிட்ட மோதாதே, நிமிர் ஆக...