உண்மைச் சம்பவங்களோடு தொடர்புடையவரே நாயகனான “கிரிஷ்ணம்” திரைப்படம்
பி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என்.பல்ராம் தயாரிக்கும் திரைப்படம் “கிரிஷ்ணம்”. இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்ஷய் கிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சில விருவிருப்பான சம்பவங்களே “கிரிஷ்ணம்” படத்தின் கதை. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் தினேஷ் பாபு. இவர் ஏற்கனவே மலையாளத்திலும், கன்னடத்திலும் ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.
மனித உணர்வுகளையும், வாழ்வியலையும் கருவாகக் கொண்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா உல்லாஸ், மமிதா பைஜு, சாய் குமார், ரெஞ்சி பனிக்கர், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களேற்று நடிக்கிறார்கள். ஹரி பிரசாத்தின் இசையில் பாடல்களை சந்தியா எழுதுகிறார்.
“கிரிஷ்ணம்” ஒரு புரட்சிகரமான கதைக்களத்தைக் கொண்டது. வாழ்க்கையில் எதி...









