Sunday, November 8
Shadow

Top Highlights

கட்டப்பா சத்யராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்! தமிழ் நடிகருக்கு முதல்முறை..

கட்டப்பா சத்யராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்! தமிழ் நடிகருக்கு முதல்முறை..

Latest News, Top Highlights
தென்னிந்திய சினிமாவில் மட்டுமே பிரபலமாக இருந்த நடிகர் சத்யராஜ், ராஜமௌலியின் பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்த பிறகு உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். அவரை கவுரவிக்கும் விதமாக லண்டனில் உள்ள மெழுகு சிலை மியூசியத்தில் சிலை வைக்கப்பட உள்ளது. Madame Tussaudsஇல் ஏற்கனவே பாகுபலியாக நடித்த பிரபாஸுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஒரு தமிழ் நடிகருக்கு இந்த மரியாதை முதல் முறையாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்...
ஆன்மீக பயணத்தில் இருக்கிறேன்.. அரசியல் பேச மாட்டேன்.. சிம்லாவில் ரஜினி பேட்டி

ஆன்மீக பயணத்தில் இருக்கிறேன்.. அரசியல் பேச மாட்டேன்.. சிம்லாவில் ரஜினி பேட்டி

Latest News, Top Highlights
ஆன்மிக பயணமாக இமயமலைக்கு வந்துள்ளதால் அரசியல் பேச மாட்டேன் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். நேற்று முன் தினம் விமான நிலையத்தில் அவரிடம் சமீபத்தில் மரணம் அடைந்த திருச்சி உஷா குறித்தும், கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினி குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.ஆனால் அதற்கு ரஜினி பதில் அளிக்கவில்லை. பத்திரிக்கையாளர்கள் கூப்பிட்டும் அவர் திரும்பி பார்க்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஏன் பத்திரிக்கையாளர்களிடம் பேசவில்லை என்பதற்கு ரஜினி பதில் அளித்துள்ளார். அதில் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு வந்துள்ளதால் அரசியல் பேச மாட்டேன்.இது புனிதமான இடம், இங்கே அரசியல் பேச விரும்பவில்லை.'' என்றார். இமாச்சல பிரதேசம் பாலம்பூரில் தற்போது அவர் இருக்கிறார். இந்த பயணம் முடியும் வரை அரசியல் குறித்து பேச மாட்டேன்...
சிவகார்த்திகேயன் படத்தை முடித்த சமந்தா

சிவகார்த்திகேயன் படத்தை முடித்த சமந்தா

Latest News, Top Highlights
‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிது. `சீமராஜா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிக்கிறார்கள். சூரி, லால், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இதில் சமந்தா சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது....
மீண்டும் தனது வெற்றிக் கூட்டணியுடன் இணையும் சசிகுமார்

மீண்டும் தனது வெற்றிக் கூட்டணியுடன் இணையும் சசிகுமார்

Latest News, Top Highlights
கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் சுந்தரபாண்டியன். சசிகுமாரின் திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு மிக முக்கியமான இடம் பிடித்தது. சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஆர்.பிரபாகரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இயக்குனராக அறியப்பட்ட எஸ்.ஆர்.பிரபாகரன், தொடர்ந்து 'இது கதிர்வேலன் காதல், 'சத்ரியன்' உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த இரு படங்களுக்கும் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், சசிகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் இணையவிருக்கின்றனர். அதுவும் சுந்தரபாண்டியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையவிருக்கிறார்களாம். தற்போது சசிக்குமார், சமுத்திரக்கனி கூட்டணி 'நாடோடிகள் 2' படப்பிடிப்பை மதுரையில் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் படம் முடிந்த கையோடு 'சுந்தரபாண்டியன்...
தல பிறந்தநாளில் செம ட்ரீட் காத்திருக்கு!

தல பிறந்தநாளில் செம ட்ரீட் காத்திருக்கு!

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பு, ஸ்டைலுக்கென்று தனி ரசிகர்பட்டாளமே இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர், நடிகைகளுக்கு முன்மாதிரியாகவும், உத்வேகம் அளிப்பராகவும் இருக்கிறார். அஜித் நடிக்கும் புதிய படம் ரிலீசானால் போதும் தமிழ்நாடே திருவிழா போல காட்சி அளிக்கும். அப்படி இருக்கும்போது அஜித்தின் பிறந்தநாள் என்றால் சும்மாவா. உழைப்பாளர்கள் தினமான மே 1-ஆம் தேதி அஜித் அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆனால் அவரது ரசிகர்கள் அஜித்தின் பிறந்தநாளுக்கு 2 மாதத்திற்கு முன்பே அஜித் பிறந்தநாளை டிரெண்டாக்கினர். அவரது பிறந்தநாளுக்கு இன்னும் 50 நாட்களே இருக்கும் நிலையில், அஜித்தின் தீவிர ரசிகரும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அஜித் பிறந்தநாளில் மாஸான ட்ரீட் ஒன்று கொடுக்க இருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் தற்போது பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்து வருகிற...
அஜித்தின்  ‘விஸ்வாசம்’ தள்ளிப்போகிறது படப்பிடிப்பு காரணம் என்ன ?

அஜித்தின் ‘விஸ்வாசம்’ தள்ளிப்போகிறது படப்பிடிப்பு காரணம் என்ன ?

Latest News, Top Highlights
‘விவேகம்’ படத்தை அடுத்து அஜித்குமார், ‘விஸ்வாசம்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இருவரும் ஏற்கனவே ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய 3 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். 4-வது முறையாக, ‘விஸ்வாசம்’ படத்தில் இணைகிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இதில், அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 23-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. பட அதிபர்கள் ‘ஸ்டிரைக்’ காரணமாக, ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. அஜித்தின் விவேகம் முடிந்து ஒரு வருடங்கள் மேல் ஆகிறது இவரின் அடுத்த படம் விஸ்வாசம் என்று சொல்லி படபிடிப்பு இப்போ அப்போ என்று தள்ளிபோகொ...
ஆரவ் சொன்ன உண்மை அதிர்ச்சியில் ஓவியா மற்றும் ரசிகர்கள்

ஆரவ் சொன்ன உண்மை அதிர்ச்சியில் ஓவியா மற்றும் ரசிகர்கள்

Latest News, Top Highlights
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்களில் ஒருவர் ஆரவ். அதில் பரிசு தொகையையும் வென்றார். அதோடு ரசிகைகளின் அன்பையும் வென்றார். இந்த நிகழ்ச்சியின் போது, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியாவுக்கும், ஆரவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆரவ் அதை மறுத்தார். இதையடுத்து, ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். ஓவியாவை காதலிக்கவில்லை என்று ஆரவ் கூறியதால், அவரை மனதார விரும்பிய ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. இதை பின்னர் மறைமுகமாகவும் ஓவியா தெரிவித்தார். பின்னர் ஓவியா சகஜமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. ஓவியாவின் சினிமா மார்க்கெட் சூடு பிடித்தது. பிரபல நிறுவனங்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் தேடி வந்தன. விளம்பர படங்களிலும் நடித்தார். இது போல் ஆரவுக்கும் தனி அடை...
இயக்குனர் பாலா கனவை பொய்யாக்கிய பிரபல நடிகை

இயக்குனர் பாலா கனவை பொய்யாக்கிய பிரபல நடிகை

Latest News, Top Highlights
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் நடித்த நாச்சியார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பாலாவும் மாறிவிட்டாரே என்று படத்தை பார்த்த ரசிகர்கள் தெரிவித்தனர். ஜோதிகா, ஜி.வி.க்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது நாச்சியார் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை ரூ. 90 லட்சத்திற்கு போனது. ஆனால் படத்தை டப் செய்யாமல் ரீமேக் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார் பாலா. தெலுங்கு ரீமேக்கில் ஜோதிகா கதாபாத்திரத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க விரும்பினார்கள். அவர் நடிக்க மறுத்தால் படத்தை டப்பிங் செய்து வெளியிட தீர்மானித்தனர் அனுஷ்கா தெலுங்கு படம் ஒன்றுக்கு 6 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அதனால் நாச்சியார் ரீமேக்கில் நடிக் முடியாது என்று கூறிவிட்டாராம் அவர். அனுஷ்கா நடிக்க மறுத்ததால் நாச்சியார் படத்தை டப் செய்து வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. பாலாவின் ஆசை இப்படி நிராசையாகிவிட்டதே....
புதுமுக நடிகர் எம் எஸ் குமாருக்கு இயக்குநர் பாக்யராஜ் பாராட்டு!

புதுமுக நடிகர் எம் எஸ் குமாருக்கு இயக்குநர் பாக்யராஜ் பாராட்டு!

Latest News, Top Highlights
J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.. வீணாவின் அண்ணனாகவும், படத்தை தாங்கிக் கொண்டுபோகிற கேரெக்டரில் M.S.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, தயாரிப்பாளர் சந்திராவின் கணவர் தான்.. தொட்ரா படத்தில் கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள M.S.குமார் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். “படிக்கும் காலத்திலிருந்தே சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது என் கனவாக இருந்தது. கனவு என்பதைவிட அதை வெறி என்றே சொல்லலாம். என் அம்மா என் கனவுகளை அறிந்திருந்தாலும் அவர் சினிமா உலகின் அறிமுகம் இல்லதவராக இருந்தார்...
முன்னணி நடிகரை இயக்கும் பிரபுதேவா- ஆனால் அஜித் இல்லை பின்னர் யார் ?

முன்னணி நடிகரை இயக்கும் பிரபுதேவா- ஆனால் அஜித் இல்லை பின்னர் யார் ?

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்த பிரபுதேவா ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார் ஆனால் நடிப்பு அவரை விடவில்லை மீண்டும் அவரை தேவி படம் ஹீரோவாக வள வந்து வெற்றி கொடிநாட்டினார். இதை தொடர்ந்து பல படங்கள் நடித்து கொண்டு இருக்கிறார் தற்போது மீண்டும் இயக்கம் என்று சொன்னார் அதுவும் தல அஜித் என்று பேசப்பட்டது ஆனால் அதற்கு ஒரு விடை கொடுத்துள்ளார் பிரபுதேவா. பிரபு தேவா தமிழில் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்து மெர்குரி என்ற திகில் படம் வெளியாக இருக்கிறது, படத்திற்கான டீஸரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த சில நாட்களாக பிரபு தேவா அடுத்து அஜித்தை வைத்து படம் இயக்க போகிறார் என்று நிறைய தகவல்கள் வந்துவிட்டது. அவர் நிஜமாக ஒரு புதிய படம் இயக்குகிறார், ஆனால் தமிழில் இல்லை பாலிவுட்டில். சல்மான் கான், சோனாக்ஷியை வைத்து தான...