Sunday, November 8
Shadow

Top Highlights

ஜெய் – அஞ்சலி காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் பேச்சு

ஜெய் – அஞ்சலி காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் பேச்சு

Latest News, Top Highlights
நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதலால், இருவரும் நெருக்கமாக பழகினார்கள். ஜெய் வீட்டுக்கு அஞ்சலி அடிக்கடி போய் வந்தார். ஜெய் தனது படங்களுக்கு அஞ்சலியை சிபாரிசு செய்தார். இதைத்தொடர்ந்து, ‘பலூன்’ என்ற படத்தில் இரண்டு பேரும் ஜோடியாக நடித்தார்கள். மேலும் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஜெய் - அஞ்சலி திடீரென பிரிந்து விட்டார்களாம். அஞ்சலி, ஆந்திராவில் தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறாராம். ஜெய்யும் தனது படங்களில் பிசியாகி விட்டாராம். அதுட்டுமின்றி, தனது படங்களில் அஞ்சலியை சிபாரிசு செய்யும் எண்ணத்தையும் ஜெய் விட்டுவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள். எனினும் இதுகுறித்த உண்மைத் தகவலை ஜெய் அல்லது அஞ்சலி தான் பதில் அளிக்க வேண்டும்....
நடிகை ஸ்ருதிஹசனுக்கு டும் டும் டும்… எப்போ தெரியுமா?

நடிகை ஸ்ருதிஹசனுக்கு டும் டும் டும்… எப்போ தெரியுமா?

Latest News, Top Highlights
தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் மட்டுமே நடிக்கிறார். மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஸ்ருதிஹாசனுக்கும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலுக்கும் நெருக்கமான நட்பு மலர்ந்தது. இருவரும் ஒன்றாக ஒருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. இந்நிலையில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல் ஸ்ருதிஹாசன் அமைதி காப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய ஸ்ருதிஹாசன், சினிமாவை தவிர்த்து தனக்கு வேறு வாழ்க்கையும் இருக்கிறது. பாடல், இசையில் கவனம் செலுத்துகிறேன். நல்ல கதை அமைந்தால் நடிப்பேன் என்றார். இருப்பினும் சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன் மற்றும் சரிகாவுக்கு தனது காதலர் மைக்கேல் கோர்சலை அறிமுகப்படுத்திய ஸ்ருதி, ஆதவ் கண்ணாதாசனின் திருமண...
நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள இத்தனை பேர் போட்டியா?

நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள இத்தனை பேர் போட்டியா?

Latest News, Top Highlights
‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுமகமானவர் நடிகர் ஆர்யா. சினிமாவில் சுமார் 13 வருடங்களை கடந்து முன்னணி நாயகனாக வலம் வரும் இவர் சமீபத்தில் அவரது டுவிட்டர் பக்கத்தில் பெண் தேடுவதாக ஒரு வீடியோவை வெளியிட்டார். விருப்பமுள்ளவர்கள் தங்களை பற்றிய பெயர், படிப்பு, குடும்ப விவரங்களை தெரிவிக்கும்படி தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு மொபைல் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 37 வயதாகும் ஆர்யா குறித்து சினிமாவில் பல கிசுகிசுக்கள் வந்துள்ள போதிலும் இவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏ\ற்படுத்தியுள்ளது. இவர்களில் 18 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் தனக்கு பொருத்தமான மணமகளை ஆர்யா விரைவில் த...
தமிழ்ப்படம் 2.0 படத்தில் புதிய அவதாரம் எடுக்கும் ஜீவா

தமிழ்ப்படம் 2.0 படத்தில் புதிய அவதாரம் எடுக்கும் ஜீவா

Latest News, Top Highlights
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ்ப்படம்'. சிவா, திஷா பாண்டே உள்பட பலரும் நடித்திருந்த இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. சமீபத்தில் வெளியான இந்த பட போஸ்டர்களுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அத்துடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சிவா - ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த திஷா பாண்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் ஜீவா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அநேகமாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஜீவா வந்து கலக்குவார் என்று நெட்சன்கள் பேசி வருகின்றனர். சென்னையை தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மலேச...
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “

பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “

Latest News, Top Highlights
படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை என்பதால் சூர்யா நடிக்கும் 36வது திரைப்படம் சூர்யா36 என்று அழைக்கப்படுகிறது ) திரைப்படம் ! சூர்யா நடிப்பில் , செல்வாராகவன் இயக்கத்தில் , ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் “ சூர்யா 36 “. இப்படத்தின் படபிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் முதல்கட்ட படபிடிப்பும் ,பாடல் பதிவும் நிறைவடைந்துவிட்டது. விரைவில் துவங்கவுள்ள இரண்டாம் கட்ட படபிடிப்புக்கு படக்குழு தற்போது தயாராகி வருகிறது. படத்துக்காக 3கோடி ரூபாய் பொருட்செலவில் அம்பாசமுத்திரம் நகரத்தை போன்ற மிகபிரமாண்டமான செட் ஒன்று சென்னையில் இரவு – பகலாக உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆர்ட் டிபார்ட்மென்டை சேர்ந்த 220க்கும் மேற்பட்டவர்கள் இதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு இ...
ஜாக்கி சான் ஹீரோயினை தன்வசப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்

ஜாக்கி சான் ஹீரோயினை தன்வசப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்

Latest News, Top Highlights
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் `நாச்சியார்' படம் திரையரங்குகளிர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கறது. அத்துடன் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணமாக இருக்கின்றன. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக ‘ஐங்கரன்’ வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ‘100 % காதல்’, ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘ரெட்ட கொம்பு’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார். பேண்டஸி காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க 3டி கேமராவில் படமாக்கப்படுவதாகவும், இந்த படத்துக்கு 3டி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில், ஜி.வி.பிராகாஷ் ஜோடியாக அமைரா தஸ்தூர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷின் `அனேகன்' படத்திற்கு பிறகு தம...
குத்து சண்டை வீரராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்

குத்து சண்டை வீரராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்

Latest News, Top Highlights
பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'நாச்சியார்'. இதற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது புதிதாக கோபி நயினார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். முழுக்க வட சென்னையை களமாகக் கொண்ட இப்படத்தின் முதல்கட்ட வேலையில் இறங்கியிருந்தார் கோபி நயினார். இதில் குத்துச்சண்டை முக்கிய அம்சமாக இடம்பெறும் எனத் தெரிகிறது. ‘செம’, ‘100 % காதல்’, ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘ரெட்ட கொம்பு’ ஆகிய படங்களில் ஜி.வி.பிரகாஷ் கவனம் செலுத்தும் சூழலில், இப்படம் ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்கு பின்னணியில் தயாராக உள்ளது. இப்படத்தின் குத்துச்சண்டை காட்சிகளுக்காக ஜி.வி.பிரகாஷ் பிரத்யேகமாக பயிற்சி பெற உள்ளார்....
சிம்பு வாய்ப்பை தட்டி பறித்த மாதவன்

சிம்பு வாய்ப்பை தட்டி பறித்த மாதவன்

Latest News, Top Highlights
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இப்படத்தை மதன், எல்ரெட் குமார், ஜெயராமன் இணைந்து தயாரித்தார்கள். தமிழ் திரையுலகில் காதலர்கள் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்ட படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. தற்போது வரை இப்படத்தின் பாடல்களுக்கு வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் 2-ம் பாகம் குறித்த தனது எண்ணம் குறித்து விழா ஒன்றில் பேசிய கெளதம் மேனன். ''விண்ணைத்தாண்டி வருவாயா 2'-ம் பாகத்தில் 4 நாயகர்கள் இருப்பார்கள், அதில் சிம்பு ஒருவராக இருப்பார். இப்படத்தில் கார்த்தி மறுபடியும் ஜெஸ்ஸியை 7 ஆண்டுகள் கழித்து சந்திப்பது தான் கதைக்களமாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2'-ம் பாகத்தில் சிம்புவுக்கு பதிலாக...
மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் கமல்ஹாசன்

மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் கமல்ஹாசன்

Latest News, Top Highlights
வாய் சொல்லில் வீரனடி என்று இருக்காமல் செயலிலும் நான் வீரன் என்று அரசியலுக்கு வந்தவர் கமல்ஹாசன் அதுவும் இன்று மக்கள் போராடும் ஒவ்வொரு பிரச்னைகளை பார்த்து மக்களுக்காக போராட களம் இறங்கும் கமல்ஹாசன் இன்று தன அரசியல் பயணத்தை துவங்கினார் அதுவும் அப்துல் கலாம் அவர்கள் வீட்டில் இருந்து போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு மக்கள் வெள்ளத்தின் நடுவே மிதந்து சென்றார் நடிகர் கமல்ஹாசன். தனது அரசியல் பயணத்தை அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து துவங்கிய கமல்ஹாசன், இதையடுத்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மற்றும் செய்தியாளர்களை சந்தித்தார். இதன்பிறகு பேக்கரும்பு பகுதியிலுள்ள அப்துல் கலாம் நினைவிடம் சென்றார். அப்துல்கலாம் நினைவிடத்தில் கமல்ஹாசன் மரியாதை செலுத்தினார் இதைத்தொடர்ந்து மதுரை நோக்கி புறப்பட்டார் கமல்ஹாசன். மதுரைக்கு செல்லும் வழியில் 3 இடங்களில் உரை நிகழ்த்த உள்ளார். ம...
தமிழகத்தின் அரை நூற்றாண்டு காலப் போராட்டத்தை மையப்படுத்தும் கேணி !

தமிழகத்தின் அரை நூற்றாண்டு காலப் போராட்டத்தை மையப்படுத்தும் கேணி !

Latest News, Top Highlights
தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”. “காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர். அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை” என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் “கேணி” திரைப்படம் வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா ந...