Sunday, November 8
Shadow

Top Highlights

புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ”தமிழனானேன்” பிப்ரவரி 23 முதல்

புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ”தமிழனானேன்” பிப்ரவரி 23 முதல்

Latest News, Top Highlights
தமிழனின் தவறான மனப்போக்கால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன. அதனை அன்றைய ஆதித்தமிழன் எதிர்கொண்டால் எப்படி அணுகுவான்? அதற்குத் தீர்வு காண எப்படி நடந்து கொள்வான்? என்பதைப் பேசும் படம் தான் ’தமிழனானேன்' புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் 'தமிழனானேன்'. கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்கி நடித்திருக்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன், அவருக்கு ஜோடியாக வந்தனா வரதராஜன், நடித்துள்ளார். சரவணன், பிரீத்தா, திருலோகச்சந்தர், அத்விக், ஷக்தி, ஜான் போன்ற புதுமுகங்களும் நடித்துள்ளனர். விக்னேஷ் அருள் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரகு ராமையா இசை அமைத்துள்ளார்.படம் பற்றி இயக்குநர் சதீஷ் ராமகிருஷ்ணன் கூறியதாவது: "இது தொலைந்து போன நம் பாரம்பரியங்களைத் தேடும் கதை. மறைந்து போன நம் வீரக் கலைகளைத் தேடும் கதை. நம் ஆதி கலைகளைத் தேடுகிற படமாக இருந்தாலும் நவீன ஹாலிவுட் தொழில் நுட்பங்கள் படத்தி...
விஜய் 62 படக்குழுவினருக்கு புதிய உத்தரவு

விஜய் 62 படக்குழுவினருக்கு புதிய உத்தரவு

Latest News, Top Highlights
விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இப்போது, 3-வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘மெர்சல்’ படத்தை அடுத்து இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அப்போது ஒரு பாடல் காட்சி படமானது. பின்னர் மொத்த படக்குழுவும் கொல்கத்தா சென்றது. அங்கு அதிரடி சண்டை காட்சிகளும் வேறுசில காட்சிகளும் படமாகின. அப்போது அங்கு படமாக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்தது. இரைதயடுத்து படப்பிடிப்பில் யாரும் மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது என்று படக்குழுவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் அறிவுறுத்தியுள்ளாராம்....
சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் `செக்க சிவந்த வானம்’

சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் `செக்க சிவந்த வானம்’

Latest News, Top Highlights
`காற்று வெளியிடை' படத்தை தொடர்ந்து மணிரத்னம் `செக்க சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளத்தில் சில தகவல்கள் கசிந்திருக்கின்றன. விஜய் சேதுபதி போலீசாக நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், சிம்பு, அரவிந்த் சாமி மற்றும் அருண்விஜய்யின் கதாபாத்திரம் குறித்த ஒரு பேச்சும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி சிம்பு இன்ஜினியராகவும், அரவிந்த்சாமி அரசியல்வாதியாகவும், அருண் விஜய் கோவக்காரராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு தகவலின்படி படத்தில் இந்த 4 பேரும் அண்ணன், தம்பிகளாக நடிப்பதாக ஒரு தகவலும் சமீபத்தில் உலா வந்தது. மேலும் இந்த படம் தொழிற்சாலை மாசை மையப்படுத்தி உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்ற...
சன்னி லியோனுக்கு போட்டியான பிரியா வாரியர்

சன்னி லியோனுக்கு போட்டியான பிரியா வாரியர்

Latest News, Top Highlights
ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய பூவே என்ற பாடல் காட்சியில் நடித்து பிரபலமாகி இருப்பவர் நடிகை பிரியா வாரியர். ஒரே பாடலின் மூலம் மலையாள மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். அதுமட்டுமின்றி இந்திய அளவிலும் பிரலமாகி இருக்கும் பிரியா வாரியரை கூகுள் இணையதளத்தில் தேடுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை உச்சத்தில் இருந்த இந்தி நடிகை சன்னிலியோனையும், பிரியா வாரியர் பின்னுக்கு தள்ளிவிட்டாராம். அதுமட்டுமா, இவரை இன்ஸ்டாகிரமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது 38 லட்சத்தை தாண்டிவிட்டது. இதற்கு முன்பு இந்தி நடிகைகள் கத்ரினா கைப், திபீகா படுகோனே ஆகியோர் தான் முன்னணியில் இருந்தனர். அவர்களும் இப்போது பின்தங்கிவிட்டனர். இவ்வுளவு பிரபலங்களுக்கு மத்தியில் பிரியா வாரியருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு ஒன்றும...
சூர்யாவால் தடைபடும் படப்பிடிப்பு – படக்குழு புதிய யோசனை

சூர்யாவால் தடைபடும் படப்பிடிப்பு – படக்குழு புதிய யோசனை

Latest News, Top Highlights
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தஞ்சாவூர் பகுதிகளில் நடந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு தஞ்சாவூர் மற்றும் தென் தமிழகத்தில் நடத்தப்பட உள்ளதாம். அதற்கான படப்பிடிப்பு லொகேஷன்களை படக்குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர். அதிலும் ஆறு மற்றும் வயல்வெளி சூழந்த பகுதியில் படப்படிப்பை நடத்த செல்வராகவன் விருப்பம் தெரிவித்துள்னளாராம். ஆனால் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால், அங்கு மக்கள் கூட்டம் கூடி படப்பிடிப்பு தடைபட வாய்ப்பு இருப்பதால், செட் போட்டு படப்பிடிப்பு நடத்தலாம் என்று யோசனையில் படக்குழுனர் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். அதற்காக நெல்லை அருகில் இருக்கும் அம்பாசமுத்திரம் போன்று செட் ஒன்றும் போடப்பட்டு வருகிறதாம். அதற்காக கலை இயக்குநர் விஜய் முருகன் தலைமையில்...
சமூக அக்கறையில் ஈடுபடும் புதுமுக நடிகர் பிரபா

சமூக அக்கறையில் ஈடுபடும் புதுமுக நடிகர் பிரபா

Latest News, Top Highlights
திருட்டு V C D மற்றும் மதுரை மாவட்டம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் பிரபா அது மட்டும் இல்லாமல் சமூக பொது நலன் விஷயங்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். கடந்த வருடம் மே மாதம் சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற மாணவன் வீட்டில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்தான் விழுந்ததில் அவனது முதுகெலும்பு முழுவதும் உடைந்து அவனது படிப்பு பாதியில் நின்றது. அவனது தந்தை வேலு ஆட்டோ ஓட்டுநர். ஆட்டோ ஓட்டித்தான் தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். படிப்பில் திறமையான தனது மகன் விபத்து ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக அவன் பள்ளி படிப்பை தொடர முடியாத இருந்த நிலையில்.இதை தன் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட நடிகர் பிரபா நேரில் சென்று அவரை சந்தித்து அவருடைய மொத்த படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டார். அது மட்டுமின்றி ராஜேஷுடைய தம்பி அஜய் foodball விளையாட்டு வீரர் என்று கூறியது அவர்க்கு தேவையா விளைய...
அஜித் விருப்பம் இயக்குனர் சிவா நிறைவேற்றுவாரா

அஜித் விருப்பம் இயக்குனர் சிவா நிறைவேற்றுவாரா

Latest News, Top Highlights
தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் விரைவில் தொடங்கவிருக்கும் படம் விசுவாசம். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் தான் தொடங்கவுள்ளதாம் அதை தொடர்ந்து 4 மாதத்தில் படப்பிடிப்பு முடிய, படத்தை தீபாவளிக்கு ரிலிஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்நிலையில் விசுவாசம் படத்திற்காக அஜித் நேற்று துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன் அஜித்தை பார்க்க ஏதோ கேங்ஸ்டர் லுக்கில் இருந்தார். இதன் மூலம் போலிஸ்-ரவுடி கதை அஜித் டபுள் ரோல் செய்கிறார் என்று ஒரு செய்தி கசிந்துள்ளது. மேலும், படத்தில் அர்ஜுனை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடக்க, அஜித் ரவுடியாகவும், அர்ஜுன் போலிஸாகவும் நடிக்க வாய்ப்புள்ளதாம். எது எப்படியோ படத்தை எப்படியாவது 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என்பது அஜித்தின் விருப்பம்....
கோர்ட் படியேறிய புருவ புயல் பிரியா வாரியர்.. வருத்தத்தில் ரசிகர்கள்

கோர்ட் படியேறிய புருவ புயல் பிரியா வாரியர்.. வருத்தத்தில் ரசிகர்கள்

Latest News, Top Highlights
புருவ புயல் பிரியா வாரியர் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக ஏற்று உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்த உள்ளது. கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். படித்து வருபவர் பிரியா வாரியர். இவர் நடித்துள்ள "ஒரு அடார் லவ்' என்ற மலையாள திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அந்தத் திரைப்படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் யூடியூப்பில் வெளியானது. தனது சகமாணவன் கதாப்பாத்திரத்துடன் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அந்த பாடல் இருந்தது. அதில் புருவத்தை வளைத்து இவர் செய்யும் சேஷ்டை மற்றும் கண்ணடிப்பு காட்சிகள் வைரலாக மாறி தேசிய அளவில் புகழை பெற்றுக்கொடுத்தன. இந்நிலையில், அவருக்கு எதிராக, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள ஃபலக்னாமா காவல் நிலையத்தில் கடந்த 14ம் தேதி, காதலர் தினத்தன்று ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரியா வாரியர் நடித்த அந்தப் பாடலின் வரிகள் முஸ்லிம் ச...
கமல்ஹாசன் வாழ்த்து ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீமான் ஏன் விளக்கம்

கமல்ஹாசன் வாழ்த்து ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீமான் ஏன் விளக்கம்

Latest News, Top Highlights
கமல்ஹாசனை ஏன் நான் சந்தித்தேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். ஆழ்வார்பேட்டை இல்லத்தில், நடிகர் கமல்ஹாசனை சீமான் இன்று சந்தித்தார். பிறகு நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் மிக மோசமான சூழ்நிலைக்கு ஆட்சி போய்க்கொண்டுள்ளது. எப்படியாவது ஒரு மாற்றம் ஏற்பட்டுவிடாதா என்று நினைத்து எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். இந்த மண்ணின் மக்களால் நேசிக்கப்படும் அண்ணன், கமல்ஹாசனும் 21ம் தேதி கட்சி துவங்குவதாக அறிவித்தார். நான் நேசித்து வளர்ந்த ஒரு கலைஞர் என்பதால் அவர் என்னை வந்து பார்ப்பது சரியாக இருக்காது என்பதால் நாங்கள் தேடி வந்தோம். அவர் பயணம் புரட்சிகர, வெற்றிகர அரசியல் பயணமாக இருக்க வேண்டும் என்பது வாழ்த்து. ஒரு நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம், என்றார். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தீர்களே, கமலை வாழ்த்துகிறீர்களே என்ற ...
பாலா சாருக்கு நன்றி; புதிய பயணம் தொடங்கியது – ஜீ.வி.பிரகாஷ் குமார்

பாலா சாருக்கு நன்றி; புதிய பயணம் தொடங்கியது – ஜீ.வி.பிரகாஷ் குமார்

Latest News, Top Highlights
திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருந்த எனக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் நான் நடித்து வெளியாகியுள்ள 'நாச்சியார்' படத்துக்கு நீங்கள் அளித்த அமோக ஆதரவிற்கும் வரவேற்புக்கும் மிக்க நன்றி. நாச்சியார் திரைப்படம் விமர்சகர்களிடமும், மக்களிடமும், திரையுலக பிரமுகர்களிடம் எனக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்துள்ளது. எப்போதுமே பாலா சார் படத்தில் நடிப்பது என்பது பல நடிகர்களின் கனவு. 'நாச்சியார்' படத்துக்காக என்னை அணுகிய போது கூட, இசையமைக்கத் தான் அழைக்கிறார் என்று தான் நினைத்தேன். 'நீ தான் நடிக்கிற' என்ற பாலா சார் சொன்ன போது, நான் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் எழுதிவிட முடியாது. 'நாச்சியார்' படத்தில் என் நடிப்பைப் பார்த்து அனைவருமே 'நல்ல நடிகன்' என்று தெரிவித்திருக்கி...