Sunday, November 8
Shadow

Top Highlights

‘மீசைய முறுக்கு’. படத்தின் இசை வெற்றியை கொண்டாடிய திங்க் மியூசிக்

‘மீசைய முறுக்கு’. படத்தின் இசை வெற்றியை கொண்டாடிய திங்க் மியூசிக்

Latest News, Top Highlights
அவ்னி சினிமேக்ஸ் சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி எழுதி, இசையமைத்து நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'மீசைய முறுக்கு'. அந்த படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு ஆன்லைன் தளங்களில் பல சாதனைகளை செய்து வந்தது. தற்போது அவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 150 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணமான இசைக்கலைஞர்களை கவுரவிக்க சென்னை சத்யம் சினிமாஸில் விழா நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் குஷ்பூ, சத்யம் சினிமாஸ் தலைவர் ஸ்வரூப் ரெட்டி, திங்க் மியூசிக் துணை தலைவர் சந்தோஷ் குமார், பிரீத்தா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு தயாரிப்பாளராக இங்கு வந்திருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சுந்தர் சி கலகலப்பு 2 சென்சார் பணிகளில் பிஸியாக இருப்பதால் வர முடியவில்லை. ஓய்வில்லாமல் இரவு பகலாக உழைப்பை மட்டுமே நம...
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தலைமையில் எம்.ஜி.ஆர் பட விழா ஆரம்பம்

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தலைமையில் எம்.ஜி.ஆர் பட விழா ஆரம்பம்

Latest News, Top Highlights
மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். ஆனால் அதற்குள் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. நூற்றாண்டு விழா கண்ட எம்ஜிஆரின் கனவுப் படமான கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படம் தற்போது அனிமேஷனில் உருவாகிறது. எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த அவரின் நண்பர் மறைந்த ஐசரி வேலனின் மகன் கல்வியாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் சார்பில் தயாரிக்கிறார். பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவாவும் இணைந்து தயாரிக்கிறார். அனிமேஷனில் உருவாகும் இந்த படத்தை அருள் மூர்த்தி இயக்குகிறார். ...
இன்றைய அரசியல் சூழ்நிலையையும் தன ஆதரவு யாருக்கு என்றும் சொன்ன சூர்யா

இன்றைய அரசியல் சூழ்நிலையையும் தன ஆதரவு யாருக்கு என்றும் சொன்ன சூர்யா

Latest News, Top Highlights
சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் அதோடு மிக பெரிய ரசிக்கவே பட்டாளத்தையும் உண்டுபண்ணியுள்ளார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ரிலீஸ் ஆனா தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது அதோடு வசூலிலும் சாதனை படைத்துள்ளது.இந்த படத்தின் வெற்றி சந்திப்பு நேற்று சென்னையில பிரபல ஓட்டலில் நடைபெற்றது அப்போது பத்திரிக்கையாளர்கள் பேசிய சூரிய இன்றைய அரசியல் சூழ்நிலையை பற்றி பேசினார். அப்போது, நடிகர் சூர்யாவிடம் தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையென்று தெரிவித்துள்ளார். மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தான் ஆதரிக்கவில்லையென்று வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்தவர், அரசியலில் ஈடுபடும் நடிகர்களில் யாரை ஆதரிப்பேன் என்...
விவசாயத்தையும் விவசாயிகளை கொண்டாடுவதற்காகவும் உருவாக்கப்பட்ட “தலைவணங்காதே தமிழா”

விவசாயத்தையும் விவசாயிகளை கொண்டாடுவதற்காகவும் உருவாக்கப்பட்ட “தலைவணங்காதே தமிழா”

Latest News, Top Highlights
விவசாயத்தையும் விவசாயிகளை கொண்டாடுவதற்காகவும் உருவாக்கப்பட்ட இசையமைப்பாளர் அருண்ராஜின் - தலைவணங்காதே தமிழா "தலைவணங்காதே தமிழா" பாடல் பொங்கல் அன்று விவசாயத்தையும் விவசாயிகளைக் கொண்டாடுவதற்காகவும் வெளியிட்டுள்ளனர். இப்பாடலை தயாரித்து இசையமைத்து வெளியிட்டவர் இசையமைப்பாளர் அருண்ராஜ் திரைப்பட நடிகர்களான திரு. அருண்விஜய், திரு. சமுத்திரக்கனி, திரு. Rj. பாலாஜி, ஆகியோர் இந்தப் பாடலை வெளியிட்டு விவசாயிகளுக்கு தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் அருண்ராஜ் பாடல் உருவானதைப் பற்றி கூறுகையில் '' நெடுவாசலில் நடந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டபோது தான் போராட்டத்தின் நிலையும் விவசாயிகளின் பக்கம் உள்ள உண்மையும் தன்னை இந்தப் பாடலை உருவாக்கவழிவகுத்தது. இந்தப்பாடல் தந்தை மகனைப் பற்றிய அழகிய வாழ்வியல் கதை தொகுப்பு, அவர்களின் தினசரி வாழ்க்கையும் அதில் அவர்கள் சந்திக்கும் கடன் ...
விஜய் மற்றும் அஜித் இவர்களை ஓவர்டேக் செய்யும் சிவகார்த்திகேயன்

விஜய் மற்றும் அஜித் இவர்களை ஓவர்டேக் செய்யும் சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய், இவர்களை அடுத்து சூர்யா, விக்ரம் தனுஷ் சிம்பு என்று பல முன்னணி நட்சத்திரங்கள் இருந்தாலும் இவர்களை எல்லாம் மிஞ்சும் அலைபவுக்கு குறுகிய காலத்தில் உயர்ந்த பெருமை என்றால் அது சிவகார்த்திகேயன் தான் காரணம் அடுத்தடுத்த வெற்றி படங்களால் கிடுகிடுவென வளர்ந்து வருகிறார். அதோடு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த வேலைக்காரன் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது, படம் வெறும் 25 நாளில் ரூ 25 கோடி வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது பைரவா, விவேகம் படத்தின் வசூலையும் நெருங்கி வருகிறது, சிவகார்த்திகேயன் இந்த படத்தின் வசூல்களை ஓவர்டேக் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....
காளி’ படத்தின் முதல் சிங்கள் ட்ராக் வரும் ஜனவரி 24 ஆம் தேதி ரிலீஸ்

காளி’ படத்தின் முதல் சிங்கள் ட்ராக் வரும் ஜனவரி 24 ஆம் தேதி ரிலீஸ்

Latest News, Top Highlights
விஜய் ஆண்டனி, அஞ்சலி மற்றும் சுனைனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'காளி'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் சில நாட்களுக்கு முன்பு ரிலீசான போஸ்டருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் ஆண்டனியின் இசையில் இப்படத்தின் எல்லா பாடல்களும் அசத்தலாக அமைந்துள்ளன எனக்கூறப்படுகிறது.'காளி' படத்தின் முதல் சிங்கள் ட்ராக் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியிடப்படுத்துள்ளது. இப்படத்தின் விளம்பர யுக்திகளை இப்பாடல் வெளியீட்டின் மூலம் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளனர் .இப்படத்தை 'Vijay Antony Film Corporation' நிறுவனம் தயாரித்துள்ளது. இது ஒரு action படமாகும். இப்படத்தில் விஜய் ஆண்டனியின் மற்ற இரண்டு ஜோடிகளாக ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா ஆகியோர் நடித்துள்ளனர். யோகி பாபு, RK சுரேஷ், மதுசூதன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய துணை கத...
முதலில் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவது ரஜினியா? கமலா?

முதலில் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவது ரஜினியா? கமலா?

Latest News, Top Highlights
ரஜினியும், கமல்ஹாசனும் போட்டிப் போட்டுக் கொண்டு மக்களுக்கு சேவை செய்ய வர உள்ளதால், தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இருவருமே இன்னமும் தங்களது புதியக் கட்சிக்கு பெயர் சூட்டவில்லை. கொள்கைகளை அறிவிக்கவில்லை. மாநில, மாவட்ட நிர்வாகிகளையும் கூட அவர்கள் இருவரும் நியமிக்கவில்லை. புதிய அரசியல் கட்சி தொடங்கப் போகிறோம் என்று அவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டு பிறகு அமைதியாகி விட்டனர். இதனால் ரஜினி, கமல் இருவரது அரசியல் நடவடிக்கைகளில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பதாக பேச்சு எழுந்தது. இதை புரிந்து கொண்ட இருவரும் மீண்டும் வீறுகொண்டு எழுந்து விறுவிறுப்பாக அரசியல் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து முதலில் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவது ரஜினியா? கமலா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற்கு விடை தெரியத் தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன், ரஜினியை முந்திக்கொண்டு, அடுத்த ம...
ராணி முகர்ஜி “ஹிச்சி” திரைப்படத்தின் விளம்பர சுற்றுப்பயணத்தின் போது ஹீரோக்களையும் சந்திக்க முடிவு!

ராணி முகர்ஜி “ஹிச்சி” திரைப்படத்தின் விளம்பர சுற்றுப்பயணத்தின் போது ஹீரோக்களையும் சந்திக்க முடிவு!

Latest News, Top Highlights
ராணி முகர்ஜி சமூகத்தில் பாகுபடுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது பலவீனத்தை எடுத்துச்சொல்லி சமூகத்தில் முன்னேற பேசவுள்ளார். ராணி தனது திரைப்படத்தின் விளம்பரத்தை நாடெங்கும் பரப்ப திட்டமிட்டுள்ளார். சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தரும் செய்திகளை பேசவுள்ளார்.திரைப்பட விளம்பரத்தை தாண்டி பொது மக்களுக்கு அவர்களது பலவீனத்தை எடுத்துச்சொல்லி வாழ்கையில் முன்னேறும் பல கருத்துக்களை தெரிவிக்கவுள்ளார்.சமூக பாகுபாடு, சமூக ஏற்றத்தாழ்வு,சமூக பழக்கவழக்கம் போன்றவற்றை எடுத்துக்கூறி வாழ்க்கையில் முன்னேற்றமடைய மக்களிடம் பேசவுள்ளார். ராணி முகர்ஜி மக்களிடம் எளிமையாக பேசும் திறன் படைத்தவர். ஹிச்சி திரைப்படம் மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேறும் கருத்துக்களை தெரிவிக்கும் எனவும் சமூகத்தில் மக்களுக்கு தங்களது பலவீனத்தை எடுத்துகாட்டி ஊக்கமளிக்கும் படமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். ராணி முகர்ஜி மக்களிடம...
நடிகை தேவயானியின் தந்தை காலமானார்

நடிகை தேவயானியின் தந்தை காலமானார்

Latest News, Top Highlights
1990-களில் வெளிவந்த படங்களில் விஜய், அஜித், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவரது அப்பாவின் பெயர் ஜெய்தேவ் பேட்டர் பெட். இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகர் நகுல். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர்களது தந்தை ஜெய்தேவ் (73) இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இவரது உடல் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் இவரது உடலக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது....
‘ஸ்கெட்ச்’ வெற்றி விழாவில்  இயக்குனர் விஜய் சந்தரை பாராட்டிய விக்ரம்

‘ஸ்கெட்ச்’ வெற்றி விழாவில் இயக்குனர் விஜய் சந்தரை பாராட்டிய விக்ரம்

Latest News, Top Highlights
சீயான் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வேளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு, படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், சீனு, விக்ரம், ஸ்ரீமன், டைரக்டர் விஜய் சந்தர். கல்லூரி வினோத், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் தாணு பேசுகையில்,‘ இந்த படத்திற்கு தற்போது பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. மலேசியாவில் கபாலி 72 சென்டர்களிலும், ஸ்கெட்ச் 71 சென்டர்களிலும் திரையிடப்பட்டிருக்கிறது. தஞ்சாவூரில் இந்த படம் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டது. தற்போது நான்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி .’ என்றார். விக்ரம் பேசுகையில்,‘ கமர்சியலாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற நினைத்து,...