Sunday, November 8
Shadow

Top Highlights

பப்ளிக் ஸ்டார்வுடன் முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் ‘பிக் பாஸ்’ ஜூலி.! 

பப்ளிக் ஸ்டார்வுடன் முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் ‘பிக் பாஸ்’ ஜூலி.! 

Latest News, Top Highlights
ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இதனையடுத்து ஜூலி பிரபல  தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது ஜூலி 'K7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு, "இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்...
தரமணி நாயகனின் நன்றி கலந்த புத்தாண்டு வாழ்த்துகள்

தரமணி நாயகனின் நன்றி கலந்த புத்தாண்டு வாழ்த்துகள்

Latest News, Top Highlights
நான் கதையின் நாயகனாக அறிமுகமான "தரமணி" படத்திற்கு தாங்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி. தரமணி படத்தில் எனது நடிப்பை பாராட்டி முதல் படத்திலேயே ஒரு நல்ல நடிகனாக வலம் வரும் அனைத்து தகுதியும் உள்ளது என நீங்கள் கூறிய வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியும் மேலும் மேலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சிறந்த கதாபத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது. பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களின் இத்தகைய ஆதரவு எனது கலைப்பயணத்திற்கு ஊன்று கோளாக அமையும் என்பதை உளமாற நம்புகிறேன். என் சினிமா அறிமுகத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்த இயக்குனர் ராம், தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமார், உடன் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நலவாழ்த்துக்கள்....
அறம் இரண்டாம் பாகம் நயன்தாரா இல்லை அவருக்கு பதில் பிரபல ஹீரோ

அறம் இரண்டாம் பாகம் நயன்தாரா இல்லை அவருக்கு பதில் பிரபல ஹீரோ

Latest News, Top Highlights
நயந்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அறம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. சமூக பிரச்சியமை மையமாக வைத்து உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கியிருந்தார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில், இப்படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து இயக்குநர் கோபி நயினாரிடம் கேட்டதற்கு, தனது அடுத்த படம் குறித்து சித்தார்த்திடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை எதுவும் முடிவாகவில்லை. முடிவானதும் படம் குறித்த தகவல்களை வெளியிடுவோம், என்று தெரிவித்தார். மேலும், சித்தார்த்தை வைத்து இயக்க இருக்கும் படம் ‘அறம்’ இரண்டாம் பாகம் அல்ல. ‘அறம்’ இரண்டாம் பாகம் நயந்தாராவை வைத்தே இயக்கப்படும். சித்தார்த்தை வைத்து இயக்குவது முற்றிலும் மாறு...
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது – கீர்த்தி சுரேஷ் பேட்டி

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது – கீர்த்தி சுரேஷ் பேட்டி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் தற்போது நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். வருகிற பொங்கல் அன்று வெளியாகவுள்ள ஸ்டுடியோ கிரீன் K.E. ஞானவேல் ராஜாவின் “ தானா சேர்ந்த கூட்டம் “ படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர் தான். தானா சேர்ந்த கூட்டம் படத்தை பற்றியும் , தன்னுடைய கதாபாத்திரம் மற்றும் தன்னோட நடித்த நடிகர்கள் மற்றும் டெக்னிஷியன்ஸ் பற்றியும் கூறுகிறார் கீர்த்தி சுரேஷ். தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நான் பிராமண பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. நான் ஹுமர் கலந்த சஸ்பன்ஸ் வேடத்தில் நடிக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் சிவன் கதை சொல்லும் போதே எனக்கு கதையும் என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது. பள்ளி பருவத்திலேயே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. என்னுடைய அம்மா சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும் போது ந...
தனுஷ் – பாலாஜிமோகன் மாரி 2 படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

தனுஷ் – பாலாஜிமோகன் மாரி 2 படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

Latest News, Top Highlights
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான மாரி படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் இயக்குனர் பாலாஜி மோகன் மாரி 2 படத்தின் அறிவிப்பு பற்றி அதிகார பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து அப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களையும் பாலாஜி மோகன் வெளியிட்டிருந்தார். இப்படத்தின் பூஜை டிசம்பர் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பாலாஜி மோகன் நடிகர் தனுஷ், கிருஷ்ணா மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் எடிட்டர் ஜி.கே. பிரசன்ன்ன ஆகியோர் கலந்து கொண்டனர். மாரி 2 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி 10 வருடங்களுக்க...
ராகவா லாரன்ஸின் புத்தாண்டு “அமைதி புரட்சி இன்று முதல் ஆரம்பம்

ராகவா லாரன்ஸின் புத்தாண்டு “அமைதி புரட்சி இன்று முதல் ஆரம்பம்

Latest News, Top Highlights
சாதாரன நிலமையில் இருந்து படிப் படியாக உயர்ந்து இன்று நல்ல நிலமையில் உள்ளவர் ராகவா லாரன்ஸ்... உயர்ந்த இடத்திற்கு வந்த உடன் பழைய விஷயங்களை மறந்து போகிறவர்கள் மத்தியில் இவர் வித்தியாசமானவர்.. தான் வளர்ந்த உடன் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து பத்தாண்டுகள் ஆகிறது.. டிரஸ்ட் ஆரம்பித்ததிலிருந்து ஓவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புது விஷயங்களை அமல் படுத்தி அதை வெற்றி ஆக்கி காட்டுவது லாரன்ஸின் வழக்கம் .. முதலாண்டு ஊனமுற்றோர்களும் ஆட முடியும் என்று அவர்களுக்காக டான்ஸ் பள்ளி ஆரம்பித்தது அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏழை மக்களின் குழ்ந்தைகள் படிக்க... மருத்துவ உதவி என்று வருப்வர்களுக்காக உதவி செய்து இதய அறுவை சிகிச்சை.. விவசாயீகளின் நலன் காத்தல் குடிசை பகுதி மக்களின் குழந்தைகளை தரமான கல்வி கற்க வைப்பது அமரர் அப்துல்கலாம் நினைவாக அறம் செய்ய விரும்பு என்று ஒரு கோடி ரூபாய் செலவு செய்தது ... இப்ப...
விக்ரமின் தந்தையும், நடிகருமான வினோத் ராஜ் காலமானார்

விக்ரமின் தந்தையும், நடிகருமான வினோத் ராஜ் காலமானார்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். அவரது தந்தையும், நடிகருமான வினோத் ராஜ் (80) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். முன்னாள் இந்திய ராணுவ வீரரான இவர், பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் திரிஷாவிற்கு அப்பாவாகவும், `திருப்பாச்சி' படத்தில் விஜய்யின் அப்பாக நடித்திருப்பார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், சில காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச் சடங்கு நாளை மாலை நடக்க இருக்கிறது. இறுதி அஞ்சலிக்காக இவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது....
புத்தாண்டில் படத்தின் டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி

புத்தாண்டில் படத்தின் டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தை எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார். ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் என்கிறது கியாவோஸ் விதி. தமிழ் சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு இவ்விதியைப் பயன்படுத்தி, சுவாரஸ்யமாய் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் பாலா. இந்தப் படத்தில், தன்னுடைய காதலியைத் தொலைத்து...
அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ரஜினியின் முதல் ட்வீட்

அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ரஜினியின் முதல் ட்வீட்

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து வந்தார். கடைசி நாளான இன்று அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என்று குழம்பிப் போயிருந்த பலரது கேள்விக்கும் இந்த ஆண்டின் கடைசி நாளான இன்று விடை கிடைத்திருக்கிறது. மேலும் ரஜினியின் இந்த முடிவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், மோகன் பாபு உள்ளிட்ட பலரும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ரஜினி அவரது டுவிட்டர் பக்கத்தில் என்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் ...
இரண்டு இயக்குநர்களுக்கு இடையே மாட்டிக் கொண்ட அதுல்யா ரவி

இரண்டு இயக்குநர்களுக்கு இடையே மாட்டிக் கொண்ட அதுல்யா ரவி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களாக வலம் வருபவர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான அதுல்யா ரவியும் தற்போது இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதுல்யாவின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ‘காதல் கண்கட்டுதே’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அதுல்யா, நடிப்பில் ‘ஏமாலி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தனது அடுத்த படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் அதுல்யா. கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய படத்திற்கு ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் ப...