Sunday, November 8
Shadow

Top Highlights

சொன்னதை செய்யாவிட்டால் மூன்று வருடத்தில் ராஜினாமா – ரஜினிகாந்த்

சொன்னதை செய்யாவிட்டால் மூன்று வருடத்தில் ராஜினாமா – ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
தமிழக அரசியலில் களமிறங்குவதை அதிகாரப்பூர்வமாக, தனக்கே உரிய ஸ்டைலில் ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தமிழக அரசியல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவை அறிவித்துள்ள ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி, கொள்கை, தனது தாரக மந்திரம் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார். ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் அரசியல் அறிவிப்பை அறிவித்த ரஜினிகாந்த் பேசியதாவது:- என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு, எதையும் செய்ய முயற்சிக்காதது எனக்கு குற்ற உணர்வு சாகும் வரை இருக்கும். அரசியல் ரொம்ப கெட்டு போயுள்ளதால் அனைத்தையும் மாற்ற வேண்டும் எல்லாவற்றையம் மாற்ற வேண்டும். அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. ஆன்மிக வழியில் அரசியலை கொண்டு வர வேண்டும். ஜனநாயகம் சீர்கெட்டு போயுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் நம்மை தலை குனிய வைத்துள்ளது. வெளிமாநில மக்கள...
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரில்லர் கதையில் காதலில் புகுந்து விளையாடி இருக்கும் அருள்நிதி

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரில்லர் கதையில் காதலில் புகுந்து விளையாடி இருக்கும் அருள்நிதி

Latest News, Top Highlights
திரில்லர் ஜானர் என்பது சரியான முறையில் உருவாக்கப்படும் போது ரசிகர்களுக்கு ஒரு தலைசிறந்த அனுபவமாக அமையும். அந்த வகையில் ஒரு சிறந்த நடிகரான அருள்நிதி, அவருடைய கதை தேர்வும், கதாபாத்திர தேர்வும் ரசிகர்களாலும், திரைத்துறையிலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவருடைய அடுத்த ரிலீஸான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படமும் முழுக்க முழுக்க திரில்லர் படம். பத்திரிக்கையாளர் பின்னணியிலிருந்து வந்திருக்கும் மாறன் இயக்கியிருக்கிறார். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறார். இரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனர் மாறன் படத்தை பற்றி பேசும்போது, "இந்த மொத்த படத்தின் கதையும் இரவில் நடக்குமாறு திரைக்கதை அமைந்திருக்கிறது. கால் டாக்ஸி டிரைவரான அருள்நிதி ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்ள, அதை தொடர்ந்து எதிர்பாராத களத்தில் திரைக்கதை பயணிக்கும். அதை தொடர்ந்து நடக்கும் விஷயங்கள், எங்கு போய் முடிகிறது என்பதே...
“இமயமலையே இடிந்தாலும் ‘மன்னர் வகையறா’ பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதி” ; தயாரிப்பாளர் சூளுரை..!

“இமயமலையே இடிந்தாலும் ‘மன்னர் வகையறா’ பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதி” ; தயாரிப்பாளர் சூளுரை..!

Latest News, Top Highlights
A3V சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. கமர்ஷியல் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், இளையலதிலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி இந்தப்படத்திற்கு ஒளிபதிவு செய்துள்ளனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர் சுவாமிநாதன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் க...
“நீங்கள் தான் ஆண்டவன், நாம் தான் கடவுள்” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

“நீங்கள் தான் ஆண்டவன், நாம் தான் கடவுள்” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐந்தாவது நாளாக இன்று ரசிகர்களை சந்தித்தார். மத்திய சென்னை மற்றும் வட சென்னை ரசிகர்களை இன்று அவர் சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டார். 1960 களில் மதராஸ் அரசியல், கல்வி, சூழல் என அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக இருந்ததை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார். " என்னை பொறுத்தவரை இது மதராஸ் தான். 1960 களில் காவல் துறை, வழக்கறிஞர், பல்கலைகழக கல்லூரிகள், போக்குவரத்து, அரசாங்கம் என்றால் மதராஸ் மாதிரி இருக்க வேண்டும் என்ற கருத்து அப்பொழுது அண்டை மாநிலங்களில் இருந்தது. எப்படி இப்பொழுது சிங்கப்பூர் அரசாங்கம் பற்றிய ஒரு பிரம்மாண்ட பார்வை உள்ளதோ, அப்போது அதே போன்றதொரு பார்வை அண்டை மாநிலங்களில் மதராஸ் மீதான பார்வையாக இருந்தது. 1973 களில் நான் மதராஸிற்கு வந்தேன். எனது அண்ணன் சத்யா நாரயணன் 14 வயதிலேயே எனக்காக வேலைக்கு சென்றார். 18 வயதில் திரு...
‘கோலி சோடா 2′ பர்ஸ்ட் லுக்’ வெளியிடும் நடிகர் கார்த்தி

‘கோலி சோடா 2′ பர்ஸ்ட் லுக்’ வெளியிடும் நடிகர் கார்த்தி

Latest News, Top Highlights
ஒரு படம் எந்த வகையை சேர்ந்தது , அப்படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி முதன் முதலில் வெளிபடுத்துவதனாலயே 'பர்ஸ்ட் லுக்' என்ற ஒன்று இன்றைய சினிமாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இயக்குனர் விஜய் மில்டனின் 'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்று அப்படத்தின் Post Production பணிகள் தொடங்கின. தற்பொழுது இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' புத்தாண்டன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்ட்டரை நடிகர் கார்த்தி தனது சமூக ஊடக அக்கவுண்டில் வெளியிட்டு ரிலீஸ் செய்யவுள்ளார். கூடிய விரைவில் , இரண்டாவது முறையாக 'கோலி சோடா' என்ற பிராண்ட் தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது . இந்த 'கோலி சோடா 2' படத்தை 'Rough Note' நிறுவனம் தயாரித்துள்ளது....
புதிய மைல்கல்லை தொட்ட இசையமைப்பாளர் டி.இமான்

புதிய மைல்கல்லை தொட்ட இசையமைப்பாளர் டி.இமான்

Latest News, Top Highlights
சின்னத்திரை சீரியல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இதை தொடர்ந்து பல தொலைக்காட்சி சீரியல்களுக்கு இசையமைத்து வந்தார். விஜய் நடித்த `தமிழன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து `விசில்', `6'2' `ரெண்டு' என தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த இமான், `மைனா' படத்தின் மூலம் ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்டார். `மைனா' படத்திற்கு பின்னர் அவரது இசையில் வெளியான பெரும்பாலான படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், இமான் 100-வது படம் என்ற மைல்கல்லை தொட்டிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் `டிக் டிக் டிக்' படம் தான் இமானின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 100-வது படம் என்ற மைல்கல்லை தொட்ட இமானுக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ...
பலூன் – விமர்சனம்

பலூன் – விமர்சனம்

Review, Top Highlights
ஜெய்யும் அஞ்சலியும் காதலித்து திருமணம் ஆனவர்கள். ஜெய்யின் அண்ணன் சுப்பு பஞ்சு, அவரது சிறு வயது மகன் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் ஜெய். இவர் கதையை கேட்ட தயாரிப்பாளர் ஒருவர், இந்த கதை வேண்டாம் வேறு எதாவது பேய் கதை வேண்டும் என்று கேட்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் ஜெய், ஊட்டியில் உள்ள ஒரு வீட்டில் பேய் இருப்பதாக அறிகிறார். இதைப் பற்றி தெரிந்துக் கொண்டு படமாக்கலாம் என்று நினைத்து, மனைவி அஞ்சலி, அண்ணன் மகன் பப்பு, ஜெய்க்கு உதவி இயக்குனராக இருக்கும் யோகி பாபு மற்றும் உதவியாளர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு செல்கிறார் ஜெய். அங்கு பேய் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டில் குட்டி பையன் பப்புவின் கண்களுக்கு மட்டும், ஒரு குட்டி பெண் குழந்தை தெரிகிறது. மேலும், அந்த குழ...
ரசிகர்கள் சந்திப்பில் 2.0 ரிலீஸ் தேதியை உறுதிசெய்தார் – ரஜினிகாந்த்

ரசிகர்கள் சந்திப்பில் 2.0 ரிலீஸ் தேதியை உறுதிசெய்தார் – ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்து நடித்துள்ள எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடிக்க, எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான இசையமைத்துள்ளார். படம் முடிவடைந்து, டப்பிங் பணிகளும் முடிவடைந்த நிலையில், ‘2.0’ தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ஜனவரி 26 ஆம் தேதி ரிலிஸாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், அன்றைய தினமும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முடிவதற்கு காலதாமதமாகிறது என்று கூறப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று ரசிகர்களுடனான சந்திப்பின்போது பேசிய ரஜினிகாந்த், படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தினார். ஷங்கர் இய...
புதுமுகங்கள் நடிக்கும் மேலும் ஒரு வித்தியாசமான பேய் கதை “  பார்க்கத் தோனுதே “

புதுமுகங்கள் நடிக்கும் மேலும் ஒரு வித்தியாசமான பேய் கதை “ பார்க்கத் தோனுதே “

Latest News, Top Highlights
வாசவி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.k.மாதவன் தயாரிக்கும் படத்திற்கு பார்க்கத் தோனுதே என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ஹர்ஷா கதானாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சாரா நடிக்கிறார் மற்றும் பாண்டு, அப்பு இவர்களுடன் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஹர்ஷாவும் அவனது நண்பர்களும் காமெடி செய்து கொண்டு ஜாலியாக அந்த கிராமத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறவர்கள். அப்படிப் பட்ட ஹர்ஷா அதே கிராமத்தில் இருக்கும் பெண் சாரா மீது காதல் கொள்கிறான். இருவரும் காதலர்களாக வலம் வருகிறார்கள். கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் சாராவுக்கு பேய் பிடித்துக் கொள்கிறது.அவள் மீதிருந்த பேய் விலகியதா? காதலர்கள் ஒன்றினைந்தார்களா? என்பது தான் கதை. காதல் காமெடி ஆக்‌ஷன் திகில் கலந்த படமாக பார்க்கத் தோனுதே உருவாகி உள்ளது. படப்பிடிப்பு கிருஷ்ணகிரி கொடைக்கானல் ஒகனேக்கல் போன்ற இ...