Sunday, November 8
Shadow

Top Highlights

ஹன்சிகா எடுத்த திடீர் முடிவு ரசிகர்கள் கொண்ட்டாம்

ஹன்சிகா எடுத்த திடீர் முடிவு ரசிகர்கள் கொண்ட்டாம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஹன்சிகா, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார். இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் மட்டும் மிக மிக குறைவாக கிடைத்து வருகிறது. இதற்கு காரணம் தனது உடல் எடை அதிகரிப்பு தான் என்று நினைத்தவர், கஷ்ட்டப்பட்டு உடல் எடையை குறைத்து சிக்கென்ற உருவத்திற்கும் மாறிவிட்டார். இருந்தாலும் பட வாய்ப்புகள் மட்டும் வந்தபாடியில்லை. தற்போது புதுமுக ஹீரோயின்களின் எண்ட்ரியாலும் ஹன்சிகாவுக்கு வாய்ப்புகள் குறைந்து வருகிறதாம். தன்னுடன் நடித்த நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு தொந்தரவு செய்யவும் தொடங்கிவிட்டாராம். அப்படியும் ஹன்சிகாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம் அவர் கேட்கும் சம்பளம் தானாம். என்னதான் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் சம்பளத்தை மட்டும் அதிமாக கேட்டு வந்தாராம். இந்த நிலையில், தனது சம்பளத்தால் தான் தனக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்ல...
நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்

நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இதில் அதர்வா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். நயன்தாராவிற்கு ஜோடியாக சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தை டிமான்ட்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து விட்டது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
அடுத்த வருடம் அரவிந்த் சாமி எடுக்கும் புதிய முயற்சி

அடுத்த வருடம் அரவிந்த் சாமி எடுக்கும் புதிய முயற்சி

Latest News, Top Highlights
‘தளபதி’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். இப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து ‘ரோஜா’, ‘மறுபடியும்’, ‘பாம்பே’, ‘இந்திரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1999ம் ஆண்டு வெளியான ‘என் சுவாசக் காற்றே’ என்ற படத்திற்குப் பிறகு சிறிய இடைவெளி விட்டு, ‘சாசனம்’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படம் மூலம் ரீஎன்ட்ரீ ஆனார். ஜெயம் ரவியுடன் நடித்த ‘தனி ஒருவன்’ இவருக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான பெயரை பெற்றுத் தந்தது. தற்போது இவரது நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறா...
அருவியை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்

அருவியை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்

Latest News, Top Highlights
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘அருவி’. இப்படத்தில் அருவியாக அதிதிபாலன் நடித்துள்ளார். லக்‌ஷ்மி கோபாலசாமி, ஷிவதா நாயர், ஸ்வேதா சேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தை காஷ்மோரா, ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வெளியிட்டனர். இப்படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் அருவி படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அருவி படத்திற்கு குவிந்து வரும் பாராட்டுக்களால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
குமரியை தாக்கிய ஒக்கிப் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் ! எம்.எல்.ஏ., கருணாஸ் கோரிக்கை

குமரியை தாக்கிய ஒக்கிப் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் ! எம்.எல்.ஏ., கருணாஸ் கோரிக்கை

Latest News, Top Highlights
இந்த ஆண்டு தமிழ்நாட்டைத் தாக்கிய ஒக்கிப் புயல், கன்னியகுமரி மாவட்டத்தை நடுநடுங்க வைத்துவிட்டது. இருண்ட மாவட்டமாக குமரி மாறிவிட்டது. எங்குபார்த்தாலும் பெண்களின் அழுகை ஓலங்கள், பசுமையாக காட்சி அளித்த குமரி ஒக்கியால் உடைந்து கிடக்கிறது. மத்திய அரசின் முறையான முன்னறிவிப்பு இல்லாததன் காரணமாக புயலில் சிக்கிக் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இன்னமும் வீடுவந்து சேராத அவல நிலையில், நம் மீனவ மக்கள் வீதிக்கு வந்துநீதி கேட்கத் தொடங்கியுள்ளனர். அடுத்த நாட்டை மிரட்ட ராக்கெட் விட்டு அறிவியல் தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்குவதாகப் சொல்லிக் கொள்ளும் மத்திய அரசு, 36 மணிநேரத்திற்கு முன்பாகவே புயல் சீற்றங்களைக் கணிக்கும் தொழில்நுட்பங்களை வைத்திருக்கும் இந்திய அரசு, மிகப்பெரும் புயல் தமிழ்நாட்டைத்தாக்கப்போகிறது என குறைந்தபட்ச முன்னறிவிப்பை கூட செய்யாதது ஏன்? சிங்களக் கடற்படையும், இந்...
அருவி மிக சிறந்த படம் நான் அதை ஒன்னும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை – லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

அருவி மிக சிறந்த படம் நான் அதை ஒன்னும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை – லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

Latest News, Top Highlights
தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, இயக்குநர் பால்கி இயக்கியுள்ள இந்திப்படம் 'பேட்மேன்'. அக்‌ஷய்குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது. "தமிழர்கள் யாருமே தங்களுடைய கதைகளை இயக்குவதில்லை. இந்திப்பட இயக்குநருக்கு ஒரு தமிழரின் கதையைச் சொல்ல வேண்டும் என தெரிந்திருக்கிறது" என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். 'பேட்மேன்' குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் "தமிழகத்தில் திறமையான இயக்குநர்கள் கிண்டல் செய்தும், மற்றவர்களின் வேலையை சிறுமைப்படுத்தியும், அவதூறுபடுத்தியும் படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது, பாலிவுட்டில் நிஜ நாயகர்களைப் பற்றிய படங்கள் எடுக்கிறார்கள். நிஜ பேட்மேனை சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி" என்று ...
அஜித்துடன் நடிக்க விருப்பமில்லை பிரபல நடிகர் அதிரடி

அஜித்துடன் நடிக்க விருப்பமில்லை பிரபல நடிகர் அதிரடி

Latest News, Top Highlights
‘விவேகம்’ படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு ’விஸ்வாசம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ள நிலையில் ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது. அரசியல் கதை களத்தைக் கொண்ட இப்படத்தில் வில்லன் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நடிகர் அரவிந்த் சாமி அண்மையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், அஜித் படங்களில் வில்லன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்றதற்கு, “இல்லை” அரவிந்த்சாமி பதில் அளித்தார்....
ஆர்.கே.நகரை முடித்த வெங்கட்பிரபு கூட்டணி

ஆர்.கே.நகரை முடித்த வெங்கட்பிரபு கூட்டணி

Latest News, Top Highlights
வெங்கட் பிரபுவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஆர்.கே.நகர்’. சரவண ராஜன் இயக்கத்தில் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் வைபவ் நாயகனாகவும், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் ஜெய் ஜோடியாக நடித்த சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். இனிகோ பிரபாகர், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் ஆர்.கே.நகர் படத்தின் டிரைலர் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று, படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து ப...
ரசிகர்களை சூடேத்தும் ராதிகா ஆப்தேவின் புகைப்படங்கள்

ரசிகர்களை சூடேத்தும் ராதிகா ஆப்தேவின் புகைப்படங்கள்

Latest News, Top Highlights
`தோணி' படத்தின் மூலம்தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. பின்னர் கார்த்தி ஜோடியாக `ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்திலும் நடித்தார். பின்னர் ரஜினி ஜோடியாக `கபாலி' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். பாலிவுட்டில் அரை நிர்வாணமாக நடித்து இந்திய அளவில் பேசப்படும் நடிகையானார். அதிலும் பாலிவுட்டில் `பார்ச்டு' படத்தில் நடித்து சர்ச்சையிலும் சிக்கினார். படத்தின் கதைக்கு ஏற்ப நிர்வாணமாக நடிக்கவும் தயங்காத ராதிகா ஆப்தே நிர்வாண காட்சியில் நடித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போதும் அசராமல் பதில் கூறி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு போட்டோஷீட் ஒன்றையும் நடத்தியுள்ளார். அதில், படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ராதிகா ஆப்தேவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது....
நடிகை பாவானாவுக்கு எளிமையான முறையில் திருமணம்

நடிகை பாவானாவுக்கு எளிமையான முறையில் திருமணம்

Latest News, Top Highlights
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகை பாவனா. இவர் தனது நண்பரும், காதலருமான சினிமா பட தயாரிப்பாளர் நவீனை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 9-ஆம் தேதி கொச்சியில் எளிமையான முறையில் நடந்தது. அதனைத் தொடர்ந்து திருமணம் அக்டோபர் 27-ந் தேதி நடைபெறே இருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், வருகிற 22-ஆம் தேதி பாவனாவுக்கும், நவீனுக்கும் உறவினர்கள் மத்தியில் திருச்சூரில் திருமணம் நடக்கவுள்ளது. நிச்சயதார்த்தத்தைப் போலவே திருமணத்தயைும் எளிமையான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தனது திருமணம் பற்றி நடிகை பாவனா கூறியதாவது:- வருகிற டிசம்பர் 22-ந் தேதி எனது திருமணம் சொந்த ஊரான திருச்சூரில் நடைபெற உள்ளது. எனது திருமணத்தில் ஆடம்பரமோ, பிரமாண்டமோ இருக்காது. அதிக விலை உயர்ந்த நகைகளை திருமணத்தன்று அணியவும் எனக்க...