Sunday, November 8
Shadow

Top Highlights

வெற்றியின் சந்தோஷத்தில் ‘சென்னை2சிங்கப்பூர்’ குழு அருவியில் கொண்டாட்டம்

வெற்றியின் சந்தோஷத்தில் ‘சென்னை2சிங்கப்பூர்’ குழு அருவியில் கொண்டாட்டம்

Latest News, Top Highlights
ஒரு நல்ல நகைச்சுவை படத்தை சினிமா ரசிகர்கள் என்றுமே ஆதரவளித்து கொண்டாடியுள்ளனர். புது முக இயக்குனர் அப்பாஸ் அக்பரின் 'சென்னை2சிங்கப்பூர்' படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் வரவேற்பை தந்துள்ளனர். இது குறித்து இப்படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் பேசுகையில் , '' இப்படத்தின் ரிலீசுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இந்த காத்திருப்பு காலம் மிக கடினமாக இருந்தது. அதிலிருந்து மீண்டு வந்து, படத்தை ரிலீஸ் செய்து, இது போன்ற அருமையான வரவேற்பை பெருவதையே எங்கள் கனவாகவும் பிரார்த்தனையாகவும் இருந்தது. எங்களது இந்த பிரார்த்தனை தற்பொழுது பலித்துள்ளது. 'சென்னை2சிங்கப்பூர்' படம் 'ஹிட்' என வணிக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் எங்கள் படத்திற்கான திரைகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. எண்களின் உழைப்பிற்கும் , நாங்கள் சந்தித்...
சிவகார்த்திகேயன் ரசிகர்களை பின்பற்றினேன் – படத்தொகுப்பாளர் ரூபன்

சிவகார்த்திகேயன் ரசிகர்களை பின்பற்றினேன் – படத்தொகுப்பாளர் ரூபன்

Latest News, Top Highlights
வேலைக்காரன் படத்தின் எடிட்டிங் பணிகளை சிறப்பாக்க சிவகார்த்திகேயன் ரசிகர்களை பின்பற்ற ஆரம்பித்தேன் என்று படத்தொகுப்பாளர் ரூபன் தெரிவித்துள்ளார். 'வேலைக்காரன்' படத்தின் ப்ரோமோக்கள் மக்களிடையே பிரபலமடைந்ததற்கு, அதன் அற்புதமான படத்தொகுப்பு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது பலரை, இப்படத்தின் எடிட்டர் ரூபன் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தூண்டியுள்ளது. முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களுடன் பணிபுரியும் ரூபன் வெற்றிகள் மற்றும் பாராட்டுகளை பெற்றும் நிதானத்தோடும் தெளிவோடும் உள்ளார். சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தை பற்றி எடிட்டர் ரூபன் பேசுகையில், '' சிவகார்த்திகேயன் எனது நீண்ட நாள் நண்பர். 'ரெமோ' படத்திற்கு பிறகு அவருடன் இது எனக்கு இரண்டாவது படம். ஆனால் ஒரு எடிட்டராக அவரை நான் ஒரு ஸ்டாராக தான் பார்ப்பேன். இந்த கண்ணோட்டம் எனது பணியை மேலும் சிறப்பாக்க உதவுகிறது. அவரது ரசிகர்கள் அவர...
அருவிக்கு பெருகும் பாராட்டு: இருந்தும் வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர்

அருவிக்கு பெருகும் பாராட்டு: இருந்தும் வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர்

Latest News, Top Highlights
டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் படம் ‘அருவி’. கே.எஸ்.ரவிகுமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அதீதி பாலனின் நடிப்புக்கும், திருநங்கை அஞ்சலி வரதனின் கதாபாத்திரத்துக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதேநேரத்தில் படத்தின் இயக்குநக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களும், திரையுகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறாக பாராட்டுக்களை பெற்றுவரும் இந்த படம் குறித்து சில விமர்சனங்களும் வந்த வண்ணமாக இருக்கிறது. படத்தில் பிரபல நடிகர், இயக்குநர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை கிண்டல் செய்வது போல காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதுக...
சிம்புவுக்கு நாங்கள் ரொம்ப தொல்லை கொடுத்தோம்: ஒத்துக்கொண்ட பிரபல நடிகர்

சிம்புவுக்கு நாங்கள் ரொம்ப தொல்லை கொடுத்தோம்: ஒத்துக்கொண்ட பிரபல நடிகர்

Latest News, Top Highlights
நடிகராக இருந்த சிம்பு தற்போது ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறார். அவரது இசையில் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்தது குறித்து சந்தானம் கூறிய போது, இந்த படத்திற்கு இசையமைக்க சிம்புவிடம் கேட்கலாம் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் விடிவி கணேஷ் தான் கூறினார். பின்னர் இதுகுறித்து சிம்புவிடம் பேசினோம். முதலில் யோசித்த அவர், பின்னர் ஒத்துக் கொண்டார். பிறகு நாங்கள் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை. சில நாட்கள் கழித்து அவரே அழைத்து தனது டியூன்களை போட்டுக் காட்டினார். ஒரு சில சமயம் இரவு தூங்கும் போது கூட போன் செய்து பாடல்களை இசைத்துக் காட்டினார். அதேநேர்தில் நாங்களும் பாடல் ஸ்டேட்டஸ் குறித்து அறிய, அவரை இரவில் தொல்லை செய்தோம். மொத்தத்தில் அவரை நல்ல டார்ச்சர் செய்தே நல்ல பாடல்களை பெற்றுள்ளோம். அதுமட்டுமின்றி...
அட்லீ மீது கோவத்தில் உள்ள தளபதி ஏன் ?

அட்லீ மீது கோவத்தில் உள்ள தளபதி ஏன் ?

Latest News, Top Highlights
ராஜா ராணி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அட்லீ. அந்த படத்தை அடுத்து விஜய்யை வைத்து தெறி படத்தை எடுத்தார். தெறி ஹிட்டான பிறகு மீண்டும் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்து மெர்சல் படத்தை இயக்கினார் அட்லீ. படம் எடுத்தால் தல, தளபதியை வைத்து தான் என்று அடம்பிடித்தார் அட்லீ என்று கோலிவுட்டில் பேச்சாக கிடந்தது. மெர்சலை அடுத்து புதிய படம் எடுக்க தயாராகி வருகிறாராம் அட்லீ. 3 ஹீரோக்களை வைத்து படம் எடுக்கப் போகிறார் அட்லீ என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு ஹீரோவை வைத்து மெர்சல் படம் எடுத்தபோதே அட்லீ பட்ஜெட்டை எகிற வைத்துவிட்டார். அட்லீயால் தயாரிப்பாளரின் பாடு பாவம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் 3 ஹீரோக்கள் படமாம். தல, தளபதி நிச்சயம் இந்த படத்தில் சேர்ந்து நடிக்க மாட்டார்கள். ஒரு வேளை சென்டிமென்ட்டுக்காக விஜய்யை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்வாரோ அட்லீ என்ற கேள்வி எழுந்துள்ளது மெர்சல் படத்தில் தளபதி ச...
விக்னேஷ் சிவன் குடும்பத்தாரால் நயன்தாராவுக்கு வந்த சோதனை

விக்னேஷ் சிவன் குடும்பத்தாரால் நயன்தாராவுக்கு வந்த சோதனை

Latest News, Top Highlights
நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலிப்பது இந்த உலகமே அறிந்த விஷயம் இப்ப அதுவல்ல பிரச்னை விக்னேஷ் சிவன் அம்மாவுக்கும் நயன்தாராவுக்கு எப்போதும் ஒரே கலவரம் தானாம் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் மூன்றாவது காதலர் என்றாலும், தனக்கு நயன்தாரா முதல் காதலி என்பதால் அவரை உருக உருக காதலித்து வருகிறார் விக்னேஷ் சிவன். மீடியாக்களில் அரசல் புரசலாக வெளியே வந்தஇந்தக் காதல் சமாச்சாரத்துக்கு இருவருமே இதுவரை எந்த மறுப்பும் சொல்லவில்லை. அதோடு திரைப்பட விழாக்களிலும் ஒன்றாக காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள். ஆக இருவருமே காதலிப்பது உண்மை தான் என்று உறுதியான நிலையில் சமீபகாலமாக விக்னேஷ் சிவன், நயன்தாரா வீட்டிலேயே அவருடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வருவதாக கோடம்பாக்கத்தில் பரவலாகப் பேசிக்கொள்கிறார்கள். இளம் காதல் ஜோடிக்கு அந்தத் தனிமை இனிமையாக கழிந்து கொண்டிருந்த நிலையில் தற்போது பூஜை அறைக்குள் கரடி நுழை...
“அருவி” திரைப்படத்தில் நான் படம் முழுவதும் வருகிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் – திருநங்கை அஞ்சலி

“அருவி” திரைப்படத்தில் நான் படம் முழுவதும் வருகிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் – திருநங்கை அஞ்சலி

Latest News, Top Highlights
பொதுவாக திரைப்படத்தில் திருநங்கைகளை கேலி கதாபாத்திரமாக தான் வைத்திருப்பார்கள் , ஆனால் அருவி திரைப்படத்தில் நான் படம் முழுவதும் வருகிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் – திருநங்கை அஞ்சலி நானும் ( திருநங்கை அஞ்சலி) இன்னொரு திருநங்கையும் சென்றிருந்தோம் அருவி திரைப்படத்தின் நடிகர் – நடிகையர் தேர்வுக்கு சென்றிருந்தோம் . இருவரையும் நடித்து காட்ட சொன்னார்கள் நடித்து காட்டினோம். ஒரு மாதம் கழித்து நீங்கள் தான் இந்த படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளீர்கள் என்று சொன்னார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது அதே சமயம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒவ்வொரு மாதமாக என் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றது போல் எனக்கு பயிற்சி கொடுத்தார்கள். பட பிடிப்பு தளத்தில் நான் திருநங்கை என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரும் நட்பாக பழகினார்கள். சில காட்சிகளில் எனக்கு நடிப்பு வரவில்லை அதை இயக்குநர் ஒரு முறைக்கு பத்து முறை முயற்சி...
3 மணி நேரத்தில் 21,000 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை

3 மணி நேரத்தில் 21,000 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை

Latest News, Top Highlights
சென்னையில் நடைபெற்ற மீம்ஸ் மாரத்தான் போட்டியில் மூன்று மணி நேரத்தில் 21,619 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகங்களான பத்திரிகைகளில் வெளியாகும் கேலிசித்திரங்களுக்கு என சென்ற தலைமுறையில் தனி வாசகர் வட்டமும், ரசிகர் கூட்டமும் இருந்தது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கேலிசித்திரங்கள், மீம்ஸ்கள் என பெயர்மாற்றம் பெற்று உலா வருகிறது. இதற்கென தனிஅடையாளமும், ஏராளமான லைக்குகளும் கிடைத்து வருகிறது. இதனை ஆயிரக்கணக்கான இளைய தலைமுறையினர் உருவாக்கி, இணையப்புரட்சியையும், சமுதாயப் புரட்சியையும் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களை ஒன்றிணைத்து, சாதனையாளர்களாக மாற்றவேண்டும் என்ற எண்ணம் ‘த சைட் மீடியா ’ என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் லோகேஷ் என்பவருக்கு உருவானது. இவரின் அரிய முயற்சியால் ‘மீம்ஸ் மாரத்தான் ’ என்ற பெயரில் போட்டி ஒன்று சென்னையில் நடைபெற்றது. இது குறித்து இந்த போட்...
நாம் எடுக்கும் படம் முதலில் நமக்கு பிடிக்க வேண்டும் – இயக்குனர் ப்ரியதர்ஷன்

நாம் எடுக்கும் படம் முதலில் நமக்கு பிடிக்க வேண்டும் – இயக்குனர் ப்ரியதர்ஷன்

Latest News, Top Highlights
மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் ஆகியோர் நடித்திருக்கும் படம் ''நிமிர்''. இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கிறது. தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமித்திருக்கிறார்கள். இதுவரை நான் 4 படங்கள் தயாரித்திருக்கிறேன். எல்லாமே மலையாள படங்கள். முதன் முறையாக தமிழில் படம் தயாரித்திருக்கிறேன். அதுவும் 93 படங்கள் இயக்கிய லெஜண்ட் பிரியதர்ஷன் சார் இயக்கும் படம். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட். நிமிர் படமும் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா. என்னுடைய கேரியரில் நிமிர் மிக முக்கியமான படம். இந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். உதயநிதியுடன் ந...
வேலைக்காரன் படத்தில்  மூன்று கெட்டப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

வேலைக்காரன் படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ரசிககர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ள படம் இந்த படத்தை ஆர். டி. ராஜா மிகுந்த பொருள் செலவில் தயாரித்துள்ளார் இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார் இதனால் இந்த படத்துக்கு மேலும் ஒரு எதிர்ப்பார்ப்பு அதோடு முத்த முறையாக சிவகார்த்திகேயன் நயன்தாரா மற்றும் பகத் பாசில் ரோபோசங்கர் ஆர்ஜே பாலாஜி சினேகா சார்லி மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது வரும் வெள்ளிக்கிழமை இந்த படம் கிட்டத்தட்ட நானூறு திரையரங்குகள் மேல் வெளியாகியுள்ளது இதெல்லாம் விட இந்த படத்தின் முக்கிய விஷேஷம் என்னவென்றால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று கெட்டப்களில் நடித்துள்ளாராம் இதை இன்று பட குழுவே அறிவித்துள்ளது. இதனால் சிவா ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் இந்த படத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர் இந்த விஷயத்தால் ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் உ...