Friday, November 6
Shadow

Top Highlights

அடிதட்டு மக்களின் யதார்த்தத்தை காட்டும் படம் வேலைக்காரன் – கலை இயக்குநர் முத்துராஜ்

அடிதட்டு மக்களின் யதார்த்தத்தை காட்டும் படம் வேலைக்காரன் – கலை இயக்குநர் முத்துராஜ்

Latest News, Top Highlights
ஒரு படத்தின் பட்ஜெட்டை அப்படத்தின் கதை தான் முடிவு செய்யும். பெரிய பட்ஜெட் படமென்றால் அதன் கதையும் அவ்வளவு விரிவாகவும் பெரிதாகவும் இருக்கும். இது போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு கலை இயக்கம் தூணாக இருக்கும். அப்படியான ஒரு படம் தான் 'வேலைக்காரன்'. சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பஹத் பாசில் நடிப்பில் , மோகன் ராஜாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வேலைக்காரன்'. இப்படத்தை '24ஏ.எம். ஸ்டூடியோஸ்' ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இப்படத்திற்காக பிரத்யேகமாக போடப்பட்ட 'ஸ்லம்' எனப்படும் 'சேரி' வாழ்வியலை பிரதிபலிக்கும் மிகப்பெரிய செட் உருவான விடியோவை வெளியிட்டனர். இப்படத்தின் கலை இயக்குனர் முத்துராஜ் இந்த செட்டின் யதார்த்தத்தின் மூலமும் அளவுகோல் மூலமும் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார். இதுகுறித்து கலைஇயக்குனர் முத்துராஜ் பேசுகைய...
அதிக தொகைக்கு விலைபோன சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’

அதிக தொகைக்கு விலைபோன சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’

Latest News, Top Highlights
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்த்தின் திரையரங்கு உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் திரையரங்கு உரிமையை பரதன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஸ்வநாதன் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் கைப்பற்றியிருந்தது. அதை தொடர்ந்து டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமையை அமேசான் பிரைம் மற்றும் சன் தொலைக்காட்சி கைப்பற்றி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் சென...
`வேலைக்காரன்’ படத்துக்கு கேரளாவில் கிடைத்த வரவேற்பு

`வேலைக்காரன்’ படத்துக்கு கேரளாவில் கிடைத்த வரவேற்பு

Latest News, Top Highlights
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பகத் பாஷில், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் கேரள உரிமை அதிக விலைக்கு விற்பனையாகி உள்ளது. சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருக்கிறார். மலையாள நடிகர் பகத் பாஷில், பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் மலையாள வெளியீட்டு உரிமையை ஈ4 நிறுவனம் அதிக விலைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், பகத்பாசில், நயன்தாரா நடித்திரு...
`எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பை தொடங்கிய கவுதம் மேனன்

`எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பை தொடங்கிய கவுதம் மேனன்

Latest News, Top Highlights
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. தனுஷ் - மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில், கவுதம் மேனன் விக்ரமை வைத்து `துருவ நட்சத்திரம்' படத்தை இயக்கி வந்தார். தனுஷும் வடசென்னை படத்தில் பிசியாகி விட்டார். இந்நிலையில் சிறிய இடைவேளைக்கு பிறகு கவுதம் மீண்டும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. டிசம்பருக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ள கவுதம் மேனன் படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய...
ஜி.வி.பிரகாஷ் குரலில் காதல் தொனிக்கும் `எனக்கெனவே’ ஆல்பம்

ஜி.வி.பிரகாஷ் குரலில் காதல் தொனிக்கும் `எனக்கெனவே’ ஆல்பம்

Latest News, Top Highlights
தமிழில் இதுவரை எத்தனையோ ஆல்பம் பாடல்கள் வந்துள்ளது. அதில் பல புதுமையானவையாகவும் இருந்துள்ளது. அந்த வகையில் முற்றிலும் புதுமையாக திரைப்படத்துறை அனுபவம் கொண்ட பலர் மற்றும் ஜாம்பவான்கள் சிலர் இணைந்து `எனக்கெனவே' என்ற ரொமாண்டிக் வீடியோ ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த ரொமண்டிக் மியூசிகல் ஆல்பத்துக்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த `ப்ரூஸ் லீ' படத்தில் இடம்பெற்ற `நான்தான் கொப்பன் டா' என்ற சிங்கள் பாடலுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை இயக்குநர் எம்.ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் ஸ்ரீ இயக்கியுள்ளார். கவிஞர் முத்தமிழ் எழுதியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகம் கொண்ட ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ளார். கபாலி, பைரவா போன்ற படங்களில் பணியாற்றிய தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் பிரவீ...
விஜயை வைத்து படம் இயக்கியவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கும் ‘செயல்’

விஜயை வைத்து படம் இயக்கியவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கும் ‘செயல்’

Latest News, Top Highlights
சி.ஆர் கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘செயல்’. ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார். வி.இளையராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஆர்.நிர்மல் படத்தொகுப்பு செய்கிறார். லலிதானந்த், ஜீவன் மயில் ஆகியோர் பாடல்கள் எழுத, கனல் கண்ணன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். பாபா பாஸ்கர், ஜானி ஆகியோர் நடனம் அமைக்க, ஜான் பிரிட்டோ கலையை நிர்மாணிக்கிறார். ஏ.பி.ரவி தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரவி அப்புலு இயக்குகிறார். இவர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்...
வட அமெரிக்காவில் ரஜினி பேரவை ஏன்? என்ன லட்சியம்?

வட அமெரிக்காவில் ரஜினி பேரவை ஏன்? என்ன லட்சியம்?

Latest News, Top Highlights
டல்லாஸ்: தமிழ் நாட்டுக்கு வெளியே பிற மாநிலங்களில் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பது தெரிந்தது. முதன் முதலாக வட அமெரிக்காவில் ரஜினிகாந்த் பேரவை தொடங்கப்பட்டுள்ளது. அதென்ன அமெரிக்காவில் ரஜினி பேரவை? இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொணடு ஏன் அமெரிக்காவில் ரஜினிகாந்துக்கு பேரவை தொடங்கியுள்ளீர்கள் என்று கேட்டபோது, வரிசையாக காரணங்களை அடுக்கினார்கள். இதுகுறித்து டல்லாஸ் நகரைச் சேர்ந்த ரஜினி ரசிகரும், இந்த அமைப்பின் அமைப்பாளருமான இர தினகர் கூறுகையில், "வட அமெரிக்காவில் வசிக்கும் ரசிகர்களை ஒருங்கிணைத்து, ரஜினியின் அரசியலுக்கும் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பதே எங்கள் லட்சியம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு இன மக்களின் உதவியுடன் பல்வேறு திட்டங்களையும், நிறுவனங்களையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்கிறார். அது போல் ரஜினி தமிழக முதல்வர் ஆன...
தமிழ் சினிமாவில் இன்னொரு கோலி சோடா தான் “வாண்டு” சமுத்திரகனி

தமிழ் சினிமாவில் இன்னொரு கோலி சோடா தான் “வாண்டு” சமுத்திரகனி

Latest News, Top Highlights
எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் வாசன் ஷாஜி,டத்தோ முனியாண்டி இணைந்து தயாரிக்கும் படம் "வாண்டு", புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் தெறி வில்லன் சாய் தீனா, தடயறத்தாக்க வில்லன் மகா காந்தி, மெட்ராஸ் புகழ் ரமா, ஆகியோர் நடிக்க வாசன் ஷாஜி இயக்கத்தில், ரமேஷ் & V.மகேந்திரன் ஒளிப்பதிவில், A .R.நேசன் இசையில், பிரியன் படத்தொகுப்பில், கவிஞர் மோகன்ராஜன் வரிகளில், உருவாகி இருக்கு படம் வாண்டு இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னை சாலிக்ராமம்த்தில் உள்ள பிரசாத் பிரிவியூ ததிரையரங்கில் மிக பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர், இயக்குனருமான சமுத்திரகனி மற்றும் காமெடி நடிகர், தயாரிப்பாளருமான கஞ்சா கருப்பு கலந்து கொண்டனர். இதில் சமுத்திரகனி பேசுகையில் சினிமா பின்னணி இல்லாமல் ஒரு படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். ஏன் என்...
அரவிந்த்சாமியின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

அரவிந்த்சாமியின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படக்குழுவில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. ஹர்ஷினி மூவிஸ் சார்பில் எம்.ஹர்சினி தயாரித்து வரும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் அரவிந்த் சாமி, அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நிகிஷா படேல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் `தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிகட...
நயன்தாரா இடத்தை பிடித்த சமந்தா

நயன்தாரா இடத்தை பிடித்த சமந்தா

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிக்கவிருந்த படத்தில் சமந்தா ஒப்பந்தமாகி இருக்கிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான படம் `யு-டர்ன்'. பவன் குமார் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ராதிகா சேத்தன், திலீப் ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது தமிழிலும் ரீமேக் செய்யப்படுகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஷ்ரத்தா நடித்த கதாபாத்திரத்தில் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடிக்க இருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறும், விமர்சங்களை கருத்தில் கொண்டும் கதையின் திரைக்கதை மற்றும் முடிவில் மாற்றம் கொண்டுவர கவன்குமார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. குற்றப் பின்னணியை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இ...