Friday, September 11
Shadow

விற்பனை பிரதிநிதிகளின் உலகத்தை கலகலப்பாக பேசும் ‘கோல்ட் கால்’ – செப்டம்பர் 18 முதல் திரையரங்குகளில்!

விற்பனை பிரதிநிதிகளின் உலகத்தை கலகலப்பாக பேசும் ‘கோல்ட் கால்’ – செப்டம்பர் 18 முதல் திரையரங்குகளில்!

 

தமிழ் திரையுலகில் புதிய முகங்கள் மற்றும் புதிய கதைக்களங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், விற்பனை பிரதிநிதிகளின் அன்றாட வாழ்க்கை, நட்பு, காதல் மற்றும் அவர்கள் சந்திக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை கலகலப்பான பொழுதுபோக்கு படமாக சொல்லவிருக்கும் திரைப்படம் ‘கோல்ட் கால்’.

புதுமுக நடிகர்களான சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ் எஸ்.ஏ. மற்றும் கிருஷ்ணா விஜய் சந்திரன் ஆகியோர் கதையின் முக்கிய நாயகர்களாக நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் தம்பிதுரை இயக்கியுள்ள ‘கோல்ட் கால்’ திரைப்படத்தில் வி. ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.என். சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை சுரேஷ் ஆறுமுகம் மேற்கொண்டுள்ளார்.

வாக் த்ரோ என்டர்டெயின்மென்ட் (Walkthrough Entertainment) நிறுவனம் சார்பில் கேசவ மூர்த்தி இப்படத்தை தயாரித்துள்ளார். ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் இந்த திரைப்படத்தை வெளியிடுகிறார்.

படம் குறித்து இயக்குநர் தம்பிதுரை கூறுகையில், “நமது சமூகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கை பலருக்கும் பெரிதாக அறிமுகமில்லாத ஒன்று. அவர்களின் வேலைச் சூழல், நட்பு, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அன்றாடம் சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளோம்.

நான்கு விற்பனை பிரதிநிதிகளான நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் காதல், மோதல் மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை இரண்டு மணி நேர பொழுதுபோக்கு அனுபவமாக சொல்ல முயற்சித்துள்ளோம். குறிப்பாக இன்றைய ஜென் Z தலைமுறையினரும் இந்த கதையுடன் எளிதாக தொடர்புபடுத்திக் கொண்டு ரசிப்பார்கள்” என்றார்.

ஃபீல் குட் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘கோல்ட் கால்’, வேலை வாழ்க்கை மற்றும் நட்பு வட்டத்தில் நடக்கும் இயல்பான சம்பவங்களை நகைச்சுவையுடன் திரையில் கொண்டு வரவுள்ளது.

ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதுமுகங்களின் புதிய முயற்சியாக உருவாகியுள்ள ‘கோல்ட் கால்’ திரைப்படம் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Cold Call Brings the Lives of Sales Representatives to the Big Screen; Releases September 18

 

Tamil cinema has always welcomed fresh talent and unique storytelling with open arms. Joining this tradition is Cold Call, an upcoming feel-good entertainer that explores the lives, friendships, relationships and everyday experiences of sales representatives through a fun and humorous narrative.

Featuring newcomers Sithu Mooli Mani, Sri Vaishnav, Santhosh S.A. and Krishna Vijay Chandran as the lead protagonists, Cold Call is all set for a worldwide theatrical release on September 18.

Directed by Thambidurai, the film also stars V. Srikanth, Balaji Rajasekar, Amitha Ranganatha, Nisha Hegde and Keerthana in important roles.

The cinematography for the film has been handled by G.N. Saravanan, while Pranav Giridharan has composed the music. Editing is by Suresh Aarumugam.

Produced by Kesava Moorthy under the banner of Walkthrough Entertainment, Cold Call will be released by Jeneesh of Action Reaction.

Speaking about the film, director Thambidurai said that Cold Call focuses on a section of society whose everyday lives and professional experiences are rarely explored on screen.

“There are sales representatives all around us, and they have their own unique struggles, experiences and interesting stories. We have developed the screenplay by presenting incidents from their lives with comedy and feel-good entertainment. The film follows four friends who work as sales representatives, and the story explores the love, conflicts, friendship and humorous situations that arise in their lives,” he said.

The director further added that the film has been designed as a complete two-hour entertainment package and believes that the younger Gen Z audience will also easily connect with its characters and situations.

Positioned as a light-hearted feel-good entertainer, Cold Call promises to bring the realities of work life, friendship and relationships together in an engaging and humorous manner.

The teaser of the film, which was released earlier, received a positive response from audiences on social media and generated curiosity about the project. The newly released poster has now further grabbed the attention of movie lovers.

With a fresh cast and a relatable premise, Cold Call is gearing up to entertain audiences worldwide when it hits theatres on September 18.