Monday, April 20
Shadow

தனுஷ் அடுத்த இரண்டு பட இயக்குனர்கள் யார் தெரியுமா?

மாரி 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் தனுஷ் அடுத்த இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களைத் தயாரிக்கிறது சத்யஜோதி ஃபிலிம்ஸ். துரை செந்தில்குமார், ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் ஆகியோர் இந்தப் படங்களை இயக்குகின்றனர்.

விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ், அதையடுத்து அந்த நிறுவனத்துக்கே மீண்டும் படம் செய்வதாகச் சொன்ன அஜித், அதன்படி நடித்தும் கொடுத்தார். அதுவே ‘விஸ்வாசம்’.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய படங்களில் ‘விவேகம்’ தோல்வியைத் தழுவியது. மூன்று படங்களையும் இயக்கிய சிவாவுக்கே மீண்டும் ‘விஸ்வாசம்’ படத்தின் வாய்ப்பை வழங்கினார் அஜித்.

தற்போது படம் முடிவடைந்து, பொங்கல் வெளியீடாக வருகிற 10-ம் தேதியன்று ரிலீசாகிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு சத்யஜோதி ஃபிலிம்ஸ் இரண்டு படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்த இரண்டு படங்களிலும் தனுஷ் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷின் 34-வது படத்தை, ‘கொடி’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

இதன்பிறகு தனுஷ் 35-வது படத்தின் வேலைகள் ஆரம்பமாகின்றன. இந்தப் படத்தை ராம்குமார் இயக்குகிறார். சமீபத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘ராட்சசன்’ படத்தின் இயக்குநர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. #dhanush #sathyajothifilms #ramkumar #duraisenthil