
மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ போஸ்டர்! விளம்பரத்தில் புதிய முயற்சி எடுத்த படக்குழு!
வழக்கமான விளம்பரங்களைத் தாண்டி, சுற்றுலாத் தலத்தில் போஸ்டரைப் பறக்கவிட்டு கவனம் ஈர்த்த ‘துரோகம் பழகு’ படக்குழு!
திரைப்படங்களின் விளம்பரத்திற்காகப் புதுமையான முயற்சிகளை மேற்கொள்வது தற்போது அதிகரித்து வரும் நிலையில், ‘துரோகம் பழகு’ படக்குழு கன்னியாகுமரி மாவட்டத்தில் வித்தியாசமான விளம்பர முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஆசியாவின் புகழ்பெற்ற தொட்டிப்பாலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் படத்தின் போஸ்டரைப் பறக்கவிட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில், தக்க்ஷன் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தை இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ளார். சமூக அக்கறை கொண்ட கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், அதன் விளம்பர முயற்சிகள் மூலமாகவும் கவனம் பெற்று வருகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே வெளியான நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கல்லூரிகளில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தி இளைஞர்களிடையே படத்தை அறிமுகப்படுத்தும் பணிகளிலும் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மாத்தூர் தொட்டிப்பாலத்தைத் தேர்வு செய்து, அங்கு படத்தின் போஸ்டரைப் பறக்கவிட்டுள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, அப்பகுதி மக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் படத்தின் மீதான கவனத்தைத் திருப்பும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்தில் G. M. குமார், வனிதா விஜயகுமார், லொள்ளு சபா ஜீவா, வாழை ஜானகி, அமுதவாணன், அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு, திவாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜா மற்றும் பாலா இணைந்து இசையமைத்துள்ளனர்.
தொடர்ந்து வித்தியாசமான விளம்பர முயற்சிகளை மேற்கொண்டு வரும் ‘துரோகம் பழகு’ படக்குழு, அடுத்தகட்டமாகப் படத்தின் டிரெய்லரை வெளியிடத் தயாராகி வருகிறது. மேலும், படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே தனது விளம்பர உத்திகளால் கவனம் ஈர்த்து வரும் ‘துரோகம் பழகு’, அடுத்தடுத்த அறிவிப்புகள் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

‘Dhurōgam Pazhagu’ Poster Takes Flight at Mathur Aqueduct! Film Team Adopts a Unique Promotional Strategy
Moving beyond conventional publicity methods, the team of ‘Dhurōgam Pazhagu’ grabs attention with an innovative promotional campaign at a popular tourist destination in Kanyakumari.
In an attempt to stand out from conventional film promotions, the team of ‘Dhurōgam Pazhagu’ has come up with a unique promotional initiative in Kanyakumari district. The filmmakers flew the film’s poster at the famous Mathur Aqueduct, one of Asia’s well-known aqueducts, drawing the attention of locals and tourists alike.
Produced by C. Beulah Magizh under the banner of Magizh Productions, the film stars Takshan Vijay in the lead role and is directed by Zion Raja. Centred on a socially relevant theme, ‘Dhurōgam Pazhagu’ has been generating attention through its innovative promotional activities since the early stages of its campaign.

The film’s first-look poster was unveiled earlier, followed by the release of its posters by prominent personalities, including the Chief Minister of Puducherry. The team has also been conducting promotional events at colleges to introduce the film to younger audiences and build awareness among students.
Continuing its efforts to explore unconventional publicity strategies, the team chose the Mathur Aqueduct, one of the prominent tourist attractions in Kanyakumari district, as the venue for its latest promotional activity. Surrounded by scenic natural beauty, the location provided a distinctive backdrop for the film’s poster campaign, helping the movie attract attention from visitors and the local community.
The film features an ensemble cast comprising G. M. Kumar, Vanitha Vijayakumar, Lollu Sabha Jeeva, Vazhakku Jaanaki, Amuthavanan, Appukutty, Ganja Karuppu and Divakar, among others. Raja and Bala have jointly composed the music, while Zion Raja has helmed the project as director.
Having consistently explored different promotional approaches, the team is now gearing up to release the film’s trailer. An official announcement regarding the theatrical release date is also expected soon.
With its unconventional promotional campaigns generating interest even before its theatrical release, ‘Dhurōgam Pazhagu’ is looking to build further anticipation among audiences through its upcoming trailer and release announcements.
