Tuesday, October 6
Shadow

‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்

‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல…

என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்

வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார் நடிகர் ரிஷிகாந்த். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் அவர் ஏற்றுள்ள ‘கார்த்தி’ கதாபாத்திரத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ரிஷிகாந்த் கூறும்போது, “ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் ஆதரவும் நான் எதிர்பார்க்காத ஒரு பெரிய ஆசீர்வாதம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும்தான் நாங்கள் அனைவரும் இணைந்து இப்படத்தை உருவாக்கினோம்.

ஒரு படத்திற்கு பாராட்டுகளை எதிர்பார்க்கும் அதே நேரத்தில், விமர்சனங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, வழக்கமான பாணியிலிருந்து விலகி பரிசோதனை முயற்சிகளுடன் உருவாகும் திரைப்படங்களுக்கு இது மிகவும் முக்கியமானது.

‘டோரதி’ படத்தைப் பொறுத்தவரை, கார்த்திக் சுப்புராஜின் திரைக்கதை ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்துவத்துடன் உருவாக்கியிருக்கிறது. அதுதான் பார்வையாளர்கள் கதாபாத்திரங்களுடன் எளிதாகத் தங்களை இணைத்துக் கொள்ள முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அனைத்து தரப்பினரும் இப்படத்தை விரும்பி வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

குறிப்பாக, பெண்கள் பலரும் என்னுடைய கதாபாத்திரத்தைப் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்து வருவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு நடிகராக அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே பார்க்கிறேன்” என்றார்.

தனது சக நடிகர்களின் பங்களிப்பு குறித்துப் பேசிய ரிஷிகாந்த், “இந்த வெற்றி என்னுடையது மட்டுமல்ல. படத்தில் சனந்த் ஏற்றிருந்த கதாபாத்திரமும், அவரது சிறப்பான நடிப்பும் என்னுடைய கதாபாத்திரத்தை மேலும் வலுப்படுத்தியது. ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்தை உயர்த்தும் வகையில் படத்தின் திரைக்கதை அமைந்திருக்கிறது.

கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம்தான் இந்தக் கதையின் மையப்புள்ளி. தீராத வலி, பாசம், ஏக்கம் என பல உணர்வுகளை அவரது கதாபாத்திரம் ஆழமாகப் பேசுகிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் கொடுத்திருக்கும் நடிப்புக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளுக்கும் அவர் முழுமையாகத் தகுதியானவர்.

எனவே, எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பாராட்டையும் இந்தப் படத்திற்காக உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்பையும் குறிப்பிட்ட ரிஷிகாந்த், “இசைஞானி இளையராஜாவின் இசை ‘டோரதி’ படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. அதேபோல், ஒளிப்பதிவாளர் எஸ். திருநாவுக்கரசு அவர்களின் பங்களிப்பு படத்தின் முதுகெலும்பாகவே அமைந்துள்ளது. அவர் உருவாக்கியிருக்கும் காட்சிகள் கதையின் உணர்வை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்குப் பின்னால் கேமராவுக்கு முன்னாலும் பின்னாலும் பலரது உழைப்பு இருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘டோரதி’ எனக்கு ஒரு திரைப்படம் என்பதைத் தாண்டிய அனுபவமாக அமைந்துள்ளது. இந்தப் படம் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது என்னுடைய வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அனுபவம் மட்டுமல்ல; படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களின் கண்ணோட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்றார்.

கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கும் இப்படம், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கணேஷ் சிவா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சரவணன் சந்திரன் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார். பவன் நரேந்திரா நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

‘Dorothy’ Has Left a Deep Impact on Me – Actor Rishikanth

Actors who take on diverse and challenging roles and bring them to life with conviction are the ones who eventually carve a distinct identity for themselves. Actor Rishikanth is one such performer who has been consistently choosing challenging characters and delivering memorable performances on screen.

His recent film Modha Raathiri received a positive response from audiences, and he is now earning appreciation for his performance as Karthi in director Karthik Subbaraj’s Dorothy. Both audiences and critics have been praising his portrayal in the film.

Speaking about the response to the film, Rishikanth said, “The love and support I have received from audiences is a blessing that I never expected. We made this film with the hope and belief that audiences across the world would connect with and appreciate it.

“At the same time, whenever we expect appreciation for a film, we must also be prepared to face criticism. This is particularly true of films that attempt something different and experimental.

“However, Karthik Subbaraj has made the film even more engaging with his exceptional writing. Every character has been written with a distinct identity. I believe that is one of the major reasons audiences were able to immediately connect with the characters and the story.

“I am extremely happy that people from all sections of the audience have embraced the film. In particular, the appreciation and wishes I have been receiving from women have made me especially happy.”

Speaking about his co-stars and the technical team, Rishikanth added, “To be honest, this success does not belong to me alone. Sananth’s character and his wonderful performance elevated my character as well. Keerthy Suresh’s character is at the heart of this film. Her character speaks deeply about unresolved pain, affection and longing.

“She completely deserves all the appreciation she is receiving. Therefore, I dedicate every appreciation I have received to the entire team behind this film.

“Maestro Ilaiyaraaja’s music is one of the biggest strengths of Dorothy. Cinematographer S. Thirunavukkarasu’s contribution has also been the backbone of the film. His visual treatment has played a crucial role in bringing the story and its emotions alive on screen.

“I sincerely thank the producers, distributors, friends from the film industry, audiences and critics who have contributed to the success of this film.

“Dorothy is more than just a film for me. It has left a deep impact on me. It has been an experience that has the potential to change one’s life, and I believe it can also change the perspective of the audiences who watch it.”

Written and directed by Karthik Subbaraj, Dorothy is produced by Jyoti Deshpande, Guneet Monga Kapoor and Achin Jain. The film features Keerthy Suresh, Sananth and Rishikanth in the lead roles.

Presented by Jio Studios and Sikhya Entertainment, the film is produced by Sikhya Entertainment and Dhamam Films. Maestro Ilaiyaraaja has composed the music, while S. Thirunavukkarasu has handled the cinematography and Ganesh Siva has edited the film. Saravanan Chandran has penned the additional screenplay, while Pavan Narendra serves as the executive producer.