‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்
‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல…
என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்
வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார் நடிகர் ரிஷிகாந்த். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் அவர் ஏற்றுள்ள ‘கார்த்தி’ கதாபாத்திரத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ரிஷிகாந்த் கூறும்போது, “ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் ஆதரவும் நான் எதிர்பார்க்காத ஒரு பெரிய ஆசீர்வாதம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும்தான் நாங்கள் அனைவரும் இணைந்து இப்படத...





