Tuesday, July 21
Shadow

உயரம் தாண்டிய வீரர்… இப்போது ரசிகர் மனங்களையும் தாண்டுகிறார்! “ஹபீபி” மூலம் கவனம் ஈர்க்கும் ஈசா

உயரம் தாண்டிய வீரர்… இப்போது ரசிகர் மனங்களையும் தாண்டுகிறார்! “ஹபீபி” மூலம் கவனம் ஈர்க்கும் ஈசா

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் பல புதிய முகங்கள் அறிமுகமாகின்றன. ஆனால் சிலரின் பயணம் மட்டும் அவர்களை தனித்துவமாக அடையாளப்படுத்துகிறது. அப்படிப்பட்ட ஒரு புதிய வரவாக கவனம் ஈர்த்திருக்கிறார் “ஹபீபி” திரைப்படத்தின் நாயகன் ஈசா.

மதுரையைச் சேர்ந்த ஈசா, சினிமாவுக்கு நேரடியாக வந்தவர் அல்ல. விளையாட்டு மைதானங்களில் வெற்றிக் கொடிகளை நாட்டியவர். மாநில அளவிலான உயரம் தாண்டுதல் போட்டிகளில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற அவர், கல்லூரி காலத்தில் உயரம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை குவித்துள்ளார். இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டிகளிலும் தொடர்ந்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

விளையாட்டில் பெற்ற ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை வாழ்க்கையின் அடுத்த கட்டமான சினிமாவிற்கும் கொண்டு வந்தார் ஈசா. நடிகர் அமீர் நடித்த “உயிர் தமிழுக்கு” திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம், திரைத்துறையின் பல்வேறு அம்சங்களை அவருக்கு நெருக்கமாக அறிமுகப்படுத்தியது.

இதற்கிடையில் சட்டக்கல்வியையும் தொடர்ந்து பயின்று வரும் ஈசாவுக்கு, கதாநாயகனாக தனது திறமையை நிரூபிக்கும் வாய்ப்பாக அமைந்தது இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய “ஹபீபி” திரைப்படம். இந்தப் படத்தில் மூன்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், அதற்காக உடல் எடையை பல கட்டங்களில் மாற்றி அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். கதையின் தேவைக்காக சுமார் 20 கிலோ வரை உடல் எடையை அதிகரித்து, பின்னர் மீண்டும் குறைத்து நடித்திருப்பது அவரது தொழில்முறை ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.

“ஹபீபி” திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளைப் பார்த்த பல முன்னணி இயக்குநர்களும், திரைப்பட ஆளுமைகளும் ஈசாவின் இயல்பான நடிப்பு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் மற்றும் கதாபாத்திரத்திற்காக எடுத்துள்ள முயற்சியை பாராட்டியுள்ளனர்.

தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள “ஹபீபி” திரைப்படம் மூலம் பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ஈசா, தனது முதல் படத்திலேயே கவனிக்கப்படும் இளம் நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

விளையாட்டு வீரராக தொடங்கிய பயணம், உதவி இயக்குநராக வளர்ந்த அனுபவம், சட்ட மாணவரின் பார்வை மற்றும் நடிகனாக சாதிக்க வேண்டும் என்ற உறுதி ஆகிய அனைத்தையும் தன்னுள் இணைத்துக்கொண்டு தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதிக்கத் தொடங்கியிருக்கிறார் ஈசா. “ஹபீபி” அவருக்கான ஒரு அறிமுகம் மட்டுமல்ல, அடுத்த கட்ட பயணத்திற்கான வலுவான தொடக்கமாகவும் அமைந்துள்ளது.

From the Athletics Arena to the Silver Screen: Eesa Wins Hearts with “Habibi”

The Tamil film industry welcomes many new faces every year, but only a few stand out because of their unique journeys. One such promising newcomer is Eesa, the lead actor of the recently released film Habibi.

Hailing from Madurai, Eesa did not take the conventional route into cinema. Before stepping into films, he made a name for himself in the world of athletics. A two-time Tamil Nadu State High Jump Champion, he also secured several inter-collegiate gold medals in High Jump and Triple Jump during his college years. His consistent performances even earned him places in the finals of national-level university competitions.

The discipline, dedication, and perseverance he developed as an athlete became the foundation for his journey into the film industry. Before making his acting debut, Eesa worked as an assistant director on Uyir Tamilukku, starring Ameer and directed by Adam Bawa. This experience gave him valuable insights into the art and craft of filmmaking.

Alongside his growing interest in cinema, Eesa is also pursuing a law degree at Vels University, Chennai. His ability to balance academics, sports, and creative aspirations reflects his determination and commitment.

A major turning point in his career came with director Meera Kathiravan’s Habibi, which marked his debut as a lead actor. In the film, Eesa portrays three distinctly different characters, a challenge that demanded significant physical transformation. Demonstrating remarkable dedication, he altered his body weight multiple times for the role, gaining nearly 20 kilograms and later reducing it again to suit the character requirements.

Special preview screenings of Habibi earned appreciation from several prominent filmmakers and industry personalities, who praised Eesa’s natural screen presence, emotional depth, and commitment to his craft.

Now running in theatres, Habibi has also received a positive response from audiences, helping Eesa establish himself as a talent to watch in Tamil cinema. His debut has not only introduced him as a new actor but has also positioned him among the promising young performers of the industry.

Combining the discipline of an athlete, the learning experience of an assistant director, the perspective of a law student, and the determination of a dreamer, Eesa has embarked on a promising cinematic journey. With Habibi, he has taken a confident first step toward carving a place for himself in Tamil cinema.