
‘ஜனநாயகன்’ இன்று முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் – விஜய்யின் திரைப்பயணத்தின் உணர்வுப்பூர்வமான இறுதி அத்தியாயம்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது
சென்னை, ஆகஸ்ட் 21, 2026:
தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 21) முதல் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. H. வினோத் இயக்கத்தில், விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகிறது.
‘ஜனநாயகன்’ ஒரு அரசியல் ஆக்ஷன் திரைப்படம் என்பதைக் கடந்து, விஜய்யின் நீண்ட திரைப்பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்துள்ளது. அரசியல் களத்தில் அவர் தனது பயணத்தைத் தொடங்கிய பின்னர் வெளியாகும் திரைப்படம் என்பதுடன், பெரிய திரையில் வெளியாகும் அவரது இறுதித் திரைப்படம் என்ற எதிர்பார்ப்பும் இப்படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
படத்தில் ‘வெற்றி கொண்டான்’ என்ற முன்னாள் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அவர், அதிகாரத்தையும் அரசியல் செல்வாக்கையும் எதிர்த்து நிற்கும் சூழலில் கதை நகர்கிறது. ஒரு தனி மனிதனின் போராட்டம், மக்களுக்கான குரலாக மாறும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நாசர், நரேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
விஜய்யின் ரசிகர்களைக் கவரும் வகையில் அவரது பிரபலமான திரை பாணி, உடல்மொழி மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பல அம்சங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இதனால், நீண்ட காலமாக விஜய்யின் திரைப்பயணத்தைப் பின்தொடரும் ரசிகர்களுக்கு ‘ஜனநாயகன்’ ஒரு திரைப்பட அனுபவத்தைத் தாண்டி, ஒரு முக்கியமான நினைவாகவும் அமையக்கூடும்.
இதுகுறித்து ZEE5 தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் பிரிவுகளின் பிசினஸ் ஹெட் லாய்ட் C. சேவியர் கூறுகையில், “ஜனநாயகன் திரைப்படம் விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது. அவரது பல தசாப்த கால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களுக்கு நிச்சயம் உணர்வுப்பூர்வமான அனுபவத்தை வழங்கும். ஆக்ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் சமூகக் கருத்துகளை ஒருங்கிணைத்துள்ள இந்தப் படத்தை ZEE5 தளத்தில் வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படத்தை வெளியிடுவதன் மூலம், தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் இந்த முக்கியமான திரைப்படத்தை காணும் வாய்ப்பைப் பெறுகின்றனர்” என்றார்.
திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு தற்போது டிஜிட்டல் தளத்தில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’, விஜய்யின் ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் பின்னணியிலான ஆக்ஷன் திரைப்படங்களை விரும்பும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இன்று (ஆகஸ்ட் 21) முதல் ZEE5 தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் காணலாம்.

‘Jana Nayagan’ Begins Streaming on ZEE5 from August 21 – Vijay’s Emotional Final Big-Screen Chapter
The much-awaited political action drama is now streaming in Tamil, Telugu, Malayalam and Kannada
Chennai, August 21, 2026:
One of the most anticipated films among Tamil cinema audiences, Jana Nayagan, is now streaming on ZEE5 from today, August 21. Directed by H. Vinoth and headlined by Vijay, the political action drama is available in Tamil, Telugu, Malayalam and Kannada, bringing the much-awaited film to audiences across South India.
Beyond being an action-packed political drama, Jana Nayagan holds a special place in Vijay’s cinematic journey. The film marks one of the most significant milestones in his career, arriving after his entry into politics and being positioned as his final theatrical release. This has added an emotional dimension to the film for millions of fans who have followed Vijay’s journey on the big screen for decades.
Vijay plays Vetri Kondaan, an honest former police officer who raises his voice against corruption and injustice. As he takes on powerful forces, his personal battle gradually transforms into a larger fight for the people. The film blends action, emotion, family relationships and socio-political themes, presenting the protagonist as a voice of hope and justice.
Directed by H. Vinoth, Jana Nayagan features a strong ensemble cast including Bobby Deol, Pooja Hegde, Mamitha Baiju, Prakash Raj, Gautham Vasudev Menon, Priyamani, Nassar and Naren.
The film also incorporates several elements that Vijay’s fans have come to associate with his screen presence, including his signature mannerisms, charismatic style and memorable moments. For audiences who have followed his career across generations, Jana Nayagan offers an opportunity to revisit and celebrate the star’s unique legacy.
At its heart, the film tells the story of an ordinary man who chooses to stand up and speak out for what is right. This combination of mass entertainment, action, emotion and social commentary gives Jana Nayagan an added significance as a film that marks an important chapter in Vijay’s cinematic journey.
Speaking about the digital premiere, Lloyd C. Xavier, Business Head – Tamil, Telugu and Malayalam, ZEE5, said, “Jana Nayagan holds immense emotional and cultural significance for audiences, particularly the millions of fans who have followed Vijay’s journey over the decades. The film represents an important moment in Tamil cinema and offers audiences an opportunity to celebrate the star, the actor and the legacy he leaves behind. With action, emotion, family values and social themes at its core, the film offers a grand and emotionally resonant experience for audiences across generations. We are delighted to bring this much-awaited film to ZEE5 in Tamil, Telugu, Malayalam and Kannada and give audiences the opportunity to revisit and celebrate this significant cinematic event.”
Following its theatrical run, Jana Nayagan is now available for audiences to watch from the comfort of their homes. With its combination of political action, emotional drama, family elements and Vijay’s much-loved screen presence, the film is expected to be a major attraction for his fans and movie lovers across South India.
‘Jana Nayagan’ is now streaming exclusively on ZEE5 from August 21 in Tamil, Telugu, Malayalam and Kannada.
