
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது வெளிவர உள்ள திரைப்படம்”அண்ணாதுரை”.
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஜுவல் மேரி அறிமுகமாகிறார்.இவர்களுடன் ராதிகா மற்றும் ராதா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.இப்படத்தை G.சீனிவாசன் என்பவர் இயக்கியுள்ளார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா கலந்து கொண்டு பேசியதாவது , முன்னணி நடிகர் ஒருவரின் படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது.மேலும் அவர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதில்லை வந்தாலும் பாதி நேர படப்பிடிப்புக்கு மேல் இருப்பதில்லை
.இவரிடம் கேட்டால் பாதி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது அதைவைத்து வெளியிடுங்கள் என்று சொல்கிறார் அவர்.இவரை படம் எடுத்தால் தயாரிப்பாளர் தெருவில் தான் நிற்கவேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.
