Wednesday, September 16
Shadow

காதல், கொலை, ஆவி… திகில் திருப்பங்களால் மிரளவைக்கும் ‘கருப்பட்டி’ – ஐந்தாவது படைப்புடன் இயக்குநர் பிரபு ராமானுஜம்!

காதல், கொலை, ஆவி… திகில் திருப்பங்களால் மிரளவைக்கும் ‘கருப்பட்டி’ – ஐந்தாவது படைப்புடன் இயக்குநர் பிரபு ராமானுஜம்!

 

காதல், மர்மம், திகில் மற்றும் ஆக்சன் என அனைத்து அம்சங்களையும் ஒருங்கே இணைத்து உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘கருப்பட்டி’. எதிர்பாராத திருப்பங்களும், பரபரப்பான திரைக்கதையும் கொண்ட இந்த திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கிராமத்து பின்னணியில் அமைந்துள்ள இப்படத்தின் கதை, உணர்வுப்பூர்வமான காதலுடன் தொடங்கி, அதிர்ச்சியூட்டும் மர்மங்களின் வழியாக திகில் பயணமாக மாறுகிறது. கொளத்தூர் கிராமத்தில் தாயுடன் வசித்து வரும் கருப்பட்டி என்ற இளைஞன், அதே ஊரில் தனது தந்தையுடன் வாழும் பவானியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் திருமணமான சில நாட்களிலேயே பவானி மர்மமான முறையில் உயிரிழக்கிறார்.

அவரது மரணத்திற்குப் பிறகு, பவானி ஆவியாக தோன்றி கிராம மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்கின்றன. மனைவியின் மரணத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையை கண்டறிய கருப்பட்டி தொடங்கும் தேடல், எதிர்பாராத அதிர்ச்சிகளும் திகிலூட்டும் சம்பவங்களும் நிறைந்த பயணமாக மாறுகிறது. இறுதியில் பவானியின் மரணத்திற்கு யார் காரணம்? அது ஒரு கொலையா? அல்லது வேறு ஏதேனும் மர்மமா? என்ற கேள்விகளுக்கான விடையை பரபரப்பான திரைக்கதையுடன் படம் சொல்லவுள்ளது.

மோனிதா மூவீஸ் நிறுவனம் சார்பில் பொழிச்சை சி. ராஜ்குமார் தயாரிக்கும் இப்படத்தில் விஜயராஜ் கதாநாயகனாக கருப்பட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்து நடித்துள்ளதுடன், ஹரிணி தா, கராத்தே ராஜா, ரஞ்சன், ஜிப்சி ராஜ்குமார், கிளி ராமச்சந்திரன், சித்திரகுப்தன், ரமேஷ், கலைவாணி, ரஷீத் சத்யராஜ், செண்பகவள்ளி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவை செந்தில் மாறன் மற்றும் கவிநாதன் இணைந்து கவனித்துள்ளனர். சேலம், மேட்டூர், செஞ்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இயற்கை எழில் மிக்க பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இசையமைப்புடன் எடிட்டிங் பொறுப்பையும் டி.எஸ். திவாகர் ஏற்றுள்ளார். பாடல்களை ஹிஜாஸ் அகமது எழுதியுள்ளார். நடன அமைப்பை ராம் முருகேஷ், சண்டைக் காட்சிகளை ரமேஷ் வடிவமைத்துள்ளனர்.

‘காதல்பதிவு’, ‘நந்திவரம்’, ‘சினிமா கனவுகள்’, ‘கொலை தூரம்’ ஆகிய படங்களை இயக்கிய பிரபு ராமானுஜம், தனது ஐந்தாவது படைப்பாக ‘கருப்பட்டி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனத்தையும் அவரே எழுதியுள்ளார்.

கிராமத்து வாழ்க்கை, மர்மக் கொலை, ஆவி திகில் மற்றும் அதிரடி திருப்பங்கள் என ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அம்சங்களுடன் உருவாகி வரும் ‘கருப்பட்டி’, திகில் திரைப்பட ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Love Turns Into Marriage, Marriage Ends in Murder: Supernatural Action Thriller Karuppatti Promises Chills and Mystery

A gripping blend of romance, mystery, supernatural horror and action, Karuppatti is shaping up to be an intriguing rural thriller. The film, currently in its final stages of production, promises an edge-of-the-seat cinematic experience packed with unexpected twists and suspense.

Set against the backdrop of a village, the story begins with a heartfelt romance before taking a shocking turn into the world of mystery and the supernatural. Karuppatti, played by Vijayaraj, lives with his mother in the village of Kolathur. He falls in love with Bhavani, who lives with her father in the same village, and the two eventually get married.

However, their happiness is short-lived as Bhavani dies under mysterious circumstances just days after the wedding. Soon after her death, her spirit begins haunting and terrifying the villagers. Determined to uncover the truth, Karuppatti embarks on a dangerous journey to find out who was responsible for his wife’s death. As he digs deeper, he encounters a series of shocking and terrifying incidents that lead him into an intense web of mystery, suspense and supernatural horror.

Produced by Pozhichai C. Rajkumar under the Monitha Movies banner, the film features Vijayaraj in the titular role alongside Samandhu. The supporting cast includes Harini Tha, Karate Raja, Ranjan, Gypsy Rajkumar, Kili Ramachandran, Chithiraguptan, Ramesh, Kalaivani, Rasheed Sathyaraj, Senbagavalli, and several others in pivotal roles.

The cinematography has been jointly handled by Senthil Maran and Kavinathan, with filming taking place across the picturesque locations of Salem, Mettur, Gingee, and the surrounding regions.

T. S. Divakar has composed the music and also serves as the film’s editor, while the lyrics have been penned by Hijaz Ahmed. Choreography is by Ram Murugesh, and the action sequences have been designed by Ramesh.

The film is written and directed by Prabhu Ramanujam, who has previously helmed Kadhal Padhivu, Nandivaram, Cinema Kanavugal, and Kolai Dooram. Karuppatti marks his fifth directorial venture, with the filmmaker also handling the story, screenplay and dialogues.

Blending rural drama with supernatural horror, mystery and action, Karuppatti is expected to offer audiences a thrilling cinematic experience and has already generated curiosity among fans of the genre.