
விஜய்யின் மெர்சல் வெளியாக இன்னும் எட்டு நாட்கள் உள்ள நிலையில் படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக ஆகிக்கொண்டே போகிறது ஒரு இணையலதளம் மெர்சல் எத்தனை நாளில்நூறு கோடி வசூல் செய்யும் என்று ஒரு வாக்கெடுப்பு நடத்தியதில் மூன்று நாட்களில் நூறு கோடி வசூலில் சாதனை செய்யும் என்று என்பது சதவித மக்கள் வாக்களித்தனர். அதோடு கவிஞர் விவேக் தளபதியை பற்றி சொன்ன விஷயம் மேலும் எதேர்பார்ப்புகள் அதிகமாக ஆகிக்கொண்டே போகிறது.

இளையதளபதி விஜய்யின் மெர்சல் பட எதிர்ப்பார்ப்பு அதிகமாகிக் கொண்டு வருகிறது. படத்தை அழகாக அட்லீ எடுத்து முடித்தாலும் தயாரிப்பு குழு சரியாக பிளான் செய்து படத்தை புரொமோட் செய்து வருகின்றனர்.
இந்த படத்தில் இடம்பெறும் மொத்தம் 4 பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி செம ஹிட். இப்போது பார்த்தால் படத்தில் போனஸாக மேலும் ஒரு பாடலை ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க பாடலாசிரியல் விவேக் பாடல் எழுதியுள்ளார்.
தடையின் தடயம் உடைய உருக
அழிக்க நெனச்சா, ரெண்டா வருவானே
என்று இந்த பாடல் தொடங்குவதாக விவேக் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
