Tuesday, October 27
Shadow

இசையமைப்பாளர் எஸ். டி. பர்மன் பிறந்த நாள் இன்று

ரசிகர்களால் “தாதா” என அன்புடன் அழைக்கப்பட்ட சச்சின் தேவ் பர்மன், திரிபுரா மன்னரின் நேரடி வாரிசு ஆவார்.

இவர், இந்தியிலும் வங்காளத்திலும் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். லதா மங்க்கேசுகர், முகமது ரபி, கிஷோர் குமார், ஆசா போசுலே, கீதா தத்து போன்ற பாடகர்கள் பர்மனின் இசை அமைப்பில் பாடியுள்ளார்கள். எஸ். டி. பர்மன், 14 இந்தி திரைப்படங்களிலும் 13 வங்காள மொழித் திரைப்படங்களிலும் பாடல்கள் தாமே பாடியுள்ளார். இவரது மகன் ராகுல் தேவ் பர்மன் பாலிவுட் திரைப்படங்களின் பின்னணி இசையமைப்பாளர் ஆவார்.

அக்டோபர் 1, 1906 அன்று, அன்றைய பிரித்தானிய இந்தியாவின் வங்காளத்தில் (தற்போது பங்களாதேஷ்), கோமில்லா என்னும் இடத்தில் பர்மன் பிறந்தார். எஸ். டி. பர்மனின் தந்தையார், திரிபுராவின் ராச குடும்பத்தைச் சார்ந்த நபாட்விப்சந்திர தேவ் பர்மன் மற்றும் தாயார் மணிப்பூர் மன்னர் குடும்பத்தைச் சார்ந்த நிருபமாதேவி ஆவர். அவர்களின் 9 குழந்தைகளில் 5 ஆண்பிள்ளைகளுள் கடைசியாகப் பிறந்தவர் சச்சின் தேவ் பர்மன் ஆவார். இவரது இரண்டாவது அகவையில் தாயார் காலமானார்.

எஸ். டி. பர்மன், கோமில்லா விக்டோரியா கல்லூயில் இளங்கலைபட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டத்தையும் முடித்துள்ளார்.. அதோடு, 1925 முதல் 1930 ஆம் ஆண்டு வரை இசைக்கலைஞர் கே.சி டேவிடம் முறையான இசைப்பயிற்சி பெற்றார். அதன் பின்னர் 1932 ஆம் ஆண்டு, பீசமதேவ் சட்டோபதயா என்பவரின் அறிவுறுத்தலின்படி கைஃபா பாதால் கான் (சாரங்கி கலைஞர்), அகர்தலாவில் உள்ள உஸ்தாத் அல்லாவுதீன் கான், உஸ்தாத் பாதல் கான் ஆகியோரின் கீழும் பயிற்சிகள் மேற்கொண்டார்.

1975ஆம் வருடம் அக்டோபர் மாதம் 31 ஆம் நாள், இந்தியாவின் மகாராட்டிர மாநிலம், மும்பையில் தனது 69 வது அகவையில் காலமானார்.