Monday, November 9
Shadow

முன்னணி தொழிலதிபர்களை கவுரவித்த ‘நியூஸ் 7 தமிழ்’ – “விருதுகள் வெற்றிக்கான ஊக்கமாக அமைய வேண்டும்” : GKM தமிழ்குமரன் வாழ்த்துரை

முன்னணி தொழிலதிபர்களை கவுரவித்த ‘நியூஸ் 7 தமிழ்’ – “விருதுகள் வெற்றிக்கான ஊக்கமாக அமைய வேண்டும்” : GKM தமிழ்குமரன் வாழ்த்துரை

சென்னை :

தொழில் துறையில் சாதனை படைத்தவர்களின் உழைப்பையும், புதிய தலைமுறை தொழில்முனைவோரின் முயற்சிகளையும் கவுரவிக்கும் நோக்கில் ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி சார்பில் Business Excellence Awards 2026 விருது வழங்கும் விழா, சென்னை ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்த முன்னணி தொழிலதிபர்கள், வளர்ந்து வரும் தொழில்முனைவோர் மற்றும் தங்கள் துறையில் தனித்துவமான வெற்றியைப் பதிவு செய்த ஆளுமைகள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, அவர்களின் பங்களிப்பு பாராட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் மாண்புமிகு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் GKM தமிழ்குமரன், வேலம்மாள் குழுமத்தின் எம்.வி.எம். வேல்மோகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.

மேலும், பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி, ஆச்சி மசாலா நிறுவனத்தின் ஐசக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தொழிலதிபர்களும் விருதுகளைப் பெற்றனர்.

விருதுகளை வழங்கிய பின்னர் பேசிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் GKM தமிழ்குமரன், “ஒரு மனிதரின் உழைப்புக்கும் சாதனைக்கும் கிடைக்கும் அங்கீகாரம்தான் விருது. இதுபோன்ற விருதுகள் வெற்றி பெற்றவர்களை மட்டுமல்ல, அவர்களைப் பார்த்து வளர விரும்பும் அடுத்த தலைமுறையினருக்கும் மிகப்பெரிய ஊக்கமாக அமைகின்றன. தொழில் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் இப்படிப்பட்ட பாராட்டு விழாக்கள் அவசியம். இந்த விருது விழா ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற வேண்டும். விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று தெரிவித்தார்.

சாதனைகளைப் பாராட்டி, புதிய வெற்றிகளுக்கான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் விதைக்கும் நிகழ்வாக அமைந்த இந்த Business Excellence Awards 2026 விழா, தொழில்துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

News7 Tamil Business Excellence Awards 2026 Honours Industry Leaders; GKM Tamilkumaran Says Recognition Inspires Greater Success

Chennai: News7 Tamil hosted its Business Excellence Awards 2026 at the Hyatt Hotel in Chennai, celebrating outstanding achievements of leading entrepreneurs, emerging business leaders, and professionals who have made remarkable contributions across various sectors.

The prestigious event brought together prominent personalities from business, politics, and the film industry to honour individuals whose dedication, innovation, and entrepreneurial spirit have made a significant impact in their respective fields.

Among the distinguished guests who presented the awards were Hon’ble Speaker J.C.D. Prabhakar, Hon’ble Minister for Fisheries Srinath, Tamil Film Producers Council President GKM Tamilkumaran, and Velammal Group Chairman M.V.M. Velmohan. They felicitated the award recipients and applauded their contributions to industry and society.

 

The ceremony also recognised several notable personalities, including acclaimed Tamil film producer Kannan Ravi and Aachi Masala founder Isaac, along with many other accomplished entrepreneurs and professionals.

Speaking after presenting the awards, GKM Tamilkumaran congratulated the winners and highlighted the importance of recognising excellence.

“Every award is a recognition of hard work, perseverance, and achievement. Such honours not only encourage those who receive them but also inspire the next generation of entrepreneurs to dream bigger and strive for excellence. Recognition like this motivates individuals to scale greater heights in life and business. I hope this awards ceremony continues to be held every year. My heartfelt congratulations to all the award winners,” he said.

The News7 Tamil Business Excellence Awards 2026 concluded on a celebratory note, recognising excellence across industries while inspiring entrepreneurs to continue their pursuit of innovation, leadership, and success.