Friday, July 31
Shadow

‘அவெஞ்சர்ஸ்’ சாதனையை முறியடித்த ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ டிரெய்லர் – 24 மணி நேரத்தில் புதிய உலகச் சாதனை!

‘அவெஞ்சர்ஸ்’ சாதனையை முறியடித்த ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ டிரெய்லர் – 24 மணி நேரத்தில் புதிய உலகச் சாதனை!

சென்னை, ஜூலை 31:

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘Spider-Man: Brand New Day’ திரைப்படம் வெளியான முதல் நாளே  உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான வெறும் 24 மணி நேரத்திலேயே இந்த திரைப்படம், இதுவரை இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்து புதிய வரலாற்றை படைத்துள்ளது.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) முக்கிய கதாபாத்திரமான ஸ்பைடர் மேன், மீண்டும் ரசிகர்களை கவரும் வகையில் திரைக்கு வர உள்ள நிலையில், இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே சுமார் 72 கோடி (720 மில்லியன்) பார்வைகளை பெற்று உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்பட டிரெய்லராக மாறியுள்ளது.

இதற்கு முன்பு ‘Avengers: Endgame’ திரைப்படம்முதல் 24 மணி நேரத்தில் 63 கோடி (630 மில்லியன்) பார்வைகள் பெற்று சாதனை படைத்திருந்தது. தற்போது அந்த சாதனையை ‘Spider-Man: Brand New Day’ முறியடித்திருப்பது மார்வெல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படத்தின் காட்சியமைப்பு, அதிரடி சண்டைக் காட்சிகள், உணர்ச்சி மிக்க தருணங்கள் மற்றும் புதிய கதைக்களம் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சமூக வலைத்தளங்களில் டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே பல்வேறு நாடுகளில் #SpiderManBrandNewDay என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி, ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்புகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த சாதனை, ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தின் உலகளாவிய வரவேற்பையும், மார்வெல் திரைப்படங்களுக்கான ரசிகர்களின் பேராதரவையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக திரைப்பட விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

திரைப்படம் வெளியாகும் முன்பே டிரெய்லர் உருவாக்கிய இந்த அபார வரவேற்பு, ‘Spider-Man: Brand New Day’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் புதிய சாதனைகளை படைக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் தற்போது ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

‘Spider-Man: Brand New Day’ Trailer Breaks Avengers: Endgame Record with Historic 24-Hour Viewership

Chennai, July 31:

The first show of the highly anticipated Hollywood superhero film Spider-Man: Brand New Day has created history by becoming the most-viewed movie within its first 24 hours of release, surpassing the long-standing record set by Avengers: Endgame.

The trailer reportedly garnered an astonishing 720 million views (72 crore) worldwide in just one day, making it the biggest launch in cinematic history. The overwhelming response reflects the immense global popularity of Spider-Man and the continued dominance of Marvel’s superhero franchise.

Previously, Avengers: Endgame held the record with approximately 630 million views (63 crore) during its first 24 hours after release. With its latest achievement, Spider-Man: Brand New Day has officially overtaken that milestone, setting a new benchmark for movie trailer launches.

Fans across the globe have praised the trailer for its spectacular visuals, high-octane action sequences, emotional storytelling, and intriguing new direction for the beloved web-slinger. Within hours of its release, #SpiderManBrandNewDay began trending across multiple social media platforms, with fans expressing excitement and sharing their reactions.

Industry observers believe the trailer’s record-breaking performance highlights the enduring appeal of the Spider-Man character and Marvel Studios’ ability to generate unprecedented anticipation for its films.

With such an extraordinary response even before its theatrical release, Spider-Man: Brand New Day is now widely expected to emerge as one of the biggest global box-office releases of the year, further cementing Spider-Man’s status as one of the world’s most celebrated superhero franchises.