
முதல் பாடலிலேயே ரசிகர்களின் மனதை கைப்பற்றிய “விஸ்வநாத் & சன்ஸ்” – ‘பட்டாம்பூச்சி’ உருவாக்கும் இசை மாயம்!
ஒரு திரைப்படத்தின் வெற்றிப் பயணம் திரைக்கு வருவதற்கு முன்பே தொடங்கிவிடும். அந்த வகையில், தற்போது ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்திருக்கும் படமாக உருவெடுத்துள்ளது சூர்யா – வெங்கி அட்லூரி கூட்டணியின் “விஸ்வநாத் & சன்ஸ்”.
2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் இசை வெளியீடான “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” பாடல், வெளியாகிய சில நாட்களிலேயே இசை ரசிகர்களின் பிளேலிஸ்டில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. முதல் முறை கேட்கும்போதே மனதை வருடும் இனிமையான மெட்டும், காதலின் புத்துணர்வை உணர்த்தும் இசை அமைப்பும் இந்தப் பாடலை தனித்துவமாக்கியுள்ளன.
மெலடிகளின் மன்னன் என்று ரசிகர்களால் போற்றப்படும் ஜி.வி. பிரகாஷ் குமார், மீண்டும் ஒருமுறை தனது இசை முத்திரையை பதித்துள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் அவர் அமைத்துள்ள இந்த வெற்றிக் கூட்டணி, பாடலின் வரவேற்பின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படத்தின் முழு இசை ஆல்பத்திற்கான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
பாடகி சுபலக்ஷினியின் குரல் பாடலுக்கு உயிரூட்டியுள்ள நிலையில், அருண்ராஜா காமராஜ் எழுதிய வரிகள் காதலின் அப்பாவித்தனம், மகிழ்ச்சி மற்றும் உணர்வுகளை எளிமையாகவும் அழகாகவும் வெளிப்படுத்துகின்றன. இதனால் ‘பட்டாம்பூச்சி’ வெறும் பாடலாக இல்லாமல், கேட்பவர்களின் மனதில் நீண்ட நேரம் தங்கும் அனுபவமாக மாறியுள்ளது.
அறிவிக்கப்பட்ட நாள் முதல் ரசிகர்களிடமும் திரையுலக வட்டாரங்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “விஸ்வநாத் & சன்ஸ்”, இதுவரை வெளியிட்ட ஒவ்வொரு அப்டேட்டின் மூலமும் அந்த எதிர்பார்ப்பை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. குறிப்பாக, முதல் பாடலின் வெற்றி படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
குடும்ப உறவுகள், உணர்வுகள், காதல், மகிழ்ச்சி என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அம்சங்களுடன் உருவாகி வரும் இந்த திரைப்படம், 2026ஆம் ஆண்டின் மிகப்பெரிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமையும் என திரையுலக வட்டாரங்கள் கணிக்கின்றன.
சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை, வெற்றித் தயாரிப்பாளர்களான சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரித்துள்ளனர். வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற வெற்றிப்படங்களை வழங்கிய அவர்களின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையரங்கு கொண்டாட்டமாக அமையும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம், குடும்பங்களைக் கொண்டாடும் உணர்வுபூர்வமான திரையனுபவமாக உருவாகி வருகிறது.
“பட்டாம்பூச்சி” தற்போது இசை ரசிகர்களின் இதயங்களில் பறக்கத் தொடங்கியுள்ளது; ஆகஸ்ட் 14ஆம் தேதி “விஸ்வநாத் & சன்ஸ்” திரையரங்குகளில் எந்தளவு உயரத்தில் பறக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

“Pattampoochi” Wins Hearts: ‘Viswanath & Sons’ Creates a Musical Buzz Even Before Release!
The journey of a successful film often begins long before it reaches the big screen. In that regard, Viswanath & Sons, starring Suriya and directed by Venky Atluri, has already emerged as one of the most talked-about upcoming releases among movie lovers.
Scheduled for a grand worldwide theatrical release on August 14, 2026, the film has taken a strong first step with its debut single, “Pattampoochi / Neno Butterfly.” Within days of its release, the song has become a favorite among music enthusiasts, winning appreciation for its soothing melody and refreshing romantic vibe. Its instant appeal has positioned it as one of the most promising musical releases of the season.
Known for delivering memorable melodies, G.V. Prakash Kumar has once again showcased his musical brilliance. His successful collaboration with director Venky Atluri continues to strike the right chord with audiences, significantly raising expectations for the film’s complete soundtrack.
Singer Subalakshini breathes life into the composition with her soulful rendition, while lyricist Arunraja Kamaraj beautifully captures the innocence, excitement, and emotions of love through heartfelt lyrics. Together, they have transformed “Pattampoochi” into more than just a song—it has become an experience that lingers in the listener’s mind.
Ever since its announcement, Viswanath & Sons has generated tremendous excitement among fans and industry circles alike. Every promotional update released so far has become a major talking point, and the overwhelming response to the first single has further strengthened confidence in the project.
Packed with family emotions, heartfelt moments, romance, and entertainment, the film is expected to appeal to audiences across generations. Industry insiders believe it has all the ingredients to become one of the biggest family entertainers of 2026.
Produced by Suryadevara Naga Vamsi and Sai Soujanya under the banners of Sithara Entertainments and Fortune Four Cinemas, the film carries the legacy of producers known for successful ventures such as Vaathi and Lucky Baskhar. Their latest collaboration is expected to deliver a grand theatrical celebration for audiences.
Alongside Suriya, the film features Mamitha Baiju, Radhika Sarathkumar, and Raveena Tandon in pivotal roles.
As “Pattampoochi” continues to soar in the hearts of music lovers, fans are eagerly waiting to see how high Viswanath & Sons will fly when it arrives in theatres worldwide on August 14, 2026.
